Thursday, 27 October 2016

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு.
தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு இதனை அறிவித்துள்ளது.ஏற்கனவே நடப்பாண்டின் தொடக்கத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
ஆனால் இந்த உயர்வை 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளுடன் ஒருங்கிணைத்துக் கொண்டது. இந்நிலையில் தற்போது 2% அகவிலைப்படி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 58 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.இவை ஜூலை 1ஆம் தேதியை முன் தேதியிட்டு அமுலுக்கு வருகிறது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. அதேசமயம் 3% அகவிலைப்படி உயர்வு வழங்காமல் 2% அகவிலைப்படி உயர்வு வழங்கியதற்கு மத்திய அரசு தொழிற் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

No comments:

TRB