Friday, 5 August 2016

தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணய குழு தலைவர் பணியிடத்தை நிரப்பக்கோரி வழக்கு அரசு செயலர் பதிலளிக்க உத்தரவு

தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணய குழு தலைவர் பணியிடத்தை நிரப்பக்கோரி வழக்கு அரசு செயலர் பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் பணியிடத்தை நிரப்பக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்விச் செயலர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த பி.கார்த்தி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவராக 2012-ல் நியமனம் செய்யப்பட்ட நீதிபதி சிங்காரவேலு 2015 டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதனால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கல்விக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் பணியிடம் காலியாக உள்ளது. எனவே இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணம் இதுவரை நிர் ணயிக்கப்படவில்லை. தமிழகத்தில் 12 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை நிர்வாகமே வசூலித்து வருகிறது. இதனால் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவரை உடனடியாக நியமிக்க உத்தரவிட வேண்டும் என கூறப் பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் அடங்கிய அமர்வு நேற்று விசா ரித்தது. தமிழக பள்ளிக் கல்வி முதன்மை செயலர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகியோர் வரும் 18-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

No comments:

TRB