Thursday, 4 August 2016

தருமபுரி, மாவட்ட தொடக்கக்கல்வித் துறை பணி நிரவல், பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

தருமபுரி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்,அவர்களின் பத்திரிகை செய்தி 04.08.2016
தமிழக அரசு உத்தரவின்படி, தொடக்கக்கல்வித் துறையின் சார்பாக 2016-17 ஆம் ஆண்டிற்கான ஊராட்சி/ நகராட்சி/அரசு தொடக்க/ நடுநிலைப்பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர்கள்/இடைநிலை ஆசிரியர்கள்/ பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல், பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் பின்வரும் கால அட்டவணைப்படி நடைபெறுகிறது.
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல், பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - ஒன்றியத்திற்குள், பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு-மாவட்டத்திற்குள் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்)- 06.08.2016 அன்றும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு – 07.08.2016 அன்றும், இடைநிலை ஆசிரியருக்கான பணிநிரவல் – 13.08.2016 அன்றும், இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு-ஒன்றியத்திற்குள், இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு-மாவட்டத்திற்குள் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்)- 14.08.2016 அன்றும் நடைபெற உள்ளது. மேலும் தொடக்கக்கல்வித் துறையின் சார்பாக 2016-17 ஆம் ஆண்டிற்கான ஊராட்சி/ நகராட்சி/அரசு தொடக்க/ நடுநிலைப்பள்ளியில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள்/ பட்டதாரி ஆசிரியர்களுக்கான இணைய வழிமாவட்ட மாறுதல் கலந்தாய்வு தருமபுரி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாவட்ட திட்ட ஓருங்கிணைப்பாளர் அலுவலக (ளுளுஹ – னுஞஊ டீககiஉந) வளாகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் பின்வரும் கால அட்டவணைப்படி நடைபெற உள்ளது. பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – மாவட்டம் விட்டு மாவட்டம் (இணையதளம் வாயிலாக- டீடேiநே), 20.08.2016 சனிக்கிழமை அன்றும், இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – மாவட்டம் விட்டு மாவட்டம் (இணையதளம் வாயிலாக- டீடேiநே) 21.08.2016 ஞாயிற்றுக் கிழமை அன்றும் நடைபெற உள்ளது. மேற்கண்ட தகவலை தருமபுரி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் திரு.கா.பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

TRB