PF மூலம் வீட்டுக் கடன் வசதி: அடுத்த நிதியாண்டு முதல் அறிமுகம்!!!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (பிஎஃப்) காப்புறுதித் தொகையாக வைத்து குறைந்த விலை வீடுகளை மாதாந்திர தவணைமுறையில் வாங்கும் வசதி அடுத்த நிதியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் 4 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைவார்கள்.
இது தொடர்பாக, தில்லியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் பி.பி.ஜாய் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:பிஎஃப் பணம் பிடித்தம் செய்யப்படும் தொழிலாளர்களுக்கு வீட்டுக் கடன் பெற்றுத்தரும் வசதியை அறிமுகப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். அடுத்த நிதியாண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.இதன் மூலம் பிஎஃப் தொகையை காப்புறுதியாகக் கொண்டு புதிய வீடு வாங்கவும், கட்டவும் கடன் பெற முடியும். வீட்டுக் கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகையைபிஎஃப் கணக்கில் இருந்து செலுத்த முடியும். தொழிலாளரின் பிஎஃப் சேமிப்பில் இருந்து வீட்டுக் கடனுக்கான தவணை செலுத்தப்படும் என்ற வாக்குறுதியை வங்கிகளுக்கும், வீட்டுக் கடன் வழங்கும் பிற நிறுவனங்களுக்கும் நாங்கள் அளிப்போம். வீடு கட்ட நிலம் வாங்குதல், வீடு கட்டித் தருதல் போன்ற பணிகளில் எங்கள் அமைப்பு ஈடுபடாது. பிஎஃப் பணத்தை ஆன்லைன் மூலம் முழுமையாகத் திரும்பப் பெறும் வசதி வரும் மார்ச் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்றார் அவர். Posted by kalviseithi.net

No comments:
Post a Comment