Friday, 11 November 2016

ஆசிரியர் தகுதித்தேர்வு விரைவில் அறிவிக்கப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

ஆசிரியர் தகுதித்தேர்வு விரைவில் அறிவிக்கப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன் தகவல் | பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் தயாரித்து முடிக்கப்பட் டுள்ளன. முதல்வர் ஒப்புதல் அளித்ததும் அவை அமல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறியுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் கொரிய குடியரசு அமைப்பு சார்பில் பள்ளிக் கல்வியில்,
தமிழகத்துக்கும் கொரியாவுக்கும் இடையில் இணக்கமான புரிதலை ஏற்படுத்தும் ஒருநாள் கருத்தரங்கம் நேற்று நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கை தொடங்கிவைத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் பேசும்போது, "அடிப் படைக் கல்வியின் முக்கியத்துவம் கருதி ஆண்டுதோறும் பள்ளிக்கல்விக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. இது, தமிழக பள்ளிக்கல்வியை நாட்டில் முதலிடத்துக்கு கொண்டுவர உதவுகிறது. கொரியாவின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு அந்த நாட்டில் வழங்கப்படும் தரமான கல்வியே காரணம். தமிழகத்தில் பள்ளிக்கல்வியின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுவதன் மூலம், அடுத்த தலைமுறையினரை திறமைமிக்கவர்களாக்க முடியும்'' என்றார். விழா முடிவில் நிருபர்களிடம் பேசிய அவர், "பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஒப்புதல் அளித்ததும் அவை விரைவில் நடைமுறைக்கு வரும். ஆசிரியர் தகுதித்தேர்வு விரைவில் அறிவிக்கப்படும்'' என்றார். நிகழ்ச்சியில், கொரிய தூதர் கியுங்சோ கிம், தமிழக பள்ளிக்கல்வி செயலர் சபீதா, கொரிய புரிந்துணர்வு திட்ட தலைவர் கியுங்ரான் சூங், தமிழக அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments: