Tuesday, 29 November 2016

ஐடிஎஸ் திட்டத்தின்கீழ் வரி செலுத்த வருவோரிடம் கறுப்பு பண மூலாதாரத்தை கேட்க வேண்டாம் வங்கிகளுக்கு ஐபிஏ அறிவுரை

ஐடிஎஸ் திட்டத்தின்கீழ் வரி செலுத்த வருவோரிடம் கறுப்பு பண மூலாதாரத்தை கேட்க வேண்டாம் வங்கிகளுக்கு ஐபிஏ அறிவுரை | தாமாக முன்வந்து கறுப்புப் பண விவரத்தை அளிக்கும் திட்டத்தின் கீழ் (ஐடிஎஸ்) வருமான விவரத்தை அளித்தவர்கள் முதல் தவணை வரியை செலுத்த வேண்டியுள்ளது. இவ்விதம் வரி செலுத்த வருவோரிடம் கறுப்புப் பணத்துக்கான மூலாதாரத்தைக் கேட்க வேண்டாம் என்று இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. உள்நாட்டில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் தங்களிடம் உள்ள விவரத்தை தெரிவித்து வரி செலுத்த ஐடிஎஸ் எனும் வாய்ப்பை மத்திய அரசு அளித்தது. கடந்த ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நான்கு மாதங்களுக்கு இத்திட்டம் அமலில் இருந்தது. ஐடிஎஸ் திட்டத்தில் கணக்கு தாக்கல் செய்தவர்கள் தாங்கள் தெரிவித்த சொத்தில் 30 சதவீத வரி மற்றும் அபராத வரி மற்றும் சர்சார்ஜ் உள்பட மொத்தம் 45 சதவீதத்தை செலுத்த வேண்டும். நான்கு தவணைகளில் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டது. மத்திய நேரடி வரி விதிப்பு வாரி யம் (சிபிடிடி) இது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் நகலை தனது அறிக்கை யுடன் இணைத்து அனைத்து வங்கி களுக்கும் ஐபிஏ அனுப்பியுள்ளது. சமீபத்தில் பெங்களூரில் ஒருவர் ஐடிஎஸ் திட்டத்தின்கீழ் வரித் தொகையின் முதல் தவணையை வங்கியில் செலுத்த வந்தபோது அதை வங்கி அதிகாரிகள் ஏற்கவில்லை. இது தொடர்பாக அவர் சிபிடிடி-க்கு புகார் கடிதம் அனுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்தே ஐபிஏ இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. வருமான வரித்துறையின் கொள்கை வகுக்கும் பிரிவான சிபிடிடி இது தொடர்பாக அனுப்பி யுள்ள கடிதத்தில் ஐடிஎஸ் திட்டத் தின் கீழ் வரி செலுத்துவோர் முதல் தவணையாக 25 சதவீதத்தை நவம்பர் 30-க்குள் செலுத்தியாக வேண்டும். ஐடிஎஸ் 2016-ன் கீழ் வரி செலுத்துவோரிடம் அதைப் பெறுவதற்கான கால வரை யறையை வங்கிகள் வகுத்துக் கொள்ள வேண்டும். கடைசி தவணை செப்டம்பர் 30, 2017 ஆகும். இதற்கேற்ப ஏற்பாடுகள் செய்யுமாறு வங்கிகளுக்கு சிபிடிடி அறிவுறுத்தியுள்ளது. வரித் தொகையில் 25 சதவீதம் முதல் தவணையாக இம்மாதம் செலுத்த வேண்டும். இது தொடர்பான விவரமான விளம்பரத்தை வருமான வரித்துறை நேற்று முன்னணி நாளிதழ்களில் வெளியிட்டுள்ளது. மொத்தம் 64,275 கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மொத் தம் தெரிவிக்கப்பட்ட கறுப்புப் பணத்தின் அளவு ரூ.65,250 கோடியாகும். இதன் மூலம் அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வரி வருமானம் கிடைக்கும்.

No comments: