Monday, 14 November 2016

வங்கி, ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு அதிகரிப்பு

வங்கி, ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு அதிகரிப்பு | வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் எடுக்கும் பண உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல பழைய நோட்டுகளுக்கு பதிலாக ஒரு நாளைக்கு ரூ.4 ஆயிரம் மாற்றிக்கொள்ளலாம் என்பது ரூ.4,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சகம் ஆய்வு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் பழைய நோட்டுகளை வங்கி, தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ளவும், ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கவும் சில நடைமுறைகள் அறிவிக்கப்பட்டன.
இதற்காக ஒவ்வொன்றும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு மட்டும் உச்சவரம்பு இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இந்த நடை முறையால் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களில் மக்கள் கூட்டம் குறைந்ததாக தெரியவில்லை. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவும், பணம் எடுக்கவும் வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் மக்கள் குவிந்துவந்தனர். இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகம் நாடு முழுவதும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தது. உச்சவரம்பு உயர்வு இதுவரை புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டுமே வினியோகிக்கப்பட்டது. இப்போது புதிய 500 ரூபாய் நோட்டுகளும் வினியோகிக்க தயாராகிவிட்டதால் உச்சவரம்பை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. ஆய்வுக்கு பின்னர் பணம் எடுப்பது மற்றும் மாற்றுவதற்கான உச்சவரம்பை மத்திய நிதி அமைச்சகம் உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி வங்கிகளில் தினமும் பழைய நோட்டுகளை மாற்றித்தருவதற்கான உச்சவரம்பு ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.4,500 ஆக உயர்த்தப்பட்டது. ஏ.டி.எம்.களில் ரூ.2,500 வங்கிகளில் ஒரு நாளைக்கு கணக்கில் பணம் எடுப்பது ரூ.10 ஆயிரம் என்ற வரம்பு விலக்கிக்கொள்ளப்பட்டது. வங்கிகளில் வாரத்துக்கு ரூ.20 ஆயிரம் எடுக்கலாம் என்பது ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.டி.எம்.களில் தினமும் ரூ.2 ஆயிரம் எடுக்கலாம் என்று இருந்த வரம்பு தினமும் ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. கிராம பகுதிகளிலும் பணம் வினியோகிக்க ஏதுவாக வங்கி பணபரிமாற்ற வாகனங்களை பயன்படுத்த வேண்டும். அனைத்து வங்கிகளும் இந்த உத்தரவுகளை அமல்படுத்தும்படி நிதி அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஓய்வுபெற்றவர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆண்டு சான்றிதழை நவம்பர் மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்பதும் ஜனவரி 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

TRB