Wednesday, 26 October 2016

தமிழ்நாடு அரசு துறையில் 414 உதவி மருத்துவர் பணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு அரசு துறையில் 414 உதவி மருத்துவர் பணிகள்
தமிழ்நாடு அரசு துறையில் 414 உதவி மருத்துவர் பணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.இது பற்றிய விவரம் வருமாறு:-டி.என்.எம்.ஆர்.பி. எனப்படும் தமிழ்நாடு மருத்துவ சேவைப் பணிகள் தேர்வு வாரியம் தற்போது அசிஸ்டன்ட் சர்ஜன் (ஸ்பெஷாலிட்டி) பணிகளுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது.
மொத்தம் 414 பேர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். அனஸ்திசியாலஜி, அனட்டாமி, பயோ கெமிஸ்ட்ரி, பிளட் டிரான்ஸ்பியூசன், பாரன்சிக் மெடிசின், ஜெனரல் மெடிசின், ஜெனரல் சர்ஜரி, கைனகாலஜி, பீடியாட்ரிக்ஸ், பேத்தாலஜி, பார்மகாலஜி, பிசியாலஜி, ரேடியோ டயக்னாஸிஸ், மெடிக்கல், நியூரோ சர்ஜரி, பிளாஸ்டிக் சர்ஜரி, யூராலஜி, வாஸ்குலர் சர்ஜரி உள்ளிட்ட ஏராளமான பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. பணிப்பிரிவு வாரியான காலியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-7-2016 தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். முன்னாள் படைவீரர்கள் (பொது) 48 வயதுடையவர்களும், எஸ்.சி., எஸ்.சி.()., எஸ்.டி., எம்.பி.சி., டி.சி., பி.சி. பி.சி.எம், முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் 57 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:
எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புடன், முதுநிலை டிப்ளமோ, மருத்துவ பட்டமேற்படிப்பு, சிறப்பு மேற்படிப்புகள் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன.
தேர்வு செய்யும் முறை:
தரவரிசைப் பட்டியல் மற்றும் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் ரூ.750 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் போன்றவர்கள் ரூ.375 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. கட்டணத்தை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் இரு முறைகளிலும் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 9-11-2016-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.விண்ணப்பிக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


No comments:

TRB