Friday, 4 November 2016

வக்கீல்கள் அனைவரும் கல்வி சான்றிதழ்களை 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் தமிழ்நாடு பார் கவுன்சில் அறிவிப்பு

வக்கீல்கள் அனைவரும் கல்வி சான்றிதழ்களை 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் தமிழ்நாடு பார் கவுன்சில் அறிவிப்பு
வக்கீல்கள் அனைவரும் 30-ந் தேதிக்குள் தங்களது கல்வி சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிவித்துள்ளது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், பார் கவுன்சிலை நிர்வகிக்க அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துகுமாரசாமி தலைமையில் நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில், பார் கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஏ.செல்வம், துணை தலைவர் எஸ்.அமல்ராஜ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.இந்த நிலையில், உறுப்பினர்கள் ஏ.செல்வம், எஸ்.அமல்ராஜ் ஆகியோர் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-அகில இந்திய பார் கவுன்சில் புதிதாக வகுத்துள்ள விதிகளின்படி, வக்கீல்கள் ஒவ்வொருவரும் தங்களது கல்விச் சான்றிதழ்களுடன் அனைத்து விவரங்களையும் பார் கவுன்சிலில் வருகிற 30-ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.தற்போது தமிழகத்தில் 90 ஆயிரம் வக்கீல்கள் உள்ளனர். இதில், 15 ஆயிரம் பேர், 2010-ம் ஆண்டுக்கு பின்னர் வக்கீலாக பதிவு செய்தவர்கள். இவர்களது உண்மை சான்றிதழ்கள் அனைத்தையும் அகில இந்திய பார் கவுன்சில் ஏற்கனவே சரிபார்த்துவிட்டது. எனவே, இந்த 15 ஆயிரம் பேரும், வக்கீல் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்றதற்கான ஆதார ஆவணங்களை மட்டும் வருகிற 30-ந் தேதிக்குள் சமர்பிக்கவேண்டும்.அதுபோல 1976-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்கு பின்னர், வக்கீலாக பதிவு செய்தவர்கள், தங்களது கல்வித்தகுதியின் உண்மைத்தன்மையை சரிபார்ப்பதற்காக தங்களது கல்விச் சான்றிதழ்களை பார் கவுன்சிலில் வரும் நவம்பர் 30-ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 583 வக்கீல்கள் தொடர்பாக எந்த ஆவணமும் பார் கவுன்சிலில் இல்லை. அவர்கள் போலியானவர்களா? இல்லையா? என்பது அவர்கள் சமர்ப்பிக்கும் சான்றிதழ்களைப் பொருத்தே முடிவு செய்யப்படும்.இம்மாத இறுதிக்குள் கல்வித் தகுதிக்கான சான்றிதழ்களை ஒப்படைக்காத வக்கீல்கள், வக்கீல் பணியைத் தொடர விரும்பாதவர்கள் என்ற பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.இந்த பட்டியலில் வைக்கப்படும் வக்கீல்கள், எந்த ஒரு வக்கீல்கள் சங்க தேர்தலிலும் ஓட்டுப்போட முடியாது. வக்கீலாக பதிவு செய்து தற்போது, பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களும், தங்களது கல்விச்சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும்.தகுதியான வக்கீல்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டை பார் கவுன்சில் சார்பில் வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

No comments:

TRB