Wednesday, 24 August 2016

4 ஆண்டு பி.ஏ.,பி.எட்., பி.எஸ்சி.,பி.எட். பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு முதல் கல்வியியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படும் | சென்னை, கோவையில் அரசு கலைக் கல்லூரி | சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

4 ஆண்டு பி.எட். படிப்பு அறிமுகம் சென்னை, கோவையில் அரசு கலைக் கல்லூரி சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை பெரும்பாக்கம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் தலா ரூ.8 கோடி செலவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 4 ஆண்டு பி.எட். படிப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று பேரவை விதி 110-ன் கீழ் உயர்கல்வித் துறை தொடர்பான சில அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அவர் கூறியதாவது: பொறியியல் மாணவர்களை இந்திய பொறியியல் பணி (Indian Engineering Service) தேர்வில் தேர்ச்சி பெறச் செய்யும் வகையில் சென்னை, தருமபுரி, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
அரசு பொறியியல் கல்லூரி களில் படிக்கும் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் 15 நாட்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெறுவதற்காக வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பப்படுவர். இந்த திட்டம் ரூ.1.50 கோடி செலவில் செயல்படுத்தப்படும். உலக அளவில் புகழ்பெற்ற உயர்கல்வி ஆசிரியர்களின் சிறப்பு விரிவுரைகள், நிபுணர்களின் உரைகளைக் கேட்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.75 லட்சம் செலவில் சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் காணொலி காட்சி ஒலி ஒளியக மையம் நிறுவப்படும். மதுரையில் உள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் பொருள் சேதமில்லா தரச்சோதனை பயிற்சி மையம் அமைக்கப்படும். இங்கு ஆண்டுதோறும் 100 பேருக்கு செய்முறை பயிற்சி அளிக்கப்படும். கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் நலிவடைந்த மாணவர்கள் மற்றும் மலைவாழ் மாணவர்கள் 40 முதல் 50 கி.மீ. வரை பயணம் செய்து கோவை அல்லது நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் உயர்கல்வி பயில வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்கும் பொருட்டு மேட்டுப்பாளையத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ.8 கோடியே 29 லட்சம் செலவில் இந்த ஆண்டு தொடங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டம் பெரும் பாக்கத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் திட்டத்தின்கீழ் 20,376 குடியிருப்புகள் கட்டப் பட்டுள்ளன. இப்பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பிளஸ் 2 வகுப்பில் 4,269 மாணவர்கள் படிக்கின்றனர். எனவே, பெரும்பாக்கத்தில் ரூ.8 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்த ஆண்டு தொடங்கப்படும். அனைத்து பல்கலைக்கழ கங்கள் மற்றும் இணைப்புக் கல்லூரி கள் மேகக் கணினியத்தில் (கிளவுட் கம்ப்யூட்டிங்) இணைக்கப்பட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு பல விதமான சேவைகள் வழங்கப்படும். இந்த மையம், அண்ணா பல்கலைக் கழகத்தில் ரூ.160 கோடி செலவில் நிறுவப்படும். மோட்டார் வாகன மையம் எரிபொருள் செலவு மற்றும் கரியமில வாயு வெளியீட்டை குறைப்பதற்கான ஆராய்ச்சிப் பணி களை மேற்கொள்ள மோட்டார் வாகன தொழில் நிறுவனங்களுடன் இணைந்து அண்ணா பல்கலைக் கழகத்தில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் மோட்டார் வாகன தொழில்நுட்ப மையம் ஏற்படுத்தப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் 5 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட மிகப்பெரிய கூட்ட அரங்கம் ரூ.50 கோடி செலவில் கட்டப்படும். மேலும், இங்கு ரூ.50 கோடி மதிப்பீட்டில் சர்வதேச ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் பயிற்சி மையம் நிறுவப்படும். 4 ஆண்டு பி.எட். படிப்பு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் கல்விச் சேவையை மாணவர்கள் எளிதில் பெறும் பொருட்டு விழுப்புரம், நீலகிரி மாவட்டங்களில் ரூ.12 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மண்டல மையங்கள் நிறுவப் படும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) அமைப் பானது, ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.ஏ.,பி.எட்., பி.எஸ்சி.,பி.எட். பாடப்பிரிவுகள் உட்பட 15 புதிய ஆசிரியர் கல்வியியல் படிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் 4 ஆண்டு பி.ஏ.,பி.எட்., பி.எஸ்சி.,பி.எட். பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு முதல் கல்வியியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படும். பல்நோக்கு மருத்துவமனை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் சிறந்த மருத்து வர்கள், பணியாளர்களுடன் கூடிய ஒரு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ரூ.4 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். மேலும், மாணவர்களுக்காக ரூ.6 கோடியே 75 லட்சம் செலவில் விளை யாட்டு உள்அரங்கம், நூலகம் கட்டப்படும். ரூ.5 கோடி செலவில் சூரிய மின்ஒளி, நிலத்தடி நீர் சேமிப்பு திட்டம், கம்பியில்லா தொடர்பு வசதி (வை-ஃபை) ஏற்படுத்தித் தரப்படும். ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் விடுதி மேம்பாட்டுப் பணிகள் மேற் கொள்ளப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

No comments:

TRB