Saturday, 24 September 2016

2017-ம் ஆண்டு ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் நேரடி தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு தங்கள் பெயரை செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை பதிவுசெய்து கொள்ளலாம்.

எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு பதிவுசெய்ய கடைசி வாய்ப்பு: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை தங்கள் பெயர்களைப் பதிவுசெய்து கொள்ளலாம் என்றும் இதுவே அவர்களுக்குக் கடைசி வாய்ப்பு என்றும் அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத்தேர்வு கள் இயக்குநர் தண்.வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
2017-ம் ஆண்டு ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் நேரடி தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள கடந்த ஜுன் 8 முதல் 30-ம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டது. இந்த தேதிகளில் தங்கள் பெயரைப் பதிவுசெய்யாமல் விடுபட்டுள்ள தனித்தேர்வர்களும், கடந்த 8-ம் தேதி இஎஸ்எல்சி பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று வரும் மார்ச் மாதம் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்களும் (1.4.2017 அன்று பதினான்கரை வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்) செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) தங்கள் பெயர்களை அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்குப் பதிவுசெய்துகொள்ளலாம். இதுவே கடைசி வாய்ப்பாகும். மேற்குறிப் பிட்ட தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் பெயரைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 2 நகல்கள் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிடம் அக்டோபர் 8-ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்படும் பள்ளிகளுக்குச் சென்று செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும். பயிற்சி வகுப்பில் 80 சதவீத வருகைப்பதிவு உடைய தனித்தேர்வர்கள் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

TRB