Tuesday, 15 November 2016

2017-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை அறிவிப்பு

2017-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை அறிவிப்பு | 2017-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு  வெளியிட்டது.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பா.ராம மோகன ராவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஜனவரி 1 - ஆங்கிலப்புத்தாண்டு (ஞாயிற்றுக்கிழமை)
ஜனவரி 14 - பொங்கல் தினம் (சனிக்கிழமை)
ஜனவரி 15 - திருவள்ளுவர் தினம் (ஞாயிற்றுக்கிழமை)
ஜனவரி 16 - உழவர் திருநாள் (திங்கட்கிழமை)
ஜனவரி 26 - குடியரசு தினம் (வியாழக்கிழமை)
மார்ச் 29 - தெலுங்கு வருடப்பிறப்பு (புதன்கிழமை)
ஏப்ரல் 1 - வங்கிகள் கணக்கு முடிப்பு-(வணிக-கூட்டுறவு வங்கிகள், சனிக்கிழமை)
ஏப்ரல் 9 - மகாவீர் ஜெயந்தி (ஞாயிற்றுக்கிழமை)
ஏப்ரல் 14 - தமிழ்ப் புத்தாண்டு-அம்பேத்கர் பிறந்த நாள்-புனிதவெள்ளி (வெள்ளிக்கிழமை)
மே 1 - மே தினம் (திங்கட்கிழமை)
ஜூன் 26 - ரம்ஜான் (திங்கட்கிழமை)
ஆகஸ்டு 14 - கிருஷ்ண ஜெயந்தி (திங்கட்கிழமை)
ஆகஸ்டு 15 - சுதந்திர தினம் (செவ்வாய்க்கிழமை)
ஆகஸ்டு 25 - விநாயகர் சதுர்த்தி (வெள்ளிக்கிழமை)
செப்டம்பர் 2 - பக்ரீத் பண்டிகை (சனிக்கிழமை)
செப்டம்பர் 29 - ஆயுத பூஜை (வெள்ளிக்கிழமை)
செப்டம்பர் 30 - விஜயதசமி (சனிக்கிழமை)
அக்டோபர் 1 - மொகரம் - (ஞாயிற்றுக்கிழமை)
அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி (திங்கட்கிழமை)
அக்டோபர் 18 - தீபாவளி பண்டிகை (புதன்கிழமை)
டிசம்பர் 1 - மிலாதுநபி (வெள்ளிக்கிழமை)
டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ் (திங்கட்கிழமை)
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டில் மொத்தம் 22 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது.இதில் அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் மட்டும் 5 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது.

No comments:

TRB