Friday, 12 August 2016

புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கைக்கு கல்வியாளர்கள், ஆசிரியர்களின் ஆதரவும் எதிர்ப்பும்

புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கைக்கு கல்வியாளர்கள், ஆசிரியர்களின் ஆதரவும் எதிர்ப்பும்
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கைக்கு கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே எதிர்ப் பும் அதேநேரத்தில் ஒருசில விஷயங்களில் வரவேற்பும் எழுந் துள்ளது. தற்போது நடைமுறையில் இருந்துவரும் 1986-தேசிய கல்விக் கொள்கையானது விரைவில் மாற் றப்பட உள்ளது. இதற்காக 2016-தேசியக் கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை பொதுமக்க ளின் கருத்துகளை அறிவதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
43 பக்கங்கள் அடங்கிய இந்த ஆவணத்தில், 5-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி (ஆல் பாஸ்), படிப்பில் பின்தங்கியவர்களுக்கு அவர் களுக்கு ஏற்ற தொழில்சார்ந்த படிப்புகள், 5-ம் வகுப்பு முதல் கணினி கல்வி, 10-ம் வகுப்பில் பகுதி-ஏ பாடங்கள் (அறிவியல், கணிதம், ஆங்கிலம்), பகுதி-பி பாடங்கள் (தொழிற்கல்வி பாடங் கள்) அறிமுகம், தகுதித்தேர்வு அடிப்படையில் உதவித்தொகை, ஆசிரியர்களின் வருகை பயோ- மெட்ரிக் மூலம் கண்காணிப்பு, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாய பணியிடைப் பயிற்சி, மதிப்பீடு அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு, 5 ஆண்டு களுக்கு ஒருமுறை திறன்தேர்வு, உயர்கல்வியில் தனியார் பங்க ளிப்பு அதிகரிப்பு என பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள் ளன. இந்த வரைவு அறிக்கை குறித்து கல்வியாளர்களும் ஆசி ரியர்களும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.கலாநிதி: கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் சமஸ்கி ருத மொழிக்கு முக்கியத்துவம் வரவேற்கத்தக்கது. அதேநேரத் தில் மிகவும் தொன்மையான மொழியான தமிழ் மொழிக்கும் முக் கியத்துவம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். காரணம், தமிழிலும், சமஸ்கிருதத்திலும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந் தமான பொக்கிஷங்கள் நிரம்ப உள்ளன. உயர்கல்வியில் தனியார் பங்களிப்பை அதிகரிக்கும் முயற் சியை ஏற்றுக்கொள்ள முடியாது. கல்வி என்பது எப்போதுமே அரசு வசம் தான் இருக்க வேண்டும். படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களுக் கு, அவர்களுக்குப் பிடித்தமான துறையில் தொழிற்பயிற்சி அளித்து அதில் திறமைகளை மேம்படுத்து வது வரவேற்கக்கூடிய ஒன்று. படிப் பில் பின்தங்கிய மாணவர்களை பெயரளவில் தேர்ச்சிபெற வைப் பதனால் என்ன பயன்? அவர் களுக்கு ஆர்வமான துறையில் பயிற்சி அளிப்பது அவர்களை மேம்படுத்துவதுதான் சரி. ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இந்தமுறை பின்பற்றப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி. மன்னர் ஜவகர்: தற்போது 8-ம் வகுப்பு வரை அனைவரும் பாஸ் என்றிருப்பதை 5-ம் வகுப்பு வரை என்று குறைத் திருப்பது சரியல்ல. இதனால் கிராமப்புற மாணவர்கள் சமூக ரீதியாக நலிவடைந்த பிரிவினர் பாதிக்கப்படுவர்.8-ம் வகுப்பு என்ற நிலை வரும்போது மாணவர் கள் படிப்பின் மீது ஆர்வம் ஏற் பட்டு நன்றாக படிக்கலாம். மாண வர்களுக்கு யோகா, நல்லொ ழுக்க வகுப்பு கள் இருப்பதை வர வேற்கலாம். ஆனால், அவை குறிப் பிட்ட மதத்தை தொடர்புபடுத்து வதாக இருக்கக்கூடாது. 10-ம் வகுப்பின் போது, படிப்பில் பின்தங் கிய மாணவர்களுக்கு தொழில் திறன் பயிற்சி, மற்ற மாணவர் களுக்கு வழக்கமான கல்வி என்று மாணவர்களைப் பிரித்துப் பார்ப் பது சரியல்ல. 10-ம் வகுப்புக்குப் பிறகுகூட படிப்பில் ஆர்வம் ஏற் பட்டு மாணவர்கள் படிக்கக்கூடும். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் வே.ம ணிவாசகன்: ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்று கல்வித்துறையில் ஐஇஎஸ் (இந்திய கல்வி பணி) என்பது தேவையில்லை. கல்விப்பணி என்பது உயிர்களுடன் தொடர்பு டை யது. அங்கு மேலாண்மைக்கு வேலையே இல்லை. தகுதித்தேர் வில் தேர்ச்சி பெற்றால்தான் ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு என்று சொல்லப் பட்டுள்ளது. தோல்வி அடையும் ஆசிரியர்கள் மீண்டும் தேர்வெழுத வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். 8-ம் வகுப்பு வரை “ஆல் பாஸ்” என்றிருப்பதை 5-ம் வகுப்பு வரை என்று மாற்றும் முடிவு வரவேற்கத் தக்கது. காரணம் தற்போது 8-ம் வகுப்பு வரை எந்த மாணவரும் பெயில் ஆக்கப்படாத தால் அவர் கள் ஒன்றுமே தெரியா மல் 9-ம் வகுப்புக்கு வரும்போது ஆசிரியர் கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளா கின்றனர். பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பி.பி. பிரின்ஸ் கஜேந்திரபாபு: அடிப்ப டையில் கல்வி என்பதன் வரை யறையே மாற்றப்பட்டுள்ளது. கல்வி, வாழ்வாதாரத்துக்கான திறன் மேம்பாடாகத்தான் பார்க்கப்படுகி றது. உயர்கல்வியில் ஆங்கிலமும், பண்பாட்டு மொழியாக சமஸ்கிரு தமும் சொல்லப்பட்டுள்ளதே தவிர இந்தி உள்ளிட்ட இந்தியாவின் இதர மொழிகள் குறித்து வரைவு அறிக்கையில் எங்கேயும் பேசப் ப டவில்லை. தொடக்கக்கல்வி பற்றி சொல்லப்பட்ட அம்சங்களைப் பார்த்தால் அனைவருக்கும் சமமான ஒரே தரமான கல்வி கிடைக்காது. லெவல்-ஏ, லெவல்-பி என்று வைத்து கல்வி ரீதியாக பேதத்தை உருவாக்கப் பார்க்கின்றனர். இட ஒ துக்கீட்டின் பயன்களை ஒரு தலை முறையினரே இன்னும் அனுப விக் காத நிலையில், இடஒதுக்கீடு தொடரும் என்று வரைவு அறிக் கையில் சொல்லப்படவில்லை. இது சமூகநீதியை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சி. வரைவு அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்  தற்போது 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்றிருப்பது 5-ம் வகுப்பு வரை என மாற்றம்  படிப்பில் பின்தங்கியவர்களுக்கு ஏற்ப தொழில்சார்ந்த, உடல்திறன் சார்ந்த படிப்புகள் அறிமுகம்  அறிவியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு தேசிய அளவில் பாடத்திட்டம்  சமூக அறிவியல் உள்ளிட்ட இதர பாடங்களுக்கு மாநிலங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பாடத்திட்டம்  5-ம் வகுப்பு முதல் கணினி கல்வி  10-ம் வகுப்பில் பகுதி-ஏ பாடங்கள் (அறிவியல், கணிதம், ஆங்கிலம்), பகுதி-பி பாடங்கள் (தொழிற்கல்வி பாடங்கள்) அறிமுகம்  தேசிய அளவில் உதவித்தொகை வழங்க 10-ம் வகுப்பு இறுதியில் நுழைவுத்தேர்வு  பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை பயோ-மெட்ரிக் மூலம் கண்காணிப்பு  ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாய பணியிடைப் பயிற்சி  ஆசிரியர்களுக்கு மதிப்பீடு அடிப்படையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு  ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திறன்தேர்வு  ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்று ஐஇஎஸ் (இந்திய கல்விப்பணி)  ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் அதிகபட்சம் 100 கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம்  இந்திய பல்கலைக்கழகங்களுடன் வெளிநாட்டு கல்லூரிகள் இணைந்து செயல்பட ஏற்பாடு  கல்வி உள்கட்டமைப்புக்குச் செய்யப்படும் செலவினங்களுக்கு தனியாருக்கு வரிச்சலுகை  புதிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படாது

1 comment:

NAGAKKUDAIYAN NATTAMAI said...

ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு அடிப்படையில் ஊதிய உயர்வு என்பது வரவேற்கதக்க ஒன்று பாராட்டுக்குரியது.