Saturday, 3 December 2016

தமிழகத்தில் பாடத்திட்டத்தை மேம்படுத்தக் கோரி வழக்கு

தமிழகத்தில் பாடத்திட்டத்தை மேம்படுத்தக் கோரி வழக்கு | தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடத்திட் டத்தின் தரத்தை மேம்படுத்தக் கோரிய வழக்கில் உள்துறை, பள்ளிக் கல்வித் துறை பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புறங் களில் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வி வசதி முழுமையாக வழங்கப்படாததால், மாணவர் கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாடத்திட்டங்களில் உரிய மாற்றம் கொண்டுவர வேண்டும் என அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படை யில் உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் (ஜூடிசியல்) பொதுநலன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையில் அறிமுகம் செய்யப்பட் டுள்ள ஒரே மாதிரியான பாடத் திட்டத்தின் தரத்தை உயர்த்தவும், முறைப்படுத்தவும் தமிழக அர சுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.நாகமுத்து அமர்வு, உள்துறை, கல்வித் துறை முதன் மைச் செயலர்கள், தொடக்கக் கல்வித் துறை, பள்ளிக் கல்வி துணைச் செயலர்கள், பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி இயக்குநர்கள் ஆகியோர் 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

No comments:

TRB