Thursday, 3 November 2016

தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவு இணையதளத்தில் இன்று வெளியீடு

தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவு இணையதளத்தில் இன்று வெளியீடு
அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிக்கை கடந்த செப்டம்பர் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உள்பட) தேர்வு முடிவுகளை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் இணையதளத்திலிருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் மூலம் நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணி முதல், 7-ந் தேதி (திங்கட்கிழமை) வரை ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக நேரில் சென்று மறுகூட்டலுக்கான கட்டணத்தை பணமாக செலுத்தி ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments: