Saturday, 31 December 2016

BHABHA ATOMIC RESEARCH CENTRE RECRUITMENT 2017 | BARC - KALPAKKAM | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - SCIENTIFIC OFFICER (MEDICAL) | NO. OF VACANCIES 5+1+2+4 | LAST DATE 31.01.2017

>> Employment Type  : Govt Job
>> Application : Online
>> Website : http://www.barc.gov.in/
>> Name of the Post  : SCIENTIFIC OFFICER (MEDICAL)
>> கல்வித் தகுதி  : AS PER NORMS
>> காலியிடங்கள் : 5+1+2+4
>> சம்பளம் : AS PER NORMS
>> தேர்வு செய்யப்படும் முறை : MERIT
>> கடைசித் தேதி  : 24.01.2017
>> தேர்வு நாள்  :


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

BHABHA ATOMIC RESEARCH CENTRE RECRUITMENT 2017 | BARC - KALPAKKAM | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - ASST, LAB ASST, OPERATOR | NO. OF VACANCIES 86+13 | LAST DATE 31.01.2017

>> Employment Type  : Govt Job
>> Application : Online
>> Website : http://www.barc.gov.in/
>> Name of the Post  : ASST, LAB ASST, OPERATOR 
>> கல்வித் தகுதி  : AS PER NORMS
>> காலியிடங்கள் : 86+13
>> சம்பளம் : AS PER NORMS
>> தேர்வு செய்யப்படும் முறை : MERIT
>> கடைசித் தேதி  : 31.01.2017
>> தேர்வு நாள்  :


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க புதிய விதிமுறைகள் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பேட்டி

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க புதிய விதிமுறைகள் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பேட்டி | பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையில் புதிய விதிமுறைகள் பல கொண்டுவரப்பட்டு இருப்பதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பி.கே.அசோக் பாபு தெரிவித்தார். சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பி.கே.அசோக் பாபு சென்னை சாஸ்திரிபவனில் உள்ள பத்திரிகையாளர் அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விதி தளர்த்தப்பட்டது பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் பல்வேறு ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 100 விண்ணப்பங்கள் வருகிறது என்றால், அதில் 20 முதல் 30 விண்ணப்பங்களில் சரியான ஆவணங்கள் இல்லாததால் அதை நிறைவு செய்வதில் குறைபாடு ஏற்படுகிறது. இதுபோன்ற குறைவுகளை நிவர்த்தி செய்ய பல்வேறு புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, முன்பு 1989-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் பிறந்த தேதி சான்றிதழை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அந்த விதிமுறையை தளர்த்தி உள்ளோம். ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் பிறந்த தேதி சான்றிதழ் வைத்திருந்தால் அவர்கள் அதை சமர்ப்பிக்கலாம். அப்படி இல்லாதபட்சத்தில் பள்ளி சான்றிதழ், மெட்ரிகுலேசன் சான்றிதழ், ஆதார் அட்டை, பான்கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பொது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பத்திரம் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல், விண்ணப்பதாரர் தாய் அல்லது தந்தையரிடம் வளர்ந்து இருக்கலாம். அவர்கள் யாராவது ஒருவரின் பெயரை குறிப்பிட விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறினால் அவர்கள் அந்த பெயரை குறிப்பிட தேவையில்லை. ஆனால் முன்பெல்லாம் தாய், தந்தை இருவரின் பெயரையும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய கட்டாயம் இருந்தது. விண்ணப்பதாரர் பின் இணைப்புகளாக இணைக்கும் ஆவணங்களில் நோட்டரி பப்ளிக், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஆகியோரிடம் கையெழுத்து வாங்கி வர வேண்டும். ஆனால் தற்போது விண்ணப்பதாரர்களே அந்த பின் இணைப்புகளில் சுய கையெழுத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இனி நோட்டரி பப்ளிக், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஆகியோரிடம் கையெழுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. திருமண சான்றிதழ் திருமண சான்றிதழ் என்பது முன்பு கண்டிப்பாக இணைக்க வேண்டும். தற்போது அதை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆதரவற்றோர் குழந்தைகள் பாஸ்போர்ட் விண்ணப்பித்தால் அவர்கள் பிறந்த தேதி குறித்து அந்த காப்பகத்தின் இருக்கும் மேலதிகாரி இந்த தேதியில் தான் அவர் பிறந்தார் என்று உறுதி செய்தால் நாங்கள் அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வோம். மணவாழ்க்கைக்கு வெளியே பிறந்த குழந்தைகள் விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. தற்போது அவர்களுக்கு எளிமையாக்கப்பட்டு இருக்கிறது. பின் இணைப்பு 'ஜி'-யில் அவர்கள் கையெழுத்திட்டு வழங்கினால் போதும். இதேபோல், அரசு வேலையில் இருப்பவர்கள் தடையில்லா சான்றிதழ் (என்..சி.) வாங்கி அதை வழங்க வேண்டும். ஆனால் அவர் இனிமேல் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, அரசிடம் விண்ணப்பிப்பது தொடர்பாக தெரிவித்துவிட்டேன் என்று எழுதி கொடுத்தால் போதும். இதுபோல் பல்வேறு விதமான புதிய விதிமுறைகள் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி, காரைக்கால்... ஆன்-லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று பலர் கூறுகிறார்கள். அதை எளிதாக்கும் வகையில், அரசு -சேவை மையத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கும் வழி ஏற்படுத்தி இருக்கிறோம். ஆனால் பலருக்கு அது தெரிவதில்லை. புதுச்சேரி, காரைக்காலில் மினி பாஸ்போர்ட் சேவை மையம் அமைத்தோம். பாஸ்போர்ட் வழங்குவதில் , பி, சி என 3 முறைகள் உள்ளன. அதில் முதல் 2 முறைகளை புதுச்சேரி, காரைக்காலில் செய்தாலும் இறுதியாக சென்னைக்கு வந்தால் தான் பாஸ்போர்ட்டை பெற முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது புதுச்சேரி, காரைக்காலில் 3 முறைகளையும் நிறைவு செய்து பாஸ்போர்ட் பெறுவதற்கான வசதியை செய்து இருக்கிறோம். அதை வருகிற 2-ந்தேதி முதல் தொடங்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டாக்டர் அம்பேத்கர் தேசிய விருது | விண்ணப்பிக்க அழைப்பு.

டாக்டர் அம்பேத்கர் தேசிய விருது | விண்ணப்பிக்க அழைப்பு.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆதார் அட்டையை பயன்படுத்தி கை பெருவிரல் ரேகை மூலம் பண பரிமாற்றம் செய்யும் முறை 2 வாரங்களில் தொடங்க இருப்பதாக பிரதமர் மோடி அறிவிப்பு

ஆதார் அட்டையை பயன்படுத்தி கை பெருவிரல் ரேகை மூலம் பண பரிமாற்றம் செய்யும் முறை 2 வாரங்களில் தொடங்க இருப்பதாக பிரதமர் மோடி அறிவிப்பு | ஆதார் அட்டையை பயன்படுத்தி, கை பெருவிரல் ரேகை மூலம் பண பரிமாற்றம் செய்யும் முறை இன்னும் 2 வாரங்களில் தொடங்க இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். புதிய செல்போன் செயலி டெல்லியில் உள்ள தல்கதோரா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 'டிகிதன்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மின்னணு பண பரிமாற்றத்துக்கான 'பீம்' ('பாரத் இன்டர்பேஸ் பார் மணி') என்ற புதிய செயலியை தொடங்கிவைத்தார். செல்போன் மூலம் பணம் செலுத்த உதவும் இந்த செயலிக்கு, அரசியல் சட்டத்தை உருவாக்கிய பீமராவ் அம்பேத்கரின் நினைவாக 'பீம்' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த முறையில் பொருட்கள் வாங்குவதற்கு இணையதள வசதியுடன் கூடிய தொலைபேசி இணைப்பு தேவை இல்லை. ஆனால் வியாபாரிகள் ரொக்கமில்லா ஆதார் வணிக செயலியை தங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து, அந்த ஸ்மார்ட் போனை கைவிரல் ரேகை பதிவு கருவியுடன் இணைக்கவேண்டும். வாடிக்கையாளர் தனது ஆதார் அடையாள அட்டை எண்ணை இந்த செயலியுடன் இணைப்பதோடு, எந்த வங்கியில் உள்ள கணக்கின் மூலம் பணம் செலுத்தப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும். கை பெருவிரல் ரேகை இந்த முறையில் பொருட்கள் வாங்கி வங்கி கணக்கின் மூலம் பணம் செலுத்துவதற்கு வாடிக்கையாளரின் கை பெருவிரல் ரேகைதான் கடவுச் சொல்லாக ('பாஸ்வேர்டு') ஆக பயன்படும். மாஸ்டர் கார்டு, விசா கார்டு போன்ற பண அட்டைகளை பயன்படுத்தி 'பீம் செயலி' உதவியுடன் பொருட்களை வாங்குவோர் அதற்கான சேவை கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது இல்லை. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:- நாட்டில் ரொக்கமில்லா பண பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. ரொக்கமில்லா பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் சமீபத்தில் நுகர்வோருக்கான லக்கி கிரகாக் யோஜனா (அதிர்ஷ்ட நுகர்வோர் திட்டம்), சிறு வணிகர்களுக்கான டிகிதன் வியாபார் யோஜனா (டிகி பணவர்த்தக திட்டம்) என்ற இரு பரிசு திட்டங்களை நான் அறிவித்தேன். நாட்டில் விரைவில் அனைத்து பணபரிமாற்றங்களும் 'பீம் செயலி'யின் மூலமே நடைபெறும். இந்த பீம் செல்போன் செயலி தலித்துகளுக்கும், பழங்குடியின மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிகாரம் வழங்குவதாக அமையும். 2 வாரங்களில்... வாடிக்கையாளரின் கை பெருவிரல் ரேகை மூலம் பண பரிமாற்றம் நடைபெறுவதால் இது மிகவும் பாதுகாப்பான பண பரிமாற்ற முறை ஆகும். இது படிக்காத பாமர மக்களுக்கும் வசதியான பரிமாற்ற முறை. மக்களின் கை பெருவிரல் ரேகையே இனி அவர்களுடைய வங்கியாகவும், அடையாளமாகவும், வணிகமாகவும் செயல்படப் போகிறது. இந்த முறையில் பண பரிமாற்றம் செய்யும் முறை நாடு முழுவதும் இன்றும் 2 வாரங்களில் தொடங்க இருக்கிறது. ரொக்கமற்ற பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொருவரும் தினசரி குறைந்தபட்சம் 5 மின்னணு பணபரிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும். ஊழல் பெருச்சாளிகள் உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை ஒழித்த நடவடிக்கையை, மத்திய அரசு மலையை தோண்டி வெறும் பெருச்சாளிகளை மட்டும் பிடித்து இருப்பதாக சில அரசியல்வாதிகள் குறை கூறி உள்ளனர். அவர்கள் சொல்வதும் ஒருவகையில் சரிதான். மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொள்ளையடித்த ஊழல் பெருச்சாளிகளை நாங்கள் பிடிக்க விரும்புகிறோம். அதற்கான நடவடிக்கையை தற்போது எடுத்து உள்ளோம். மின்னணு பணபரிமாற்றத்தை ஊக்குவிப்பதில் ஊடகங்களின் பங்களிப்பும் முக்கியமானதாக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். பரிசுத்தொகை இந்த நிகழ்ச்சியில், மின்னணு பண பரிமாற்ற பரிசுத்திட்டத்தில் வெற்றி பெற்றோருக்கு பிரதமர் மோடி பரிசுத்தொகை வழங்கினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மகாளாய அமாவாசை தினம் வரையறுக்கப்பட்ட விடுமுறை அரசாணை வெளியீடு

மகாளாய அமாவாசை தினம் வரையறுக்கப்பட்ட விடுமுறை அரசாணை வெளியீடு | பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் (பொறுப்பு) ஹர்மந்தர் சிங் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மாநில அரசு பணியாளர்கள் ஒரு ஆண்டில் பண்டிகைகள் அல்லது நிகழ்வுகள் என்ற வகையில் 3 வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களை (ஆர்.எச்.) பெற்றுக்கொள்ளலாம். பகவான் வைகுண்டசாமியின் பிறந்த தினம் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களில் சேர்க்கப்பட்டது. இறந்துபோன உறவினர்களை நினைக்கக்கூடிய நிகழ்ச்சிகளான கல்லறை திருநாள் என்ற கிறிஸ்தவ மத நிகழ்வையும், ஷபே பாரத் என்ற இஸ்லாமியர்களின் முழுநிலவு நிகழ்ச்சியையும் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள் பட்டியலில் சேர்க்கும்படி கோரிக்கை விடப்பட்டது. அதன்படி அந்த நிகழ்வுகள் சேர்க்கப்பட்டன. அதேபோல இந்துக்களும் மகாளாய அமாவாசை தினத்தையும் வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அரசு இந்தக் கோரிக்கையை ஏற்று மகாளாய அமாவாசை தினம் வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜனவரி 1 முதல் ஏ.டி.எம்.மில் ரூ.4,500 எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஜனவரி 1 முதல் .டி.எம்.மில் ரூ.4,500 எடுக்கலாம் | கருப்பு பண ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கடந்த நவம்பர் 8-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக ஒழித்தார். இதனால் கடும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் .டி.எம். மையங்களில் ஒரு நாளைக்கு ரூ.2,000 மட்டுமே எடுக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் அது ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டது. இருப்பினும் பெரும்பாலான .டி.எம். மையங் கள் மூடியே கிடக்கின்றன. பணம் இருக்கும் மையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதற்கிடையே நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆங்கில புத்தாண்டையொட்டி பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு அறிவிப்பு ஏதும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நாளை (1-ந்தேதி) முதல் .டி.எம்.மில் ஒரு நாளுக்கு ரூ.4,500 எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி நேற்று இரவு திடீரென அறிவித்தது. ரூபாய் நோட்டு ஒழிப்பால் சிரமப்பட்டு வரும் மக்களுக்கு இது சற்று ஆறுதலை தருவதாக அமைந்துள்ளது. அதே சமயத்தில், வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் வரை மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்படவில்லை. அந்த உச்ச வரம்பு நீடிக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் .டி.எம்.மில் பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 30 December 2016

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள் | வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள். நேரடித் தனித்தேர்வர்கள் அனைவரும் முதல் மொழித்தேர்வாக தமிழ் மொழித்தேர்வை எழுதவேண்டும். வெளிமாநிலங்கள் அல்லது சி.பி.எஸ்.இ. முறையில் படித்தவர்கள் உரிய கல்வி அலுவலரின் மேலொப்பத்துடன் மாற்றுச்சான்று வைத்து விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேராமல் விடுபட்ட தனித்தேர்வர்கள் ஜனவரி 3-ந் தேதி வரை அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பதிவு செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் அவர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்படும் தேர்வு மையத்தில் தான் தேர்வு எழுதவேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

AAVIN RECRUITMENT 2016 | AAVIN - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - MANAGER AND DEPUTY MANAGER | NO. OF VACANCIES 3 | LAST DATE 12.01.2017

AAVIN RECRUITMENT 2016 | AAVIN - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - MANAGER AND DEPUTY MANAGER | NO. OF VACANCIES 3 | LAST DATE 12.01.2017
>> Employment Type :Govt Job
>> Application :Offline
>> Name of the Post : MANAGER AND DEPUTY MANAGER
>> கல்வித் தகுதி : DEGREE
>> காலியிடங்கள் : 2+1
>> சம்பளம் : 9300-34800+4700
>> தேர்வு செய்யப்படும் முறை : Merit
>> கடைசித் தேதி : 27.01.2017
>> தேர்வு நாள் : -


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ரூ.7 லட்சம் கோடி டெபாசிட் செய்துள்ள 60 லட்சம் பேர் பட்டியல் தயார் கருப்பு பணத்தை டெபாசிட் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என எச்சரிக்கை

ரூ.7 லட்சம் கோடி டெபாசிட் செய்துள்ள 60 லட்சம் பேர் பட்டியல் தயார் கருப்பு பணத்தை டெபாசிட் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என எச்சரிக்கை | ரூ.7 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள 60 லட்சம் பேரின் பட்டியல் வருமான வரித்துறையினருக்கு கிடைத்துள்ளது. கருப்பு பணத்தை டெபாசிட் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கருப்பு பணம் ஒழிப்பு கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி அறிவித்தார். மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும், தங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. அதேசமயம் கணக்கில் வராத கருப்பு பணம் அதிகளவில் வைத்திருப்பவர்கள் தங்கள் வருமானத்தை காட்டினால் அதற்கு 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டது. எஞ்சிய 50 சதவீதத்தில் 25 சதவீதத்தை வட்டியில்லாத டெபாசிட்டாக 4 ஆண்டுகளுக்கு வங்கியில் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 60 லட்சம் பேரின் பட்டியல் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்பவர்கள் வருமான வரி மற்றும் இதர புலனாய்வு நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை ரூ.7 லட்சம் கோடி டெபாசிட் செய்துள்ள 60 லட்சம் பேரின் பட்டியலை வருமான வரித்துறை சேகரித்துள்ளது. வங்கிகளில் செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு இன்றே (வெள்ளிக்கிழமை) கடைசி நாள். அதன் பின்னர் மார்ச் மாதம் 31-ந் தேதி வரை ரிசர்வ் வங்கியில் பிரமாண பத்திரத்துடன் டெபாசிட் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசு எச்சரிக்கை சிலர் தங்கள் கருப்பு பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து வெள்ளையாக்கிவிட்டோம் என்று நினைத்து இருந்தால் அவர்கள் தப்ப முடியாது என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- உண்மையான வங்கி டெபாசிட்தாரர்கள் யாரையும் அரசு தொந்தரவு செய்யாது. அதேசமயம் கருப்பு பணத்தை டெபாசிட் செய்து வெள்ளையாக்கியவர்கள் யாரும் தப்ப முடியாது. அரசு அறிவித்த தாமாக முன்வந்து வருமானத்தை தெரிவிக்கும் திட்டத்தை பயன்படுத்தாதவர்கள் நிச்சயம் பிடிபடுவார்கள். ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம் அதற்கும் மேல் டெபாசிட் செய்தவர்களின் எண்ணிக்கை, டெபாசிட் செய்த தொகை போன்ற தினசரி தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது. அவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றிய தகவல்களுடன் ஒப்பிட்டு பார்ப்போம். எனவே அவர்கள் தாமாக முன்வந்து வருமானத்தை தெரிவிக்கும் திட்டத்தில் சேருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அப்படி அவர்கள் செய்யவில்லை என்றால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. தப்ப முடியாது அதேபோல பல வங்கிகளில் கணக்குகள் வைத்துள்ள டெபாசிட்தாரர்கள், மற்றவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தியவர்கள் போன்றவர்களையும் கண்காணித்து வருகிறோம். வரி ஏய்ப்பாளர்கள் யாரையும் வரித் துறை தப்பவிடாது. 60 லட்சம் தனிநபர்கள், கம்பெனிகள், நிறுவனங்கள் ரூ.7 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட் செய்துள்ள தகவல்கள் எங்களிடம் உள்ளது. இது வியப்புக்குரிய தொகை. இதில் தனிநபர்கள் மட்டும் 3 முதல் 4 லட்சம் கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்துள்ளனர். வரித்துறையின் நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டு அல்லது வருகிற ஆண்டுகளில் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNCSC RECRUITMENT 2016 | TNCSC - CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - COMPANY SECRETARY | NO. OF VACANCIES - 1 | LAST DATE 04.02.2017

TNCSC RECRUITMENT 2016 | TNCSC - CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST -  COMPANY SECRETARY  | NO. OF VACANCIES - 1 | LAST DATE 04.02.2017
>> Employment Type :Govt Job
>> Application :Offline
>> Name of the Post : COMPANY SECRETARY
>> கல்வித் தகுதி : DEGREE
>> காலியிடங்கள் : 1
>> சம்பளம் : 15600-39100+5400
>> தேர்வு செய்யப்படும் முறை : Merit
>> கடைசித் தேதி : 04.02.2017
>> தேர்வு நாள் : Later

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர் வாழ் சான்றிதழை 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் வருங்கால வைப்புநிதி கழகம் அறிவிப்பு

ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர் வாழ் சான்றிதழை 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் வருங்கால வைப்புநிதி கழகம் அறிவிப்பு | ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர் வாழ் சான்றிதழ், மறுமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கான சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வருகிற ஜனவரி மாதம் 15-ந் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. வங்கியில் நெரிசலை தவிர்க்கும் வகையில் ஓய்வூதியர்கள் 'ஜீவன் பிரம்மான் போர்ட்டல்' என்ற இணையதளம் வழியாக சமர்ப்பிக்கலாம். இந்த வசதியை பொது சேவை மையம், அரசின் இ-சேவை மையங்கள் வழியாகவும் பெறலாம். பி.எப். அலுவலகத்தையும் அணுகலாம். இந்த மையங்களுக்கு செல்லும்போது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஓய்வூதிய வழங்கு ஆணை, செல்போன் ஆகியவற்றை கொண்டு செல்லவேண்டும். மேற்கண்ட தகவல்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழக மண்டல ஆணையாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

செல்லாத நோட்டுகளை வங்கியில் செலுத்த இன்று கடைசி நாள் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு 1-ந் தேதி முதல் தளர்த்தப்படுகிறது மத்திய மந்திரி தகவல்

செல்லாத நோட்டுகளை வங்கியில் செலுத்த இன்று கடைசி நாள் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு 1-ந் தேதி முதல் தளர்த்தப்படுகிறது மத்திய மந்திரி தகவல் | வங்கிகளில் பழைய ரூ.500, 1000 நோட்டுகளை செலுத்துவதற்கான காலக்கெடு இன்று (வெள்ளிக்கிழமை) முடிகிறது. ஜனவரி 1-ந் தேதி முதல், பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய மந்திரி சந்தோஷ் கங்வார் தெரிவித்தார். பிரதமர் மோடி அறிவிப்பு இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி அதிரடியாக அறிவித்தார். வங்கி கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ந்தேதி (இன்று) வரை செலுத்தலாம் என்ற காலக்கெடுவையும் அவர் விதித்தார். மத்திய அரசு வழங்கிய 52 நாள் கால அவகாசம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிகிறது. ரிசர்வ் வங்கியில்... வங்கி கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு கடைசிநாளான இன்று மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே வங்கிகள் கூடுதல் நேரம் இயங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. வங்கிகளில் செல்லாத பழைய ரூபாய்களை டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தாலும், ரிசர்வ் வங்கியில் மார்ச் 31-ந் தேதிவரை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் பழைய ரூபாய் நோட்டுகள் எப்படி வந்தது? என்பதற்கான ஆதாரத்தை ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது இதற்கிடையே, வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு, ஜனவரி 1-ந் தேதியில் இருந்து தளர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய நிதித்துறை இணை மந்திரி சந்தோஷ் கங்வார் நேற்று தெரிவித்தார். ஒரு தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான 4 அச்சகங்களிலும் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. தினந்தோறும் 25 கோடி முதல் 30 கோடி எண்ணிக்கை கொண்ட புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வருவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசவுகரியங்கள், டிசம்பர் 30-ந் தேதிக்கு பிறகு குறையும். ஜனவரி 1-ந் தேதியில் இருந்து, பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீடிக்க வேண்டிய அவசியம் இருக்காது. அந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. புதிய ரூ.500 நோட்டு புதிய ரூபாய் நோட்டுகள் போதுமான அளவுக்கு முன்கூட்டியே அச்சிடப்படாததற்கு என்ன காரணம் என்றால், செல்லாத நோட்டு பற்றிய அறிவிப்பு, முன்கூட்டியே கசிந்து விடும் என்பதால்தான். அதிலும், புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி, நவம்பர் 10-ந் தேதிக்கு பிறகுதான் தொடங்கியது. முற்றிலும் ரொக்கம் இல்லா பரிமாற்றத்தை கொண்டு வருவது அரசின் நோக்கம் அல்ல. குறைந்த அளவில் ரொக்கத்தை பயன்படுத்தும் முறையை கொண்டு வருவதற்கே முயன்று வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE
  1. NEET UG 2017 OFFICIAL NOTIFICATION | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்
  2. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்
  3. NEET(UG) - 2017 | CBSE to conduct exam on May 7 | NEET 2017 Latest News – Application Form, Exam Date, Syllabus, Pattern, Eligibility Criteria, Cut Off, Admit Card, Results @ http://cbseneet.nic.in/cbseneet/welcome.aspx
  4. TEACHERS RECRUITMENT 2017 | AEES Kalpakkam (Tamil Nadu) | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - PGT-GT-SPECIAL TEACHERS | NO. OF VACANCIES - MANY
  5. பிளஸ்-2 தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை 2-ந்தேதி வரை பெறலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
  6. TIDCO RECRUITMENT 2017 | TIDCO-CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - GENERAL MANAGER | NO. OF VACANCIES -1
  7. TANCET 2017 - எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
  8. வெளிநாடு வாழ் இந்தியர் ’நீட்’ தேர்வு எழுதலாமா?
  9. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைய, ஜூன், 30 வரை, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
  10. சிறப்பு பாஸ்போர்ட் மேளா 4-ந் தேதி சென்னையில் நடக்கிறது
  11. மத்திய பட்ஜெட் தாக்கல் வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உயருமா?
  12. வரும் கல்வி ஆண்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது புதிய கட்டணம் நிர்ணயிக்க நீதிபதி பாலசுப்ரமணியன் கமிட்டி முடிவு
  13. கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலைக்கு மகன், மகள் என்ற பாகுபாடு கூடாது ஐகோர்ட்டு உத்தரவு
  14. www.cbseneet.nic.in | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்.
  15. NEET UG 2017 OFFICIAL NOTIFICATION
  16. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்
  17. NEET(UG) - 2017 | CBSE to conduct exam on May 7 | NEET 2017 Latest News – Application Form, Exam Date, Syllabus, Pattern, Eligibility Criteria, Cut Off, Admit Card, Results @ http://cbseneet.nic.in/cbseneet/welcome.aspx
  18. TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு விரைவில் முறையான அறிவிப்பு-விண்ணபிக்க கடைசி தேதி 28.02.2017 | தேர்வு நாள் 29.04.2017 & 30.04.2017 | விண்ணப்ப பெற கட்டணம் ரூபாய் 50 | விண்ணபங்கள் கிடைக்கும் இடங்கள் -அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகள் | அச்சடிக்கப்படும் விண்ணப்பங்கள் 11 லட்சம் ..
  19. JIPMER MBBS 2017 ENTRANCE EXAM | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர ஜூன் 4-ம் தேதி நுழைவுத் தேர்வு. மார்ச் 27-ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம்.
  20. ANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.
  21. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், உடற்கல்வி பயிற்சியாளர், ஜியாலஜிஸ்ட் பணிகளுக்கு விரைவில் தேர்வு: அடுத்த வாரம் முதல் தொடர்ந்து அறிவிப்பு வெளியாகும்
  22. TANCET 2017 - எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
  23. TNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது. TNTET – 2017 குறித்த உண்மையான தகவல்களை படியுங்கள்...
  24. TNTET 2017 | ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
  25. ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு விரைவில் ‘ஆதார் பே’ மத்திய அமைச்சர் தகவல்
  26. சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றம்
  27. IT FORM VERSION 2017.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM VERSION 2017.1..... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...
  28. வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு பிப்ரவரி இறுதியில் முற்றிலும் நீங்கும் வங்கி மூத்த அதிகாரி தகவல்
  29. பிப்ரவரி 24-ம் தேதிக்குள் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் தேர்வுத்துறை உத்தரவு
  30. ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவிப்பு
  31. கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியீடு
  32. TNTET EXAM 2017 | வெளியாகிறது TNTET 2017 குறித்த அறிவிப்பு - ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என தகவல்
  33. பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவிப்பு.
  34. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது
  35. Police Recruitment - 2017 | Common Recruitment for the posts of Gr II Police Constables, Gr II Jail Warders and Firemen Common Recruitment - 2017 | தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு | மொத்த எண்ணிக்கை 15664 + 47 | கடைசி நாள் 22.02.2017 | எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 21.05.2017
  36. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: சட்டசபையில் இன்று கவர்னர் உரையாற்றுகிறார் ஜல்லிக்கட்டு மாற்று சட்ட மசோதா நிறைவேற வாய்ப்பு
  37. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள் என்ன? தமிழக அரசு அறிவிப்பு
  38. இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 4 ஆயிரம் பணியிடங்கள் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஜன. 26-ம் தேதி முதல் தொடக்கம்
  39. இந்தியாவுக்கு தலைமை தாங்கும் பண்பு தமிழர்களுக்கு இருக்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ புகழாரம்
  40. அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது மாணவர்கள் ‘கற்றல் திறன் மதிப்பிடல் முறை’ மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு
  41. 30,000 ரூபாய் பரிவர்த்தனைக்கு பான் கார்டு அவசியம் பட்ஜெட்டில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்
  42. மெரினாவில் எழுச்சி குறையாத ஆர்ப்பாட்டம் நீடிப்பு.
  43. தமிழகத்தில் 52 ஆண்டுகளுக்குப்பின் ’மாணவர் எழுச்சி’
  44. மத்திய அரசு கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு.
  45. ஜல்லிக்கட்டுக்காக வரலாறு காணாத எழுச்சி போராட்டம் 25 லட்சம் பேர் திரண்டதால் ஸ்தம்பித்தது தமிழகம்
  46. பிஎஸ்என்எல் - பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செல்போனில் வங்கி பரிவர்த்தனைக்கு ‘மொபிகேஷ் எம்-வாலட்’ சேவை ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், வங்கிக் கணக்கு தேவையில்லை
  47. ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் : தமிழக அரசு
  48. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் அரசு ஊழியர் சங்கங்கள் தகவல்
  49. ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரம் அடைகிறது ஆதார்அட்டை, ரேஷன்கார்டுகளை ஒப்படைப்போம் என அறிவிப்பு
  50. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு: தமிழகம் முழுவதும் இன்று 20-ந் தேதி வியாபாரிகள் கடையடைப்பு உண்ணாவிரதம்- ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
  51. ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது மத்திய அரசின் தலைமை வக்கீல் கருத்து
  52. ஏறுதழுவுதல் திருவிழாவை நடத்த மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்றக்கோரி பொதுநல வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
  53. தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை நர்சரி, மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு
  54. சென்னை ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் 43 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள்17-2-2017
  55. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை லாரிகள் ஓடாது
  56. ஆவின் பால் நிறுவனத்தின் ஈரோடு மாவட்ட பிரிவில் 17 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 08-02-2017
  57. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்) நிறுவனத்தில் 15 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 04-02-2017
  58. INDIAN OIL RECRUITMENT 2017 | INDIAN OIL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - TECH ASST / ENGI ASST | NO. OF VACANCIES 4 | LAST DATE 17.02.2017
  59. ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலியாக கல்லூரிகளுக்கு விடுமுறை.
  60. நாளை கடை அடைப்பு போராட்டம் த.வெள்ளையன் பேட்டி
  61. அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை.
  62. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பானிபட் சுத்திகரிப்பு ஆலையில் 32 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 29-1-2017
  63. பி.சி.பி.எல் நிறுவனத்தில் டெக்னீசியன் மற்றும் கிராஜூவேட் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி.விண்ணப்பிக்க கடைசி நாள் 31-1-2017
  64. ரிட்ஸ் நிறுவனத்தில் 43 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 16-1-2017
  65. ஏற்றுமதி ஆய்வுக்கழகத்தில் (EIC) 44 பணிகள்.விண்ணப்பிக்க கடைசி நாள்17-2-2017
  66. ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி : கல்லூரிகளுக்கு விடுமுறை
  67. ஜல்லிக்கட்டு | மோடி நல்ல செய்தி சொல்லாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்: போராட்டக் குழுவினர் திட்டவட்டம்
  68. TNPL RECRUITMENT 2017 | TNPL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - GENERAL MANAGER | NO. OF VACANCIES 2 | LAST DATE 02.02.2017
  69. TNPL RECRUITMENT 2017 | TNPL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - DIRECTOR | NO. OF VACANCIES 2 | LAST DATE 02.02.2017
  70. அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
  71. தனியார் பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து 3 மாதங்களுக்குள் பரிசீலிக்கவேண்டும் உயர்கல்வித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
  72. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) நாடு முழுவதும் உள்ள 8300 பணியிடங்களை விரைவில் நிரப்புகிறது.
  73. தேசிய அனல்மின் கழகத்தில் வேலை.
  74. மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில்வே பணி!
  75. ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  76. நாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சம் பணியிடம் காலி
  77. TAMIL NADU OPEN UNIVERSITY RECRUITMENT 2017 | TN0U - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - CONTROLLER OF EXAMINATIONS | NO. OF VACANCIES 1 | LAST DATE 31.01.2017
  78. தஞ்சாவூர்தமிழ்ப் பல்கலைக்கழகம் பத்தாவது பட்டமளிப்பு விழா - விரிவான தகவல்கள்
  79. TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY RECRUITMENT 2017 | TNPESU - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - ASST PROFFESSOR | NO. OF VACANCIES 6 | LAST DATE 06.02.2017
  80. வேளாண் அதிகாரி பணி வாய்ப்பு
  81. திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி...விரிவான விவரங்கள்...விண்ணப்பிக்க கடைசி தேதி 23-1-2017
  82. பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
  83. மத்திய அரசு நிறுவனங்களில் என்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு.கேட் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
  84. மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 745 பணியிடங்கள்
  85. ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது.ஆள்மாறாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை.
  86. எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்த நாளான ஜன.,17 ம் தேதியை அரசு பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  87. வன சீருடைப் பணி நேர்முகத் தேர்வு தகுதி பட்டியல் வெளியீடு
  88. மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தகவல்
  89. வறட்சி நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு.
  90. 17 ஆண்டு பழமையான விதியால் ஆசிரியர் பதவி உயர்வில் குளறுபடி.
  91. ஆசிரியர் தகுதி தேர்வு தாமதமாகும், ,8,000 ஆசிரியர் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்- அமைச்சர் பாண்டியராஜன்.
  92. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: வரும் 17-இல் பொது விடுமுறைவிட அரசு முடிவு.
  93. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ஆசிரியர்களின் கோரிக்கை!
  94. பாதுகாப்பு பணி தேர்வுக்கு ஹால்டிக்கெட்.
  95. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், ஆய்வக உதவியாளர் 4 ஆயிரத்து 900 பணியிடங்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
  96. G.O.Ms.No.6 Dated11.01.2017 BONUS – Adhoc Bonus – Special Adhoc Bonus for the year 2015–2016 – Sanction Order Download | தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  97. வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அடுத்த மாதத்திற்குள் பான் அட்டைகளை வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவிப்பு
  98. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவது பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  99. SGT TO BT PROMOTION COUNSELLING - இடைநிலை – சிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 12.01.2017 அன்று நடைபெற உள்ளது.
  100. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் நடவடிக்கை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தகவல்
  101. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்ப்பு
  102. பல்கலை துணைவேந்தர் பதவி; கல்லூரி ஆசிரியர்களுக்கு வாய்ப்பில்லை
  103. பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் இடம் பெறும் எண்ணில் குழப்பம்!
  104. ’நீட்’ தேர்வை 5 ஆண்டிற்கு தள்ளி வைக்க வேண்டும் - அரசுக்கு கோரிக்கை
  105. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., யில், புதிய பணி நியமனங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
  106. 10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு தேதிகள் அறிவிப்பு
  107. புதிய பென்ஷன் திட்டம் ரத்தாகுமா? ஊழியர்கள் எச்சரிக்கை.
  108. தமிழக அரசின் மருத்துவ காப்பீடு : பிற மாநில ஓய்வூதியர்கள் தவிப்பு
  109. பி.எப்.,பில் ஊழியர்களை சேர்க்க நிறுவனங்களுக்கு மற்றொரு வாய்ப்பு
  110. காமராஜ் பல்கலை துணைவேந்தருக்கு 'மார்க்' : முடிவுக்கு வந்தது விண்ணப்ப சர்ச்சை
  111. சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறது. 10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 10-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 29-ம் தேதி வரையிலும் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  112. JEE-MAIN | ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் பல்வேறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜே.இ.இ., தேர்வு அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 17, 2017
  113. சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9-ல் தொடக்கம்
  114. கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கம் மத்திய அரசு அறிவிப்பு
  115. பாடத்திட்டத்தை மாற்றுங்கள் - தினத்தந்தி தலையங்கம்
  116. எதிர்கால கனவுகளின் திருப்புமுனை பிளஸ் 2 மதிப்பெண் மாணவர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் அறிவுரை
  117. 4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் பிப். 2-ல் உண்ணாவிரதம் அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்
  118. மருத்துவ படிப்பை போலவே பொறியியல் படிப்புக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  119. ஏப்ரலுக்கு பிறகு டெபாசிட் செய்யப்பட்ட பணம் எவ்வளவு? வங்கிகளிடம் விவரங்களை பெற வருமானவரித்துறை தீவிரம்
  120. பிறந்து ஓராண்டாகியும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு புது வாய்ப்பு : தமிழக அரசு புது உத்தரவு.
  121. மதிப்பெண் சான்றிதழில் தவறு ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை; இணை இயக்குனர் எச்சரிக்கை!!!
  122. மாணவர் ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு.
  123. கிராமப்புற மாணவர்களின் அறிவியல் திறன் வளர்க்க வடிவமைப்பு போட்டி.
  124. CPS PENSION மீண்டும் போராட்ட களத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் !!
  125. வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்களின் ‘பான் கார்டு’ எண்ணை வரும் அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய அரசு உத்தரவு.
  126. இரண்டு சிலிண்டர் வைத்திருந்தால் ரேஷனில் அரிசி இல்லை : விரைவில் அறிவிக்க தமிழக அரசு திட்டம்.
  127. எதிர்காலத்தை தீர்மானிப்பது பிளஸ் 2 தேர்வு மாணவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை
  128. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நியமனம்
  129. EPF பென்ஷன் திட்டத்துக்கு ஆதார் கட்டாயம்!
  130. பொதுத் தேர்வுக்கான விடைத்தாளில் விடைகளை எழுதி அடித்திருந்தால் அடுத்த தேர்வுகள் எழுத முடியாது : தேர்வுத் துறை எச்சரிக்கை.
  131. பி.ஆர்க்., படிப்புக்கான, 'நாட்டா' தேர்வு முறையில், அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜன., 2ல் துவங்கியது; பிப்., 2 நள்ளிரவு, 11:59 மணிக்கு முடிகிறது. மார்ச் 26ல், ஹால் டிக்கெட் வெளியிடப்படும். ஜூன் 10ல், தேர்வு முடிவு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.