Tuesday, 6 December 2016

முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி 6ம் தேதி முதல் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்று ராஜ்பவன் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி 6ம் தேதி முதல் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்று ராஜ்பவன் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கவர்னர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை(5ம் தேதி) இரவு 11.30 மணிக்கு காலமானார் என்பதை தமிழக அரசு மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறது. இதையொட்டி 6ம் தேதி முதல் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் இந்த நாட்களில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் இந்த 7 நாட்களும் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது. இவ்வாறு தமிழக (பொ) கவர்னர் வித்யாசாகர் ராவ் சார்பில் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

TRB