Monday, 5 September 2016

சென்னையில் இன்று நடக்கும் ஆசிரியர் தின விழாவில் 379 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் வழங்குகிறார்

சென்னையில் இன்று நடக்கும் ஆசிரியர் தின விழாவில் 379 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் வழங்குகிறார் 
சென்னையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் 379 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். ஆசிரியராக இருந்து நாட்டின் மிக உயர்ந்த பதவியான குடியரசு தலைவர் பதவியை அடைந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அவரது நினைவாக தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது. ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு, வெள்ளிப்பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த விருது. ஆசிரியர் தினத்தன்று (செப்டம்பர் 5-ம் தேதி) இந்த விருது வழங்கப்படும். ரூ.10 ஆயிரம் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அண்மையில் சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, இந்த ஆண்டிலிருந்து பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா சென்னை சாந்தோமில் உள்ள (சாந்தோம் சர்ச் அருகில்) செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள செயின்ட் பீட்ஸ் நூற்றாண்டு விழா அரங்கில் இன்று (திங்கள்) மாலை 4 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் 379 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது வழங்கப் படுகிறது. பள்ளிக் கல்வித் துறையின் புதிய அமைச்சர் பாண்டியராஜன் 379 ஆசிரியர் களுக்கு டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது வழங்கி கவுர விக்கிறார். விழாவில், பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் டி.சபீதா தலைமையுரை ஆற்றுகிறார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் மைதிலி கே.ராஜேந்திரன், அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குநர் பூஜா குல்கர்ணி, மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ஆர்.அழகுமீனா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசுகிறார்கள்.


No comments: