Monday, October 10, 2016

tamil g.k | பொது அறிவு தகவல்கள்

வினா வங்கி
1. 22 நாடுகளின் கடற்படை பங்கு கொண்ட 2-வது சர்வதேச கடற்படை அணிவகுப்பு எங்கு நடந்தது?
2. இந்திய அரசு உலக வங்கியுடன் எந்த வெள்ள நிவாரண திட்டத்திற்காக 250 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
3. உலக சுகாதார நிறுவனம், கடந்த பிப்ரவரியில் எந்த நோய்த் தொற்றுக்கு எதிராக அவசர சுகாதார நடவடிக்கை பிரகடனம் செய்தது?
4. 2016-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் யார்?
5. அமெரிக்க அதிபர் ஒபாமா, கடந்த பிப்ரவரியில் அறிவித்த ‘ஆக்சன் பிளான்’ திட்டம் எது தொடர்பானது?
6. சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கான இலவச உதவி அழைப்பு எண்ணை மத்திய அரசு எப்போது தொடங்கி வைத்தது?
7. எந்த மாநிலம் அனேக பணிகளை மின்னணு மயமாக்கி முன்னணி மாநிலமாக திகழ்கிறது?
8. வனவிலங்குகளின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ஆக்சன் பிளான் (2017-2031) திட்டத்தை உருவாக்கிய கமிட்டி எது?
9. ‘புராஜக்ட் சன் ரைஸ்’ என்பது என்ன?
10. 19-வது மின்னணு அரசு தேசிய மாநாடு எங்கு நடந்தது?
11. 2016-ம் ஆண்டிற்கான இந்திய-சீசெல்ஸ் கூட்டு ராணுவப்பயிற்சி எங்கு நடந்தது?
12. 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு எது?
13. கனடாவில் நடந்த சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும் ஆற்றல் ஒத்துழைப்பு மாநாட்டில் எந்தெந்த நாடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன?
14. உலக ஆசிரியை விருதுக்கான பரிந்துரையில் இறுதிச்சுற்று வரை சென்ற இந்திய ஆசிரியை யார்?
15. உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி எங்கு உருவாக்கப்பட்டு, பறக்கவிடப்பட்டது?
16. இந்தியா பிரான்ஸ் நாட்டுடன் எத்தனை அணு உலைகள் நிறுவ ஒப்பந்தம் செய்துள்ளது?
17. அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறந்த சேவைக்காக 2016-ல் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார்?
18. உலக அளவிலான ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
19. நேட்டோ நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் எது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன?
20. இந்திய அரசு எந்த நாட்டுடன் விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் ஒப்பந்தம் செய்துள்ளது?


விடைகள்:
1. விசாகப்பட்டினம், 2. ஜீலம்- தவி வெள்ள மீட்பு பணிகள் திட்டம், 3. ஜிகா வைரஸ், 4. ஷேன் வாட்சன், 9.5 கோடி ரூபாய், பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணிக்காக, 5. சைபர் குற்றத்தடுப்பு, 6. 8-2-2016, 7. மகாராஷ்டிரா, 8. ஜே.சி. கலா கமிட்டி, 9. 8 வடகிழக்கு மாநிலங்களில், பிப்ரவரியில் தொடங்கப்பட்ட எயிட்ஸ் வருமுன் காப்போம் திட்டம், 10. நாக்பூரில், 11. சீசெல்ஸ் ராணுவ அகடமி அமைந்துள்ள விக்டோரியா நகரில், 12. மேற்கிந்திய தீவுகள், 13. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, 14. ராபின் சவுராசியா, 15. ராஞ்சி, 16. ஆறு, 17. மயில்சாமி அண்ணாத்துரை, 18. 2-வது இடம், 19. சைபர் கிரைம் பாதுகாப்பு ஒத்துழைப்பு, 20. ஆப்கானிஸ்தான்


No comments:

Popular Posts