Friday, 23 September 2016

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய விரிவுரையாளர் பணி தேர்வுக்கு உத்தேச விடை வெளியீடு விடை குறித்து ஆட்சேபனை தெரிவிக்க 28-ந்தேதி கடைசி நாள்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய விரிவுரையாளர் பணி தேர்வுக்கு உத்தேச விடை வெளியீடு விடை குறித்து ஆட்சேபனை தெரிவிக்க 28-ந்தேதி கடைசி நாள்
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய விரிவுரையாளர் பணி தேர்வுக்கு உத்தேச விடை வெளியீடு விடை குறித்து ஆட்சேபனை தெரிவிக்க 28-ந்தேதி கடைசி நாள் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. விடை குறித்து ஆட்சேபனை தெரிவிக்க 28-ந்தேதி கடைசி நாள். எழுத்து தேர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், இளநிலை விரிவுரையாளர்கள் பணியிடங்கள் 272 உள்ளன. இந்த இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு முதுகலைபட்டதாரிகள் விண்ணப்பித்தனர்.
அவர்களுக்கு கடந்த 17-ந்தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை மொத்தம் 12 ஆயிரத்து 164 பேர் எழுதினார்கள். உத்தேச விடை வெளியீடு தேர்வுக்கான உத்தேச விடையை தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், தெலுங்கு, உடற்கல்வி ஆகிய 11 பாடங்களுக்கும் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த விடைகளில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அல்லது விடைகுறித்து ஆட்சேபனை தெரிவித்து அந்த கடிதத்தை சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் உள்ள பெட்டியில் 28-ந்தேதி மாலை 5.30 மணிக்குள் போடலாம். அல்லது தபாலில் அனுப்பலாம். அவ்வாறு போடுபவர்கள் அல்லது அனுப்புபவர்கள் அதற்கான ஆதாரத்தை பாடப்புத்தகத்தில் உள்ள பக்கத்தின் நகலை இணைக்க வேண்டும். இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment to the post of Senior Lecturer / Lecturer / Junior Lecturer in SCERT 2016
REPRESENTATION
TENTATIVE KEY
          

Dated: 21-09-2016

Member Secretary

No comments: