Thursday, 25 August 2016

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு அவசியம் இல்லை ஐகோர்ட்டு தீர்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில், தமிழக அரசு 2011-ம் ஆண்டு ஒரு அரசாணை வெளியிட்டது. அதன்படி அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறுபான்மையின பள்ளிகள் உள்பட அனைத்துவகை பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் தமிழக அரசு நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும். 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந் தேதிக்கு பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களும், 5 ஆண்டுகளுக்குள் இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த அரசாணையை எதிர்த்தும், இந்த அரசாணை சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு பொருந்தாது என்றும் சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கம் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் வழக்குகளை தொடர்ந்தனர். தலையிட முடியாது இந்த வழக்குகளை நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் சேவியர் அருள்ராஜ், ஏ.அருள்மேரி, அஜ்மல்கான், காட்சன் சுவாமிநாதன் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டார்கள். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு வழக்குகளில் பிறப்பித்த தீர்ப்புகளின் அடிப்படையில் பார்க்கும்போது, ‘பொதுநலனுக்காக சிறுபான்மையினர் பள்ளிகளை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் புதிய விதிகளை கொண்டுவரலாம். அதற்காக அந்த சிறுபான்மையினர் பள்ளிகளின் தன்மையை பாதிக்கும் விதமான உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. ஆசிரியர் நியமனம் தொடர்பான சிறுபான்மையினர் பள்ளி நிர்வாகங்களின் அதிகாரத்தில் வேறு யாரும் தலையிட முடியாது’ என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. பொருந்தாது எனவே அரசு உதவிபெறும், உதவிபெறாத சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணை பொருந்தாது என்று உத்தரவிடுகிறோம். 2010-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், 5 ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற உத்தரவும் இவர்களுக்கு பொருந்தாது என்று உத்தரவிடுகிறோம். 5 ஆண்டுகளுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்துக்காக பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சம்பளம் வழங்காமல் உள்ளது. அந்த சம்பளத்தை 2 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும். தமிழகத்தை போல, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் இது பொருந்தாது. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
=============================================================
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழக அரசு கடந்த 2011 நவம்பர் 15-ல் ஒரு அரசாணையை வெளியிட்டது. இதன்படி அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக புதிதாக நியமிக்கப்படுபவர்கள் தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். 2010 ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் 5 ஆண்டுகளுக்குள் இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த அரசாணை சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று கூறி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கம் மற்றும் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு: ஆசிரியர்களி்ன் தகுதியை உயர்த்து வதற்காக இந்த அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது என்றும் இதுபோன்ற தேர்வுகளை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஓர் உத்தரவில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள கட்டாய கல்வி உரிமை சட்டம் சிறுபான்மையினர் பள்ளிக்கூடங் களுக்கு பொருந்தாது என்று கூறி யுள்ளது என்பதை மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். சிறுபான்மையினர் பள்ளிக்கூடங் களை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் விதிகளை கொண்டு வரலாம். அதற்காக அந்தப் பள்ளிகளின் தன் மையை பாதிக்கும் விதமாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. சிறுபான்மை யினர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் கட்டாயமாக ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத வேண்டும் என நிர்பந்தம் செய்ய முடியாது. எனவே அரசு உதவிபெறும் மற்றும் உதவி பெறாத சிறுபான்மையினர் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வி்ல் தேர்ச்சி பெறவேண் டும் என தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது. மேலும் 2010-ல் பணிக்கு சேர்ந்தவர்கள் 5 ஆண்டுகளுக் குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வில்லை எனக்கூறி அவர்களுக்கான சம்பளத்தை அரசு வழங்காமல் உள்ளது. அந்த சம்பளத் தொகையை 2 மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசைப் போல, புதுச்சேரி அரசும் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து கடந்த 2015-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணை யும் புதுச்சேரியில் உள்ள சிறுபான்மை யினர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பொருந்தாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.


1 comment:

ponpandian suba said...

நீதிமன்றம்நீதியைமறந்தேபோயின மதரீதியானதீர்ப்பளித்தது மாபெரும் சாபமாகும் தகுதிதோ்வைநாடுமுழுவதும் ரத்துசெய்யவேண்டும் அல்லதுஅனைவருக்கும்கட்டாயமாகவேண்டும் இதுதான் நீதியாகும் இல்லையேல் நிதியாகும்