Thursday, 27 October 2016

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு மந்திரிசபை இன்று முடிவு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு
மந்திரிசபை இன்று முடிவு.
தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு மந்திரிசபை இன்று முடிவு இந்த ஆண்டு தொடக்கத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஜூலை 1-ந் தேதியிட்டு, இந்த உயர்வு அமல்படுத்தப்படும். இந்த யோசனை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறும் மத்திய மந்திரிசபை கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டு உள்ளது. எனவே, இன்று இதுபற்றி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: