Thursday, 29 December 2016

மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கும் வகையில் ரேஷன் அட்டைகளில் உள்தாள் ஒட்டப்படும் தமிழக அரசு அதிகாரி தகவல்

மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கும் வகையில் ரேஷன் அட்டைகளில் உள்தாள் ஒட்டப்படும் தமிழக அரசு அதிகாரி தகவல் | ரேஷன் அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கும் வகையில் அவற்றில் உள்தாள் ஒட்டப்படும் என்று தமிழக அரசு அதிகாரியின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணையருக்கு கடிதம் தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- பொதுவினியோகத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் புழக்கத்தில் உள்ள ரேஷன் அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 1-1-17 முதல் 31-12-17 வரை மேலும் ஓராண்டுக்கு நீடிப்பது தொடர்பாக இந்தக் கடிதம் அனுப்பப்படுகிறது. மேலும் ஓராண்டுக்கு... தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் அட்டைகளில் உள்தாளை இணைத்து அந்த ரேஷன் அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 1-1-17 முதல் 31-12-17 வரை நீடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக அச்சிடப்படும் உள்தாள்களை சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் அட்டைதாரருக்கு வழங்கவேண்டும். அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும்போது அவர்களுடைய ரேஷன் அட்டையில் 2017-ம் ஆண்டுக்கான உள்தாளை இணைக்கவேண்டும். அதற்கு ஆதாரமாக, "2017-ம் ஆண்டுக்கான உள்தாளை பெற்றுக்கொண்டேன்" என்ற ரப்பர் முத்திரையிட்டு அதன் கீழே ரேஷன் அட்டைதாரரின் கையொப்பம் அல்லது இடதுகை பெருவிரல் ரேகையை ரேஷன் கடை பணியாளர் பெறவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: