Thursday, 8 September 2016

TNPSC தொகுதி-4 தேர்விற்கு விண்ணப்பிக்க 14.09.2016 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி-4ல் அடங்கிய பல்வேறு பதவிகளில் 5451 காலிப்பணியிடங்களை நிரப்பும் இந்த தொகுதி-4 தேர்விற்கு விண்ணப்பிக்க 14.09.2016 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி-4ல் அடங்கிய பல்வேறு பதவிகளில் 5451 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, விளம்பர அறிவிக்கையினை 09.08.2016 அன்று வெளியிட்டது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க 09.08.2016 முதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக 08.09.2016 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது விண்ணப்பம் சமர்பிப்பதில் தாமதமோ அல்லது வேறு பிரச்சினைகளோ எழ வாய்ப்புள்ளது என்று இணையவழியே விண்ணப்பிப்பது எப்படி (How to Apply) என்ற அறிவுரைகளில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையிலும், கடைசி நேரத்தில் விண்ணப்பிக்க அதிக அளவிலான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களைச் சமர்பித்து வருகின்ற காரணத்தினாலும், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும், இந்த தொகுதி-4 தேர்விற்கு விண்ணப்பிக்க 14.09.2016 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தேர்விற்கான கட்டணம் செலுத்த 16.09.2016 வரையும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. ஆகையால் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதி நாள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். வெ. ஷோபனா, இ.ஆ.ப தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்.

No comments: