Saturday, 17 September 2016

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 187 பேர் தேர்வு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 187 பேர் தேர்வு
சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 187 பேர் மெயின் தேர்வு எழுத தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் நிலை தேர்வு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான, அகில இந்திய பணிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் நடத்துகிறது. இந்த வருடம் மொத்தம் 1,079 பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டன. இந்த அறிவிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் ஏராளமானோர் விண்ணப்பம் செய்தனர்.
இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு முதல் நிலை எழுத்து தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 7-ந்தேதி நடந்தது. இந்தியா முழுவதும் இருந்து 9 லட்சம் பேர் எழுதினார்கள். தமிழகத்தில் இருந்து 17 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். முதல் நிலை தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 15 ஆயிரத்து 445 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் மெயின் தேர்வை எழுத தகுதி உள்ளவர்கள். முதன்மை தேர்வு டிசம்பர் 3-ந்தேதி தொடங்குகிறது. மனிதநேய மையத்தில் படித்த 187 பேர் வெற்றி நேற்று வெளியிடப்பட்ட முதல்நிலை தேர்வுகளில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் மனித நேய பயிற்சி மையத்தில் இலவசமாக பயிற்சி பெற்று முதல் நிலை தேர்வு எழுதிய 187 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை சிவில் சர்வீசஸ் தேர்வு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இதுவரை 2 ஆயிரத்து 831 பேர் வெற்றி பெற்று மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர் என்று இந்த மையத்தின் இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்தார். இந்த முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து வசதி அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பயிற்சி இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ- மாணவிகள் தங்களுடைய பாஸ்போர்ட்டு அளவு புகைப்படம், எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் இயக்குனர் கார்த்திகேயன், 28, முதல் பிரதானசாலை, சி.ஐ.டி.நகர், சென்னை என்ற முகவரியில் உள்ள மனிதநேய பயிற்சி மைய அலுவலகத்துக்கு இன்று(சனிக்கிழமை) முதல் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று மனிதநேய பயிற்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

No comments: