Sunday, 25 September 2016

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு 26-ம் தேதி சிறப்பு கலந்தாய்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு 26-ம் தேதி சிறப்பு கலந்தாய்வு
அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்ப ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 26-ம் தேதி நடத்தப்படுகிறது என்று மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் ஜி.செல்வராஜன் தெரிவித் தார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு கடந்த 21-ம் தேதி முதல் 24-ம் தேதி (நேற்று) வரை நடந்தது.
இரண்டு கட்ட கலந்தாய்வில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் இடங்கள், 2 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள பிடிஎஸ் இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. 440 பிடிஎஸ் இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரி களில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 64 எம்பிபிஎஸ் இடங்கள், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 440 பிடிஎஸ் இடங்கள் மீத முள்ளன. இடங்களை வரும் 30-ம் தேதிக்குள் நிரப்ப மருத் துவக் கல்வி இயக்ககம் திட்ட மிட்டுள்ளது. இந்நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ள இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 26-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

No comments:

TRB