Thursday, 15 December 2016

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு | தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு | தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இதன்படி கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள், ஆசிரியர்கள், கிராம செவிலியர்கள் பயன்பெறுவர். மேலும் கடந்த ஜூலை மாதம் முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். இதன்மூலம் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன்பெறுவர். 7 சதவீதம் அறிவிப்பால் அகவிலைப்படி 125 -ல் இருந்து 132 சதவீதமாக உயரும். என முதல்வர் அறிவித்துள்ளார். கூடுதல் செலவு அகவிலைப்படி உயர்வால் ஆண்டு ஒன்றிற்கு தோராயமாக கூடுதல் செலவாக ரூ. ஆயிரத்து 833 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் நவ.,30 வரையிலான அகவிலைப்படி உயர்வு வங்கி கணக்கில் செலுத்தப்படும். டிசம்பர் மாத சம்பளத்துடன் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். ஊதிய உயர்வு கிடைக்கும் அகவிலைப்படி உயர்வு மூலம் அரசு ஊழியர்களுக்கு ரூ.427 முதல் 5 ஆயிரத்து 390வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.ஓய்வூதியதாரர்கள் ரூ.214 முதல் 2 ஆயிரத்து 695 வரையில் ஊதிய உயர்வு கிடைக்கும்.

No comments: