Tuesday, 13 December 2016

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் செயல்படும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 14.12.2016 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் செயல்படும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் 14.12.2016 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வர்தா புயல் தாக்கியதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் பாதித்த பல பகுதிகளில் மின்விநியோகம் இன்னும் சீராகவில்லை. சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, புயல் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிகல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

No comments: