Wednesday, 26 October 2016

டெபிட் கார்டு எண்ணை திருடி மோசடி சம்பவம் எதிரொலி ‘பின்’ நம்பர்களை மாற்றும்படி வங்கிகள் எச்சரிக்கை வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் .

டெபிட் கார்டு எண்ணை திருடி மோசடி சம்பவம் எதிரொலி 'பின்' நம்பர்களை மாற்றும்படி வங்கிகள் எச்சரிக்கை வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் .
டெபிட் கார்டு ரகசிய குறியீட்டு எண்களைத் திருடி கோடிக் கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தின் எதி ரொலியாக பொதுத்துறை வங்கிகள் டெபிட் கார்டுகளின் 'பின்' நம்பரை மாற்றிக்கொள்ளுமாறு தங்களது வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பி வருகின்றன.
இந்தியாவில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக் கையாளர்களின் டெபிட் கார்டு களின் ரகசிய குறியீட்டு எண்ணைத் திருடி (பின் நம்பர்) சீனா மற்றும் அமெரிக்காவில் கோடிக் கணக்கான ரூபாய் மோசடி செய் யப்பட்டுள்ளது. சுமார் 35 லட்சம் டெபிட் கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்கள் இவ்வாறு திரு டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பொதுத்துறை வங்கிகள் தங்களுடைய வாடிக்கை யாளர்களுக்கு அவர்கள் வைத் துள்ள டெபிட் கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்ணை உடனடியாக மாற்றும்படி எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பி வருகின்றன. இதுகுறித்து, பொதுத்துறை வங்கி அதிகாரி ஒருவர் கூறிய தாவது: அண்மையில் வெளிநாடுகளில் இருந்து சிலர் இந்தியாவில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் களின் டெபிட் கார்டுகள், ருபே கார்டுகள் ஆகியவற்றின் ரகசிய குறியீட்டு எண்களைத் திருடி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது. எனவே, முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக வாடிக் கையாளர்கள் தங்களது டெபிட் கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்ணை மாற்றிக்கொள்ளும்படி எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பி வருகிறோம். மேலும் வாடிக்கையாளர்கள் இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் வரும் வங்கி இணைய தள லிங்க்களை பயன்படுத்த வேண் டாம். அதேபோல், நம்பகத்தன்மை யுடன் கூடிய வங்கி செயலிகளைப் பயன்படுத்த வேண்டும். ஆன் லைன் மூலம் பொருட்களை வாங்கும்போது டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்துவதைத் தவிர்த்து முடிந்தவரை பணத்தை ரொக்கமாக வழங்க வேண்டும். குறிப்பாக, நெட் சென்டர்களில் பணப் பரிவர்த்தனைகள் மேற் கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.


No comments:

TRB