Friday, 12 August 2016

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் 5 ஆயிரத்து 451 பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. | விண்ணப்பிக்க செப்டம்பர் 8-ந்தேதி கடைசி நாள்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் 5,451 பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு விண்ணப்பிக்க செப்டம்பர் 8-ந்தேதி கடைசி நாள்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் 5 ஆயிரத்து 451 பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க செப்டம்பர் 8-ந்தேதி கடைசி நாள். தமிழக அரசு துறைகளில் ஏற்படும் காலியிடப்பணிகளை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் உரிய நபர்களை தேர்ந்து எடுக்கும் பணியை தமிழக அரசு ஒப்படைத்து வருகிறது. அதன்படி குரூப்-4 பணியிடங்கள் 5 ஆயிரத்து 451 காலியாக உள்ளள.
இந்த பணியிடங்களை எழுத்துதேர்வு மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் தமிழ்நாடு அமைச்சுப்பணி, நீதித்துறையில் அமைச்சுப்பணி, நிலஅளவைத்துறையில் நில அளவை பதிவேடுகள் சார்நிலைப்பணி ஆகிய துறைகளில் காலியாக கிடக்கும் பணியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன் லைனில் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பிக்க செப்டம்பர் மாதம் 8-ந்தேதி கடைசி நாள். அன்று இரவு 11-59 மணிவரை விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி விண்ணப்பிக்க விரும்புவோர் எஸ்.எஸ்.எல்.சி. படித்தால் போதும். குறைந்த பட்சம் கடந்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி அன்று 18 வயது முடிந்திருக்கவேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்ப கட்டணம் செலுத்தத்தேவை இல்லை. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnps-c-ex-ams.net , www.tnps-c-ex-ams.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு நவம்பர் மாதம் 6-ந்தேதி காலை 10 முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறுகிறது. இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

No comments:

TRB