Sunday, 20 November 2016

31-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் புத்தக கண்காட்சி 180 வகையான பாடத்திட்ட புத்தகங்கள் இடம்பெற்றன

31-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் புத்தக கண்காட்சி 180 வகையான பாடத்திட்ட புத்தகங்கள் இடம்பெற்றன | இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 31-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள மண்டல மையத்தில் நேற்று புத்தக கண்காட்சி நடைபெற்றது. 180 வகையான பாடத்திட்டங்கள் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 31-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள பல்கலைக்கழக மண்டல மையத்தில்   புத்தக கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொடுக்கப்படும் 180 பாடத்திட்டங்களில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் அதை சார்ந்த துறை சம்பந்தமான அறிவுத் திறனை மேம்படுத்தும் புத்தகங்கள் உள்பட பல புத்தகங்கள் இடம்பெற்றன. இதனை தொடர்ந்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்கலைக்கழகம் வளர்ந்து வந்த பாதை மற்றும் வருங்காலங்களில் பல்கலைக்கழகத்தையும், அதில் பயிலும் மாணவர்களையும் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதற்கு எந்த விதமான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வயதுவரம்பு இல்லை இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் சென்னை மண்டல இயக்குனர் எஸ்.கிஷோர் கூறியதாவது:- இந்திராகாந்தி தேசிய பல்கலைக்கழகம் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பெயரில் 1985-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, இன்றுடன் 31 வருடங்கள் ஆகின்றது. இந்த பல்கலைக்கழகத்தில் 67 மண்டல மையங்களும், 3,000 கல்வி மையங்களும் செயல்படுகிறது. இந்த கல்வி மையத்தில் மேற்படிப்பு படிப்பதற்கு வயது வரம்பு இல்லை. இந்த பல்கலைக்கழகத்தில் இளஞ்சிறார்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் மொத்தம் 180 பிரிவு பாடத்திட்டங்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

TRB