Thursday, 6 October 2016

TNTET-ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு நிலவரம் .

TNTET-ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: காலி இடங்கள் பட்டியலை இன்று தாக்கல் செய்ய உத்தரவு.
TNTET-ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: காலி இடங்கள் பட்டியலை இன்று தாக்கல் செய்ய உத்தரவு. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக ஆசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வாகாத விண்ணப்பதாரர்களில் ஒரு பிரிவினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிவ கீர்த்திசிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் வி.கிருஷ்ணமூர்த்தி, நளினி சிதம்பரம், அஜ்மல் கான் ஆகியோர் ஆஜராகி, "தமிழகத்தில் 2012-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் 2013-இல் நடந்தது. அதன் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் வழங்கப்படுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட இரு அரசாணைகள் நியமன விதிகளுக்கு எதிரானது' என்று வாதிட்டனர்.ஆனால், தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.பி.ராவ், "அனைத்து சட்ட நடைமுறைகளின்படியே தமிழக அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன' என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள் கூறியது: தமிழக அரசு வெளியிட்ட இரு அரசாணைகளால் மனுதாரர்களுக்கு ஆசிரியர் பணியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என பலர் முறையிட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். எனவே, தற்போதைய சூழலில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை தமிழக அரசும் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மனுதாரர்கள் தரப்பும் நீதிமன்றத்தில் புதன்கிழமை (அக்டோபர் 5) தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்து புதன்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். பின்னணி:  தமிழக அரசு சார்பில் 2012-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) நடத்தப்பட்டது. இதில் குறைந்த நபர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, இடஒதுக்கீடு முறையின்படி தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் சலுகை அளிக்க ஓர் அரசாணையையும், பிளஸ்-2, பட்டப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மற்றொரு அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து, ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெறாமல் பாதிக்கப்பட்டதாகக் கூறி சுமார் 600 பேர் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளைத் தொடுத்தனர். இதில் இரு நீதிமன்றங்களும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கின. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

22 comments:

ponpandian suba said...

சமீபகாலமாக நீதிமன்றம் பொதுநலன்சாா்ந்திருக்கும் வழக்கில் மெத்தனம் காட்டுவது மிகவருத்தமானதாக உள்ளது ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆசிரியர் தகுதிதோ்வுவழக்கால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிஉள்ளனர் மூன்றுஆண்டுகளாக தோ்வுநடத்தப்படாமலும் ஆசிரியர்பணியிடங்கள் நிரப்படாமல் உள்ளது கனம் கோட்டார் அவா்களே

ponpandian suba said...

சமீபகாலமாக நீதிமன்றம் பொதுநலன்சாா்ந்திருக்கும் வழக்கில் மெத்தனம் காட்டுவது மிகவருத்தமானதாக உள்ளது ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆசிரியர் தகுதிதோ்வுவழக்கால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிஉள்ளனர் மூன்றுஆண்டுகளாக தோ்வுநடத்தப்படாமலும் ஆசிரியர்பணியிடங்கள் நிரப்படாமல் உள்ளது கனம் கோட்டார் அவா்களே

Krishna Kumar said...

Seniority only Best way to fill the vacancies.

Krishna Kumar said...

Seniority only Best way to fill the vacancies.

Unknown said...

This way correct

Unknown said...

This way correct

Unknown said...

Yes for best way of seniority wise only

rajeswari pg said...

As all said,seniority is the best way to help all the sufferors

Unknown said...

Yes, suprem court give good discession as fill the vac in seniority. then training the qualification test to all teachers in 3 months...

ELAYA RAJA said...

TN Govt know how many soldiers die in boarderday by day.... What to their remove serviceman quota and bit their stomach....

ELAYA RAJA said...

Yes, suprem court give good discession as fill the vac in seniority. then training the qualification test to all teachers in 3 months...

Karthik Raj said...

இப்படி போனால் என்னவாகும் ஆசிரியர் படிப்பு ?
இரண்டு ஆண்டு இடைநிலை படிப்பு கசாப்பு கடை மாதிரி திறந்து வைத்து இன்று மாணவர்கள் அப்படிப்பில் ஆர்வம் காட்டவில்லை ,பரவாயில்லை பி,எட் படித்தால் வேலை என்று படித்தால் தகுதி தேர்வு வேறு ,சரி அதையும் கோச்சிங் சென்டர் பணம் கட்டி படித்து பாஸ் பண்ணி வந்தால் இப்போ unathu 10 மார்க் கொடு 12 மார்க் கொடு என்றால் இப்போ போய் படிக்கவா முடியும் ,தயவு செய்யுது யாரும் எதிர்காலத்தில் பி.எட் படிக்காதீங்க,இப்போ படித்தவர்க்கு வேலை கிடைக்க இன்னும் 10 வருடம் ஆகும் ,தனியார் பள்ளிக்கு போனால் வெறும் 4000 ,5000 தான்.

Ganesh A said...

Seniority only best way to fill the vacancies..... nobody can suffer....

Anbu Mani said...

B.ED ITS WASTE OF TIME, MONEY, ENERGY AND ALL. PLEASE DO NOT STUDY B.ED. ITS SHAME ON OVERSELF

Jyothi said...

yes for best way of seniority wise only

Jyothi said...

yes for best way of seniority wise only

Siva subramani said...

90 க்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களை மட்டுமே பணிக்கு அமர்த்த வேண்டும்.இதில் சாதி மற்றும் கடந்த கால மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு மற்றும் 90 மார்க்கு குறைவாக எடுத்தால் போதும் என்ற அறிவிப்பு தவறானது. 90 க்கு மேலே மார்க் எடுக்க முடியவில்லை என்றால் திருப்பியும் பரீட்சை வைக்கவும்.பின்னர் 90 க்கு மேலே மார்க் எடுத்தால் வேலை கொடுக்கவும்.இப்படி செய்யாமல் இதில் சாதி மற்றும் கடந்த கால மார்க் மற்றும் இட ஒதுக்கீடு மற்றும் 90 மார்க்கு குறைவாக எடுத்தால் போதும் என்றால் அது மிக பெரிய லஞ்சத்திற்க்கு வழிவகை செய்யும் இந்த லஞ்சத்திற்க்கு அரசு துணைபோக கூடாது ..........

VAIDEKI said...

First filled up tet passed candidate. They suffered and waiting for three years.

VAIDEKI said...

Last

Senthil Kumar S said...

The Honorable Supreme Court should give the Judgement soon. Lot of people in Tamilnadu is waiting 3 years for Justice.

Saran Nithis said...

Oct 18 case finish pannungapa! Unga alumbu thaanga mudiyala

Rajesh Kanna said...

Teacher training padithal velaibendrakal.padithu therchi petren.piaku tet examnu solli en valkail kunda thuki podanga...ippa malai varuma varathanu vanathai parkuramathiri exam varuma varathanu court thirpa parthu kathirukom....engal valkaiku eppothu vidiyal....