Saturday, 13 August 2016

மாநில செய்தி நிலைய நூலகத்தில் உள்ள தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு உள்பட 50 ஆயிரம் நூல்கள், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்தார்.

மாநில செய்தி நிலைய நூலகத்தில் உள்ள தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு உள்பட 50 ஆயிரம் நூல்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும் சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
மாநில செய்தி நிலைய நூலகத்தில் உள்ள தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு உள்பட 50 ஆயிரம் நூல்கள், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்தார். உயர் தொழில்நுட்பம் தமிழக சட்டசபையில் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு ஆகிய துறைகளுக்கான மானியக்கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்துப் பேசிய அந்தத் துறைகளின் அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு:-
சென்னை அரசு மைய அச்சகத்தில் செயலாக்கப்படும் அச்சுப் பணிகளை உயர் தொழில்நுட்பம் கொண்ட சிறப்புமிக்க வழியில் புத்தகமாக வடிவமைக்க, புத்தகம் கட்டும் எந்திரம் ரூ.60 லட்சம் செலவில் நிறுவப்படும். டிஜிட்டல் எண்கள் அரசு கிளை அச்சகம் திருச்சியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அச்சு எந்திரத்தில் அச்சு பிரதிகளின் பக்கங்களில் எண்கள் போடுவதற்கு புதிய தொழில்நுட்பம் கொண்ட டிஜிட்டல் எண்கள் இடும் எந்திரம் ஒன்று ரூ.21 லட்சம் செலவில் கொள்முதல் செய்து நிறுவப்படும். சென்னை அரசு மைய அச்சகத்தில் புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டிடத்தில் இயங்க உள்ள பல்வேறு பிரிவுகளை தொடர்பு கொள்ள உள் தொடர்பு பேசி வசதி ஏற்படுத்தப்படும். அரசு மைய அச்சகத்தில் அச்சிட உபயோகிக்கப்படும் அச்சுத் தகடுகளை தயாரிக்க தேவைப்படும் மென்தாளில் தரமான பிரதிகள் எடுக்க சென்னை மைய அரசு அச்சகத்திற்கு பன்முக அச்சுப்பொறி வாங்கப்படும். மின்சார வசதிகள் அச்சிடப்பட்ட படிவங்களை பதிவேடுகளாகவும் சிறு புத்தகங்களாகவும் கட்டுமானம் செய்திட மதுரை, சேலம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய அரசு கிளை அச்சகங்களுக்கு 5 கம்பியடிக்கும் எந்திரங்கள் நிறுவப்படும். அரசு எழுதுபொருள் கிடங்களில் காகித உருளைகளை சுமை ஊர்தியிலிருந்து இறக்கவும், பணியிடத்திற்கு கொண்டு செல்லவும், பளு தூக்கும் எந்திரம் வாங்கப்படும். எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்ககம், எழுதுபொருள் கிடங்கு மதுரை விருத்தாசலம், சேலம் அரசு கிளை அச்சகங்களிலுள்ள கட்டிடங்களில் மின் கசிவினால் ஏற்படும் தீவிபத்தை தடுத்திடும் வகையில் ரூ.48 லட்சம் செலவில் மின்வசதிகள் புதுப்பித்து மேம்படுத்தப்படும். 50 ஆயிரம் நூல்கள் அரசுப் பொருட்காட்சிகளுக்கு வருகை தரும் பொதுமக்கள், அரசின் நலத்திட்டங்கள், சாதனைகள் மற்றும் அறிவிப்புகள் குறித்த விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் மாவட்ட தலைமையிடங்களில் நடைபெறும் அரசுப் பொருட்காட்சிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் எல்.இ.டி. மின்விளக்கு பலகைகள் அமைக்கப்படும். மாநில செய்தி நிலைய நூலகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு, அரசியல், அறிவியல், ஆன்மிகம், சிறுவர் நூல்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், ஆங்கில நூல்கள் என பல்வேறு தலைப்புகளில் உள்ள சுமார் 50 ஆயிரம் நூல்களை கணினியில் பதிவு செய்து, எளிதாக தேடி எடுப்பதற்கு ஏதுவாக நவீன மென்பொருள் ரூ.10.50 லட்சம் மதிப்பீட்டில் பொருத்தப்படும். பொருட்காட்சி பொதுமக்களும், வெளிநாட்டினரும், வலைதளங்களின் வாயிலாக மணிமண்டபங்கள், மற்றும் நினைவகங்களை பார்வையிட ஏதுவாக சென்னை பெருநகரில் உள்ள 14 மணிமண்டபங்கள், நினைவகங்கள் மற்றும் கலைவாணர் அரங்கம் ஆகியவற்றை 360 பரிமாணத்தில் படமெடுத்து அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். ஆண்டுதோறும் 10 மாவட்ட தலைநகரங்களில் அரசுப் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, திருச்சி, வேலூர் ஆகிய 6 மாவட்ட தலைநகரங்களில் பொருட்காட்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும். மீதமுள்ள 4 அரசுப் பொருட்காட்சிகள் வெவ்வெறு மாவட்ட தலைநகரங்களில் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மணிமண்டபம் முன்னதாக பதிலுரையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:- அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் சிறப்பான பணிகளை செய்தி, மக்கள் தொடர்புத் துறை திறன்பட நிறைவேற்றி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.73 கோடியே 43 லட்சம் மதிப்பீட்டில் தியாகி சுப்பிரமணிய சிவா, தமிழிசை மூவர், விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், விடுதலைப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை, தியாகி வாஞ்சிநாதன், மார்ஷல் நேசமணி, வீரமங்கை வேலுநாச்சியார், வீரத்தாய் குயிலி, தியாகி சங்கரலிங்கனார், வீரபாண்டிய கட்டபொம்மன், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், சுயமரியாதைச் சுடரொளி ஜீவரத்தினம், விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் ஆகியோருக்கு மணிமண்டபங்களையும், நினைவுச் சின்னங்களையும் எழுப்பி அவற்றை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். சிலை திறப்பு நாட்டுக்கு உழைத்த தலைவர்கள் பெருமைப்படுத்தும் வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் கவிமணி தேசிக விநாயகம் , களியக்காவிளையில் தியாகி சிதம்பரநாதன் மற்றும் திருச்சியில் தியாகி கீழப்பளுவூர் சின்னச்சாமி, ராமநாதபுரத்தில் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி ஆகியோருக்கு சிலை அமைத்து, 8.2.16 அன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். திருட்டு வி.சி.டி. வழக்குகள் திருட்டு வி.சி.டி தயாரிப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் திருட்டு வி.சி.டி தயாரித்து, விற்பனை செய்ததற்காக 12ஆயிரத்து705 பேர் கைது செய்து செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. 2014-15-ம் ஆண்டில், வீடியோ திருட்டு சம்பந்தமான குற்றங்களில் ஈடுபட்ட 11 பேர் குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.83 கோடியே 28 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எழுதுபொருள் அச்சுத் துறையில் 1,696 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் 221 பணியாளர்கள் மாற்றுத் திறனாளிகள். அதன்படி 13 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கி, முன்மாதிரித் துறையாக இந்தத் துறை விளங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

No comments: