Friday, 2 September 2016

தமிழ்நாட்டில் 770 பள்ளிகளில் இணையதள வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.

கல்வியை மேம்படுத்த 770 அரசு பள்ளிகளில் விரைவில் இணையதள வகுப்புகள்.
தமிழ்நாட்டில் 770 பள்ளிகளில் இணையதள வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார். அரசு பள்ளிகள் தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 40 அரசு உயர்நிலைப்பள்ளிகளும், 2 ஆயிரத்து 839 அரசு மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இதில் 770 பள்ளிகளில் உள்ள வகுப்புகளுக்கு இணையதளம் மூலம் கல்வி (வர்சுவல் கிளாஸ் ரூம்ஸ்) என்ற அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.
இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து 3 மாவட்டங்களுக்கு ஒரு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த மையம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனமாக உள்ளது. இவ்வாறு 11 மையங்களுக்கும், 77 அரசு பள்ளிகளுக்கும் இணையதள இணைப்பு வசதி வழங்கப்படுகிறது. அவை ஒரே நெட்வொர்க்கில் இணைக்கப்படும். 770 பள்ளிகளில் காணலாம் ஒரு மையத்தில் அல்லது ஒரு பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தினால் இணையதளம் மூலம் அனைத்து பள்ளிகளின் வகுப்புகளில் அது ஒளிபரப்பாகி அதன்மூலம் அந்த மாணவ-மாணவிகள் பயன் அடைவார்கள். ஒவ்வொரு பாடத்திலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் வகுப்பு எடுப்பார்கள். அதை 770 பள்ளிகளில் உள்ள இணையதள வகுப்புகளிலும் 11 மையங்களிலும் காணலாம். சந்தேகத்தை கேட்கலாம் ஆசிரியர் இணையதளத்தில் வகுப்பு எடுக்கும்போது மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை கேட்டு போக்கிக் கொள்ளலாம். இந்த முறை 6-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அமல்படுத்தப்படுகிறது. இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் கல்வித்திறன் மேம்பட்டு, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதமும் அதிகரிக்கும். தமிழகத்தில் கல்வியை மேம்படுத்துவதற்காக இந்த முறை செயல்படுத்தப்படுகிறது. தற்போது அந்த வகுப்புகளுக்கு இணையதள வசதி கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த இணையதள வகுப்புகள் தொடங்கும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments:

TRB