Sunday, 9 October 2016

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு எழுதியவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் 19-ந் தேதி முதல் வினியோகம்

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு எழுதியவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் 19-ந் தேதி முதல் வினியோகம்
அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஜூன், ஜூலை-2016-ல் எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை 28.7.2016 முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வருகிற 25-ந் தேதி வரை மட்டுமே செல்லும்.எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு எழுதிய அனைவருக்கும் 19-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் அலுவலக நேரத்தில், ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது. 26-ந் தேதிக்கு பிறகு சம்பந்தப்பட்ட அரசுத்தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்களில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments: