Friday, 18 November 2016

மாநில, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் காலியாக உள்ள தலைவர் பதவிகள் 2 வாரத்துக்குள் நிரப்பப்படும் ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம்

மாநில, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் காலியாக உள்ள தலைவர் பதவிகள் 2 வாரத்துக்குள் நிரப்பப்படும் ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம் | மாநில, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பதவிகளை 2 வாரத்துக்குள் நிரப்பப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. தலைவர் பதவி சென்னை ஐகோர்ட்டில், கோவை நுகர்வோர் குரல் அமைப்பின் செயலாளர் என்.லோகு ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்,
அதில் "தமிழகத்திலுள்ள 30 மாவட்ட குறைதீர் மன்றங்களில் 6 மாவட்டங்களில் தலைவர் பதவி வெகுநாட்களாக நிரப்பப்படாமல் உள்ளது. அதுபோல மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் பதவியும் கடந்த 2015-ம் ஆண்டு மே முதல் காலியாக உள்ளது. 10 ஆயிரத்து 450 வழக்குகள் தீர்ப்புக்காகவும், 8 ஆயிரத்து 245 வழக்குகள் விசாரணை நிலையிலும் இருக் கிறது' என்று கூறியிருந்தார். கால அவகாசம் இந்த மனு ஐகோர்ட்டில் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, தமிழக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கூடுதல் செயலாளர் சித்தார்த்தன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 'மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர், மாவட்ட நுகர்வோர் மன்றங்களில் காலியாக உள்ள தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகிய பதவிகளை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, காலிப்பணியிடங்களை நிரப்ப 2 மாதம் கால அவகாசம் வழங்கியது. உத்தரவாதம் இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, மாநில, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் காலியாக உள்ள பணியிடங் களை 2 வாரத்துக்குள் நிரப்பப்படும்' என்று உத்தரவாதம் அளித்து, காலஅவகாசம் கேட்டார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்

No comments:

TRB