Wednesday, 24 August 2016

ஓவியம், தையல், இசை, வேளாண்மை உள்ளிட்ட 7 வகையான படிப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுகிறது.

ஓவியம், தையல் உள்ளிட்ட 7 வகை படிப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றம்
ஓவியம், தையல், இசை, வேளாண்மை உள்ளிட்ட 7 வகையான படிப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. தையல், ஓவியம் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு தேர்வுத்துறை தொழில்நுட்ப தேர்வுகளையும் வருடந்தோறும் சான்றிதழ் படிப்பு தேர்வுகளையும் நடத்துகிறது. இந்த தேர்வுகள் தனியாக படித்து எழுதுபவர்களுக்கு தான் நடத்தப்படுகிறது. இசை, ஓவியம், நடனம், வேளாண்மை, தையல், கைத்தறி, அச்சிடுதல் ஆகிய 7 பாடங்களுக்கு சான்றிதழ் படிப்புக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
அவ்வாறு அவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் கடந்த 1971-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படவில்லை. பாடத்திட்டம் மாற்றம் இன்றைய நிலைமைக்கு ஏற்ப வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்தது. அதன்படி மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இயக்குனரகம் சார்பில் புதிய பாடத்திட்டம் தயாரிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. இதற்காக 7 துறைகளிலும் உள்ள நிபுணர்களை அழைத்து அவர்களை குழுவாக வைத்து ஆலோசனை சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கூடத்தில் நடத்தப்பட்டது. பணி தொடக்கம் இந்த குழுவினர் அனைவரையும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்று பேசினார். பாடத்திட்டம் மாற்றுவதற்கு குழுக்கள் அனைத்தையும் இயக்குனரக உதவி பேராசிரியை கா.சு.சங்கீதா அமைத்து ஏற்பாடு செய்தார். பாடத்திட்டம் தயாரிக்கும் பணி தொடங்கியது. விரைவில் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு அவை கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இயக்குனரக இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

No comments:

TRB