Friday, 11 November 2016

புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிடப்படும்: நிதித்துறை செயலாளர்

புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிடப்படும்: நிதித்துறை செயலாளர் | கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. பொதுமக்கள் தற்போது கையில் வைத்திருக்கும் அந்த நோட்டுக்களை டிசம்பர் 30–ந் தேதிக்குள் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றவும் வசதி செய்யப்பட்டு உள்ளது என்றும்
தெரிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பணப்பரிவர்த்தனை வெகுவாக முடங்கியுள்ளது. இன்று முதல் வங்கிகளில் புதிய ரூ 500, 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் வழங்கப்படுவதால், மக்கள் கூட்டம் வங்கிகளில் காலை முதலே அலைமோதுகிறது. இதற்கிடையே, இன்னும் ஒரு சில மாதங்களில் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய  1000 ரூபாய் நோட்டுக்கள் விநியோகிக்கப்படும் என்று பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகந்த தாஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சக்திகாந்த தாஸ்  இது பற்றி கூறியதாவது:- "புதிய வடிவத்தில் புதிய வண்ணத்தில் இன்னும் சில மாதங்களில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும். புதிய நோட்டுக்கள் அச்சிடுவதற்கான நடைமுறைகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. ரிசர்வ் வங்கியில் உள்ள ஒரு சில நபர்கள் மட்டுமே புதிய ரூபாய் தாள்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

TRB