Thursday, 11 August 2016

இந்த ஆண்டு முதல் அறிமுகம்: அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ் சட்டசபையில் அமைச்சர் சரோஜா அறிவிப்பு

இந்த ஆண்டு முதல் அறிமுகம்: அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ் சட்டசபையில் அமைச்சர் சரோஜா அறிவிப்பு
அங்கன்வாடி குழந்தை களுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சரோஜா கூறினார். காலி பணியிடம் நிரப்பப்படும் தமிழக சட்டசபையில் நேற்று நடந்த சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் இறுதியாக அத்துறை அமைச்சர் வி.சரோஜா பதில் அளித்தும், புதிய அறிவிப்புகளை வெளியிட்டும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகளில் ஏற்பட்டுள்ள அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி ஊழியர்கள் பணி நியமனம் தொடர்பான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் விசாரணை முடிவுற்று, இறுதியாணை எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாணை கிடைக்கப்பெற்ற உடன், காலி பணியிடங்களை துரிதமாக, மிக விரைவில் நிரப்ப தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். கல்வி நிறைவு சான்றிதழ் இந்த நிதியாண்டு முதல் அங்கன்வாடி மையங்களில் பயின்று ஆரம்ப கால கல்விக்காக வேறு பள்ளிகளுக்கு செல்லும் சுமார் 2 லட்சம் குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ் ரூ.20 லட்சம் செலவில் வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அரசு கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் சிறப்பு இல்லங்களில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் (கவுன்சிலிங்) சேவை வழங்கப்படும். 4 புதிய சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்கள் தர்மபுரி, கடலூர், நாமக்கல் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 73 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் மத்திய, மாநில அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்குடன் செயல்படுமாறு தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments: