Thursday, 22 September 2016

2-ஆம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு: இணையதளத்தில் அட்டவணை வெளியீடு

2-ஆம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு: இணையதளத்தில் அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான 2 -ஆம் கட்ட கலந்தாய்வு சென்னையில் புதன்கிழமை (22.9.2016) தொடங்க உள்ளது.
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் வரும் 24-ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு அட்டவணை www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு 5 ஆயிரம் மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 9 எம்.பி.பி.எஸ். இடங்களும், 12 பி.டி.எஸ். இடங்களும் காலியாக உள்ளன. மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 122 எம்.பி.பி.எஸ். அரசு ஒதுக்கீட்டு இடங்களும், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 1,020 பி.டி.எஸ். அரசு ஒதுக்கீட்டு இடங்களும் காலியாக உள்ளன. இதுதவிர, இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்கும் புதிய மருத்துவக் கல்லூரிகளில் சமர்ப்பிக்கப்படும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் சேர்த்து கலந்தாய்வு நடைபெறும். அகில இந்தியத் தொகுப்பில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள இடங்களை அந்தந்த மாநில அரசுகளிடம் சமர்ப்பிப்பதற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வழக்கின் தீர்ப்பைப் பொறுத்தே, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் காலியாக உள்ள இடங்கள், மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்படுமா என்பது குறித்து தெரிய வரும் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments: