Sunday, 20 November 2016

இயற்கை மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில் எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவ கல்லூரியை சேர்க்கவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

இயற்கை மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில் எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவ கல்லூரியை சேர்க்கவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு | இயற்கை மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில் எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவ கல்லூரியை சேர்க்கவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நோட்டீசு விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரி நிறுவப்பட்டுள்ளது. அந்தக் கல்லூரியின் அருகில் உள்ள கிணற்றில் 3 மாணவிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இந்த சம்பவத்தையடுத்து, எஸ்.வி.எஸ். கல்லூரியின் இணைப்பை ரத்து செய்வது தொடர்பாக அந்தக் கல்லூரிக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் நோட்டீசு அனுப்பியது. காலி இடங்கள் இந்த நிலையில், கல்லூரி சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2016-17-ம் கல்வியாண்டுக்கான ஐந்து ஆண்டு இயற்கை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் பட்டியலில் எஸ்.வி.எஸ். கல்லூரியை சேர்க்கவேண்டும் என்று அதில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை நீதிபதி ராஜேந்திரன் விசாரித்தார். அப்போது அரசுத் தரப்பில், இயற்கை மருத்துவ கல்லூரிகளில் காலி இடங்களை நவம்பர் 30-ந் தேதிக்குள் நிரப்ப இருப்பதாக கூறப்பட்டது. இடைக்கால உத்தரவு அதைத்தொடர்ந்து நீதிபதி, "எஸ்.வி.எஸ். கல்லூரியை 2016-17-ம் ஆண்டு கவுன்சிலிங்கில் சேர்க்கவேண்டும். இந்த இடைக்கால உத்தரவின்படி நடக்கும் மாணவர் சேர்க்கை என்பது, வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்பதை மாணவர்களிடம் எஸ்.வி.எஸ். கல்லூரி தெரிவிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியோர் அந்தக் கல்லூரியில் நேரில் சென்று ஆய்வு நடத்தவேண்டும்" என்று உத்தரவிட்டார். ஆய்வு எஸ்.வி.எஸ். ஓமியோபதி மருத்துவ கல்லூரிக்கு தற்காலிக இணைப்புக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், நீதிபதி பார்த்திபன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்தக் கல்லூரியை ஆய்வு செய்து முடிவெடுக்கவேண்டும் என்று மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments: