Wednesday, 24 August 2016

மாணவ-மாணவிகளின் வருகையை பதிவு செய்ய ‘பயோ-மெட்ரிக்’ கருவி பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் அறிமுகம்: மாணவ-மாணவிகளின் வருகையை பதிவு செய்ய ‘பயோ-மெட்ரிக்’ கருவி சோதனை அடிப்படையில் 4 பள்ளிகளில் செயல்பாட்டில் உள்ளது
மாணவ-மாணவிகளின் வருகையை பதிவு செய்ய ‘பயோ-மெட்ரிக்’ கருவி பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதிலும் பள்ளிக்கல்வி துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது மாணவ-மாணவிகளின் வருகையை பதிவு செய்ய ‘பயோ-மெட்ரிக்’ கருவியை முதல் முறையாக செயல்படுத்த உள்ளனர்.
இதுகுறித்த அறிவிப்பை நேற்று சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்தார். ‘பயோ-மெட்ரிக்’ கருவிக்காக ரூ.45 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்று தெரிவித்தார். சோதனை அடிப்படையில்... அதன் முன்னோட்டமாக சோதனை அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பள்ளிகளில் ‘பயோ-மெட்ரிக்’ கருவியை கொண்டு வருகை பதிவேடு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சோதனையை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக மாநில திட்ட இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மாணவ-மாணவிகளின் வருகையை உறுதி செய்யும் வகையில் தற்போதுள்ள காலகட்டத்துக்கு ஏற்ப ‘பயோ- மெட்ரிக்’ கருவியை பொருத்த இருக்கிறோம். அதற்கு முன்னோட்டமாக பெரம்பலூர் மாவட்டம், பேரளியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, வடக்கு மாதேவி, காடூர், வரகூர் ஆகிய இடங்களில் உள்ள உயர்நிலைப்பள்ளிகள் என 4 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் இதனை செயல்பாட்டில் வைத்து இருக்கிறோம். வருகை பதிவு ஆசிரியர்களும் இதே ‘பயோ-மெட்ரிக்’கில் தான் தங்களுடைய வருகையை பதிவு செய்ய வேண்டும். இது மாணவ-மாணவிகளின் வருகையை உறுதி செய்வதற்காகவும், குறிப்பாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வந்து தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்கும் இந்த முயற்சியை மேற்கொள்ள இருக்கிறோம். இனி வரக்கூடிய நாட்களில் அனைத்து பள்ளிகளிலும் கொண்டு வர முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments: