Monday, 22 August 2016

tnpsc குரூப்-2 மெயின்தேர்வை 9,860 பட்டதாரிகள் எழுதினார்கள்

குரூப்-2 மெயின்தேர்வை 9,860 பட்டதாரிகள் எழுதினார்கள் 20 சதவீதம் பேர் வரவில்லை 
எழும்பூர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரிகள் குரூப்-2 மெயின் தேர்வை எழுதியபோது எடுத்த படம். குரூப்-2 மெயின் தேர்வை 9 ஆயிரத்து 860 பட்டதாரிகள் எழுதினார்கள். 20 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை. 1,241 காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உரிய நபர்களை தேர்வுசெய்யும் பணியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது.
இளநிலை மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிகள், வணிகவரித்துறை துணை அதிகாரிகள், சார் பதிவாளர் நிலை 2, வருவாய்த்துறை உதவியாளர்கள், உள்ளூர் நிதி தணிக்கை துறை உதவி ஆய்வாளர்கள், தொழிலாளர் நல உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 1,241 காலிப்பணியிடங்களுக்கு குரூப்-2 தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தது. முதல் நிலைத் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 4 லட்சத்து 78 ஆயிரத்து 782 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு மே மாதம் வெளியிடப்பட்டது. மெயின் தேர்வு எழுத 12 ஆயிரத்து 337 பேர் தகுதி பெற்றனர். மெயின் தேர்வு நேற்று நடைபெற்றது. சென்னை, சிதம்பரம், சேலம், திருச்சி, கோவை, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய 8 நகரங்களில் 41 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. குழந்தைகளுடன் பெண்கள் தேர்வு காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற்றது. தேர்வை எழுத ஏராளமானவர்கள் வந்திருந்தனர். அவர்களில் சில பெண் பட்டதாரிகள் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர். அவர்கள் தேர்வு மையத்திற்கு வெளியே தாய் அல்லது கணவரிடம் குழந்தையை விட்டுவிட்டு தேர்வை எழுதினார்கள். சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய காஞ்சீபுரத்தைச் சேர்ந்த டி.நதியா, யு.மீனா ஆகியோர் கூறும்போது, “தேர்வில் பெரும்பாலான கேள்விகள் நடப்பு நிகழ்வாக அமைந்திருந்தன. இந்த மையத்தில் தேர்வு எழுத வந்தவர்களில் பலர் ஏற்கனவே கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் பணியிடங்களில் இருக்கிறார்கள். அனைவரும் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தான் தேர்வு எழுத வந்துள்ளோம்” என்றனர். தேர்வு எழுதிய கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்த கண்ணன், சேத்துப்பட்டை சேர்ந்த ரமேஷ் ஆகியோர் கூறுகையில், கேள்விகள் சற்று கடினமாக இருந்தன என்றனர். 9,860 பேர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரி கூறும்போது, மெயின் தேர்வு எழுத தகுதி பெற்றவர்களில் 20 சதவீதம் பேர் வரவில்லை என்றும், 9,860 பேர் எழுதி உள்ளனர் என்றும் தெரிவித்தார்.


No comments:

TRB