Saturday, 21 October 2017

New Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.

New Version of Simple Calculator_7.3 | Special features: with 1. Entry page is separately now 2. Simplified for user friendly. 3. Two incentives are calculated yearwise now available. 4.old CCA,PP are automatically calculated. | M.Tamilarasan M.C.A.,B.Ed.,M.Phil., Computer Instructor, Govt. Boys Hr. Sec. School Mariammankoil, Tanjavur District-613 501. Cell: 98 43 47 0024. email: mtamilmca@yahoo.com DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 20 October 2017

TNPSC Hostel Superintendent cum Physical Training Officer Result | விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு | தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப் பணியில் அடங்கிய விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு 20.05.2017 மு.ப. & பி.ப. அன்று நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 1779 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 54 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்-II தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 09.11.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். | The Written Examination for the post of Hostel Superintendent cum Physical Training Officer in Tamil Nadu Employment and Training Subordinate Service was held on 20.05.2017 FN & AN. Totally 1779 candidates have appeared for the said Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification, a list of register numbers of 54 candidates those who have been provisionally admitted to Certificate Verification (List-II) to the said post is available at the Commission's Website "www.tnpsc.gov.in". The Certificate Verification will be held on 09.11.2017 at the Commission's office. V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு 23-ல் வெளியீடு

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு 23-ல் வெளியீடு | தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஆர்.பழனிசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தட்டச்சு, சுருக்கெழுத்து (தமிழ் மற்றும் ஆங்கிலம்), மற்றும் கணக்கியல் தேர்வுகளின் முடிவுகள் 23-ம் தேதி (திங்கள்கிழமை) மதியம் 1 மணிக்கு வெளியிடப்படும். தேர்வர்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.tndte.gov.in) தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 19 October 2017

டிசம்பருக்குள் பள்ளிக் கல்வித்துறை முழுவதும் கணினி மயமாக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

டிசம்பருக்குள் பள்ளிக் கல்வித்துறை முழுவதும் கணினி மயமாக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | டிசம்பர் மாதத்திற்குள் பள்ளிக் கல்வித் துறை முழுவதும் கணினிமயமாக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். திருச்செந்தூர் அறிவியல் பூங்கா திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: மாணவர்கள் பொதுவாக மருத்துவம், ஆட்சிப் பணி, பொறியியல், வேளாண்மை மற்றும் கால்நடை உள்ளிட்ட பாடத் திட்டங்களையே பெரும்பாலும் பயின்று வருகின்றனர். ஆனால் மாணவர்கள் இது போன்றுள்ள 246 பாடத் திட்டங்களையும் பயின்றால் வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியும். மேலும் தற்போதுள்ள பாடத் திட்டத்திற்கேற்ப, 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 483 கோடியில் தமிழகம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. கடந்த தேர்வில் ரேங்க் சிஸ்டம் கொண்டுவரப்பட்டது.பொதுத் தேர்வு முடிவுகளை குறுஞ்செய்தி மூலம் மாணவர்களுக்கு உடனடியாக அனுப்பும் முறை, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நடைமுறைக்கு வந்தது. பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. அந்த ஸ்மார்ட் கார்டுடன், மாணவர்களின் ஆதார் எண், முகவரி, ரத்த வகை இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் பேரிடர்கள் போது, காப்பீடுத் திட்டத்தின் மூலம் 48 மணி நேரத்துக்குள் உரிய இழப்பீடு வழங்கப்படும். அது போல வரும் டிசம்பருக்குள் பள்ளிக் கல்வித் துறை முழுவதும் கணினி மயமாக்கப்படும்.இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலியிடங்களுக்கு 2013இல் டெட் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தவர்களுக்கு விரைவில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.7500 தொகுப்பு ஊதியத்திலும் கூடுதலான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார் செங்கோட்டையன்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 18 October 2017

பள்ளியில் காப்பீடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


பள்ளியில் காப்பீடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் 2 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. இது தவிர 486 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் ஆண்டிலிருந்து 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு கம்ப்யூட்டர் மூலம் கல்வி கற்றுத்தரப்பட உள்ளது. பள்ளி மாணவ, மாணவியருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் வரும் டிசம்பரில் துவங்கி இரண்டு மாதத்தில் முடியும். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 578 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடத்துக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்


தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 578 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடத்துக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் | அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மாவட்டங்களுக்கு இடையே உபரி மற்றும் தேவை அடிப்படையில் பணி நிரவல் செய்யப்பட்டது. மேலும் பணி ஓய்வு, ராஜினாமா, இறப்பு, பணி உயர்வு மற்றும் வேறு அரசு பணிக்கு செல்லுதல் போன்றவற்றால் தமிழகம் முழுவதும் 228 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் காலியிடங்கள் ஏற்பட்டன. மேலும் நடப்பு கல்வியாண்டில் 350 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் 578 ஆசிரியர் பயிற்றுநர் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தநிலையில் இந்த 578 ஆசிரியர் பயிற்றுநர் காலி பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது 3 ஆண்டுகள் ஆசிரியர் பயிற்றுனராக மாறுதலில் பணியாற்ற ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அந்த வகையில் 1.10.2016க்கு பின்னர் தேர்வு செய்யப்பட்ட தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களிடம் இருந்து விருப்ப விண்ணப்பம் பெற்று வரும் 31ம் தேதிக்குள் பட்டியலிட்டு அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க மாநில திட்ட இயக்குநர் பள்ளி கல்வி இயக்குநரை கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வகையில் ஆசிரியர் பயிற்றுனராக பணியாற்ற விருப்பம் உள்ள ஆசிரியர்களின் பெயர் விபரங்களை பட்டியலிட்டு அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 2 மாணவர்களுக்கான 'நீட்' பயிற்சி 'ஆன்லைன்' பதிவு துவக்கம் | 31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை


பிளஸ் 2 மாணவர்களுக்கான 'நீட்' பயிற்சி 'ஆன்லைன்' பதிவு துவக்கம் | 31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை | பிளஸ் 2மாணவர்களுக்கான, நுழைவு தேர்வு பயிற்சிக்கு, நேற்று முதல், 'ஆன்லைன்' பதிவு துவங்கியது; வரும், 26ம் தேதி வரை பதிவு செய்யலாம். தமிழக பள்ளிக் கல்வி துறையின், ஒருங்கிணைந்த புதிய இணைய தளத்தின் செயல்பாட்டை, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், துவங்கி வைத்தார். இதில் 'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி திட்டத்திற்கு, புதிய இணையதளத்தில், 'ஆன்லைன்' பதிவும் துவங்கியது. இது குறித்து, அமைச்சர், செங்கோட்டையன் கூறுகையில், ''மாணவர்கள்தங்கள் பள்ளி வழியாக, பயிற்சியில் சேர, பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து, 3,000 ஆசிரியர்களுக்கு, பிற மாநில நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும், அந்த ஆசிரியர்கள், தமிழக மாணவர்களுக்கு, வார இறுதி நாட்களில் சிறப்பு பயிற்சி அளிப்பர்,'' என்றார். இந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் வழியாக பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தை நாடி அதில் விண்ணப்பிக்கலாம்.பள்ளிக் கல்வியின், http://tnschools.gov.in என்ற புதிய இணையதளத்தில், மாணவர்கள், தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக, பெயர் மற்றும் பயிற்சி மைய விபரங்களை பதிவு செய்யலாம். இதற்கு, வரும், 26ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் தெரிவித்தார். விண்ணப்பித்த உடன் விண்ணப்பித்தற்கான அடையாள சீட்டு கிடைக்கும். அதைக்கொண்டு எந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற விரும்புகிறார்களோ அந்த மையத்திற்கு செல்லலாம். தினமும் பள்ளிக்கூடம் விட்ட பிறகு மாலையில் இந்த பயிற்சி அளிக்கப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலையிலும், மாலையிலும் பயிற்சி அளிக்கப்படும் இந்த நிகழ்ச்சியில், 31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை வழங்கப்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு தேர்வுத் துறையில், 2008 முதல்,2012 வரை, 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ் பெற, 15நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு சான்றிதழ்கள் அழிக்க அரசு முடிவு | அரசு தேர்வுத் துறையில், 2008 முதல்,2012 வரை, 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ் பெற, 15நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறையின், சென்னை மண்டல துணை இயக்குனர், ராஜலட்சுமி அறிவிப்பு: பத்தாம் வகுப்பு பொது தேர்வை, 2008 முதல், 2012 அக்., வரை எழுதியவர்களில் பலர், தங்கள் சான்றிதழ்களை கோராமல் உள்ளனர். அவற்றை அழிக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதனால், அக்., 31 வரை, அந்த சான்றிதழை பெற, அவகாசம் வழங்கப்படுகிறது. சான்றிதழ் பெற விரும்புவோர், பெயர், பதிவெண், தேர்வு மையம், ஆண்டு, மாதம் போன்ற விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின், உரிமை கோரப்படாத சான்றிதழ்கள் அழிக்கப்படும். இனி வரும் காலங்களில், இரண்டு ஆண்டு முடிந்த பின், உரிமை கோரப்படாத சான்றிதழ்கள், முன்னறிவிப்பு இன்றி அழிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 17 October 2017

NEW PAY COMMISSION DETAILS, G.OS, FORMS DOWNLOAD | SIMPLE CALCULATOR | COMPLETE CALCULATOR | ULTIMATE CALCULATOR | புதிய ஊதியக்குழு விவரங்கள், கணக்கீட்டு தாள், அரசாணைகள் ....முழுமையான தொகுப்பு ...

 1. New Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.
 2. TAMIL NADU REVISED SCALES OF PAY - VERSION 12.0 ULTIMATE FIX SOFTWARE
 3. TAMIL NADU REVISED SCALES OF PAY FIXATION FORM -2017
 4. 7TH PAY REVISED SIMPLE CALCULATOR | FEATURES: 1.INCLUDED INCENTIVE,SELECTION GRADE,DIFFERENCE 2.MATRIX TABLE ADDED WITH SHEET BY M.TAMILARASAN M.C.A.,B.ED.,M.PHIL., COMPUTER , GOVT BOYS HR SEC SCHOOL MARIAMMANKOIL ,TANJAVUR DIST
 5. 7TH PAY REVISED COMPLETE CALCULATOR DOWNLOAD | K. MARUTHAI, GOVT BOYS HIGHER SECONDARY SCHOOL, CHINNASALEM
 6. G.O.Ms.No.307 | REVISION OF RATES OF TRAVELLING ALLOWANCE | G.O.Ms.No.307 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of Travelling Allowance - Orders - Download
 7. G.O.MS.NO.306 | REVISION OF RATES OF PAY, ALLOWANCES, PENSION AND RELATED BENEFITS | G.O.Ms.No.306 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Rates of Allowances - Orders - Download
 8. G.O.Ms.No.305 | REVISION OF RATES OF HRA AND CCA | G.O.Ms.No.305 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of House Rent Allowance and City Compensatory Allowance - Orders - Download.
 9. G.O.Ms.No.303, Dated 11th October 2017. | PAY COMMISSION G.O DOWNLOAD | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 10. G.O NO. 300 DT: OCTOBER 10, 2017 3% D.A HIKE G.O DOWNLOAD | D.A. HIKE FROM 136% TO 139% | தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 11. புதிய ஊதியக்குழு நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் ...முழுமையாக படியுங்கள்...
 12. தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.
 13. அரசு ஊழியர்களின் 7-வது ஊதியக்குழு தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று காலை நடக்கிறது | 7-வது ஊழியக் குழு அரசாணை இன்றே வெளியாக வாய்ப்பு.
 14. THE TAMINADU REVISED PAY RULES CALULATION SHEET (WORD FILE) BY A.PANNEERSELVAM, RETIRED P.G.TEACHER. IN COIMBATORE. CELL : 9842127650
 15. THE TAMINADU PAY REVISION PROCEEDINGS BY A.PANNEERSELVAM, RETIRED P.G.TEACHER. IN COIMBATORE. CELL : 9842127650
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘நீட்’ உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள 412 இடங்களில் பயிற்சி மையங்கள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

'நீட்' உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள 412 இடங்களில் பயிற்சி மையங்கள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார் | நீட் தேர்வு உள்ளிட்ட எந்த போட்டிதேர்வு களையும் மாணவர்கள் எதிர்கொள்ள பயிற்சி மையங்களை பள்ளிகல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேர தமிழகத்தில் நீட் என்ற நுழைவுத்தேர்வை மத்திய அரசு கொண்டுவந்தது. அதுபோல பிளஸ்-2 மாணவர்கள் உயர் கல்வி படிப்பில் சேர்ந்து படிக்க மத்திய அரசு எந்த போட்டி தேர்வுகளை கொண்டுவந்தாலும் அந்த தேர்வுகளை எதிர்கொள்ள தமிழகத்தில் 412 பயிற்சி மையங் கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அமைக் கப்பட்டு உள்ளன. கே.ஏ.செங்கோட்டையன் இந்த பயிற்சி மைய தொடக்க விழா, பள்ளிக்கல்வித்துறையின் மேம்படுத்தப்பட்ட இணையதளம் தொடக்கவிழா, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பணி ஆணை வழங்கும் விழா ஆகியவை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு இணையதளத்தையும், பயிற்சி மையங்களையும் தொடங்கிவைத்தார். மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- பள்ளி கல்வித்துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகல்வித்துறையில் மேம்படுத்தப்பட்ட இணையதளம் ( www.tnschools.gov.in) திறக்கப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் நடவடிக்கைகளை அறியமுடியும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு, வரக்கூடிய போட்டிதேர்வுகளை, மாணவர்கள் எதிர்கொள்ள வட்டார அளவில் அரசு பள்ளிகளில் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் வழியாக பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தை நாடி அதில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த உடன் விண்ணப்பித்தற்கான அடையாள சீட்டு கிடைக்கும். அதைக்கொண்டு எந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற விரும்புகிறார்களோ அந்த மையத்திற்கு செல்லலாம். தினமும் பள்ளிக்கூடம் விட்ட பிறகு மாலையில் இந்த பயிற்சி அளிக்கப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலையிலும், மாலையிலும் பயிற்சி அளிக்கப்படும். மொத்தம் 412 பயிற்சி மையங்களில் இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 3 ஆயிரம் ஆசிரியர்கள் இதற்காக ஆசிரியர்கள் ஆந்திரா சென்று பயிற்சி பெறுகிறார்கள். அவர்கள் தமிழகத்திற்கு வந்ததும் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி அளிப்பார்கள். பயிற்சி இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் , அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் நந்தகுமார், தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் ஜெகநாதன், இயக்குனர்கள் இளங்கோவன், கண்ணப்பன், ராமேஸ்வர முருகன், கார்மேகம், கருப்பசாமி மற்றும் இணை இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

காவல்துறை, தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 6 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

காவல்துறை, தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 6 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு | தமிழகத்தில் காலியாக உள்ள 6 ஆயிரம் காவல்துறை, தீயணைப்பு துறை பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிக காவலர்கள் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 15 ஆயிரத்து 621 சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. பணிநியமன ஆணைகளை வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- சட்டம் ஒழுங்கை பராமரித்தும், குற்றங்களை தடுப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு இணையாக தமிழ்நாடு காவல்துறை விளங்கிக்கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கை பராமரித்தும், நல்லிணக்கத்தை நிலைநாட்டியும், தேசிய ஒருமைப்பாட்டை பேணிக்காத்தும், தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்கவும் தமிழ்நாடு காவல்துறையினர் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். இயற்கை பேரிடர் ஏற்படும் தருணங்களில் காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், பிற துறையினருடன் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். சிறைத்துறையினரும் குற்றவாளிகளை நன்னடத்தை உடையவர்களாக மாற்ற சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாடு காவல்துறையில் அதிக எண்ணிக்கையில் காவலர்கள் இருக்கின்றனர். சீருடைப் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தனி வாரியத்தை 1991-ம் ஆண்டு நவம்பரில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கினார். கடந்த ஆண்டு வரை, ஒரு லட்சத்து இரண்டு ஆயிரத்து நானூற்று முப்பத்திரண்டு சீருடைப் பணியாளர்களை இத்தேர்வு வாரியம் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த ஆண்டு நிதிநிலைக் கூட்டத்தொடரில் காவலர்கள் பணி நியமனம் குறித்து சட்டமன்றத்தில் நான் அறிவித்ததைத் தொடர்ந்து, மிகக்குறுகிய காலத்திலேயே 15 ஆயிரத்து 621 நபர்கள் பல்வேறு சீருடைப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவற்றில், ஆயுதப்படைக்கு 6 ஆயிரத்து 4 இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், 2 ஆயிரத்து 564 இரண்டாம் நிலை பெண் காவலர்களும், தமிழக சிறப்புக் காவல் படைக்கு 4 ஆயிரத்து 567 இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், 5 பெண் காவலர்களும் என மொத்தம் 13 ஆயிரத்து 140 இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறைத்துறைக்கு 954 இரண்டாம் நிலை ஜெயில் வார்டர்களும், 36 இரண்டாம் நிலை பெண் ஜெயில் வார்டர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ஆயிரத்து 491 தீயணைப்பு வீரர்கள் என மொத்தமாக 15 ஆயிரத்து 621 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து சரித்திரம் படைக்கும் வகையில் 4 திருநங்கைகளும் காவலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக காவல் துறையில் திருநங்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக விரைவில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். இதன்மூலம் தமிழ்நாடு காவல்துறையில் காலி பணியிடங்களே இல்லை என்ற நிலை உருவாகும். தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்ற வாய்ப்பு பெற்றிருக்கின்ற உங்கள் அனைவருக்கும் வாழ்வில் இது ஒரு பெருமைமிக்க தருணம் ஆகும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் லட்சியத்தின்படி, தமிழ்நாடு காவல்துறையில் கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் பேணி, நமது காவல்துறையின் வரலாற்று பெருமையை நிலைநாட்ட வேண்டிய கடமை உணர்வோடும், நடுநிலையோடும், தன்னலமற்ற சேவையை தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் ஆற்ற வேண்டும். நேர்மையாக பணிபுரிய வேண்டும் சீருடைப்பணியில் ஏராளமான சவால்களையும், பல்வேறு இடர்களையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அல்லும்பகலும் அயராது உழைக்க வேண்டிவரும். "ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்" என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப விருப்பு, வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும். மக்களுடைய குறைகளை கனிவுடனும், கவனத்துடனும், பணிவுடனும், பரிவுடனும் கேட்டு, நடுநிலையுடனும், நேர்மையாகவும் பணிபுரிய வேண்டும். இதுதான் உங்களுடைய தலையாய கடமை. இன்று முதல் பணியில் சேரும் ஒவ்வொரு காவலரும், கடமையுணர்வுடனும், துணிவுடனும், சமயோசிதமாக செயல்பட்டு, நாட்டில் அமைதி நிலவ பாடுபடவேண்டும். நேரம் காலம் கடந்து பல தருணங்களில் பாடுபட்டு உழைக்க வேண்டிய தன்னலமற்ற சேவைதான் காவல்பணி. ஆனால் அந்த உழைப்பால் மக்கள் பெரும் அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை கண்முன்னே நிறுத்தி பார்க்கும்போது உங்களுக்குள் ஒரு பூரிப்பும், மிடுக்கும் நிச்சயம் ஏற்படும். ஒளிவு மறைவின்றி, நேர்மையான முறையில் தேர்வுகளை நடத்தியவர்களுக்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் பேசினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

G.O.Ms.No.307 | REVISION OF RATES OF TRAVELLING ALLOWANCE | G.O.Ms.No.307 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of Travelling Allowance - Orders - Download

G.O.Ms.No.307 | REVISION OF RATES OF TRAVELLING ALLOWANCE | G.O.Ms.No.307 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of Travelling Allowance - Orders - Download. 1. G.O.Ms.No.40, Finance (Pay Cell) Department, dated: 22-02-2017. 2. G.O.Ms.No.189, Finance (Pay Cell) Department, dated 27-06-2017. 3. G.O.Ms.No.303, Finance (Pay Cell) Department, dated 11-10-2017. DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

G.O.MS.NO.306 | REVISION OF RATES OF PAY, ALLOWANCES, PENSION AND RELATED BENEFITS | G.O.Ms.No.306 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Rates of Allowances - Orders - Download

G.O.MS.NO.306 | REVISION OF RATES OF PAY, ALLOWANCES, PENSION AND RELATED BENEFITS | G.O.Ms.No.306 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Rates of Allowances - Orders - Download. 1. G.O.Ms.No.40, Finance (Pay Cell) Department, dated: 22-02-2017. 2. G.O.Ms.No.189, Finance (Pay Cell) Department, dated 27-06-2017. 3. G.O.Ms.No.303, Finance (Pay Cell) Department, dated 11-10-2017.DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

G.O.Ms.No.305 | REVISION OF RATES OF HRA AND CCA | G.O.Ms.No.305 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of House Rent Allowance and City Compensatory Allowance - Orders - Download.

G.O.Ms.No.305 - REVISION OF RATES OF HRA AND CCA | REVISION OF RATES OF HRA AND CCA | G.O.Ms.No.305 Dt: October 13, 2017 |OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of House Rent Allowance and City Compensatory Allowance - Orders - Download. 1. G.O.Ms.No.40, Finance (Pay Cell) Department, dated: 22-02-2017.2. G.O.Ms.No.189, Finance (Pay Cell) Department, dated 27-06-2017. 3. G.O.Ms.No.303, Finance (Pay Cell) Department, dated:11-10-2017. DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 16 October 2017

7TH PAY REVISED SIMPLE CALCULATOR DOWNLOAD | புதிய ஊதியக்குழு நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் ...முழுமையாக படியுங்கள்...


1. அடிப்படை ஊதியம் + கிரேட் pay வை கூட்டி 2.57 ல் பெருக்க வேண்டும்.
2. வருகிற தொகையை pay Matrix உடன் ஒப்பிட்டு குறித்து கொள்ள வேண்டும். ( பெருக்கு தொகை 44623 என்று வந்தால் 44600 எனவும், 44678 என்று வந்தால் 45900 எனவும் எடுத்து கொள்ள வேண்டும்.)
3. அடிப்படை ஊதியத்திற்கு annual increment கொடுக்க வேண்டுமென்றால் அடிப்படை ஊதியத்திற்கு அடுத்து உள்ள தொகையை (pay matrix) எடுத்து கொள்ள வேண்டும் ( 45900 க்கு அடுத்து உள்ள தொகை 47300 எனவும், சாதாரண மற்றும் சிறப்பு நிலை ( selection , special grade) என்றால் 47300, 48700 எனவும் கணக்கிட வேண்டும். இது சென்ற வருடம் கணக்கிட்ட 3 % க்கு சமமாக வருகிறது )
4. ஜனவரி மாதம் கணக்கிட 31.12.2015 அல்லது 1.1.2016 இரண்டில் எந்த தொகையை கணக்கிட்டால் சரியாக வருகிறதோ அதை எடுத்துக் கொள்ளலாம்.( கணக்கிட்டால் இரண்டும் ஒரே தொகைதான் வருகிறது)
5. இதில் இடைநிலை ஆசிரியர்களில் 2800 கிரேட் பே வாங்கியவர்களுக்கு 750 ரூபாய் – யை கணக்கிடக்கூடாது. தனிஊதியமாக 2000 ரூபாய் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த 2000 ரூபாய் எந்த ஊதிய உயர்வுக்கும் ( annual increment , DA ) எடுத்துக் கொள்ளக் கூடாது
6. HRA பற்றி எந்த ஒரு அட்டவணையும் வெளிவரவில்லை. தற்சமயம் தோராயமாக 2017 செப்டம்பரில் வாங்கிய தொகையுடன் 2.5 ல் பெருக்கி போட்டு கொள்ளலாம்.
7. CCA – 2017 செப்டம்பரில் வாங்கிய தொகையுடன் இரண்டு மடங்கு
8. MA- 100 லிருந்து 300
9. தற்சமயம் அக்டோபர் மாத DA 5 %
10. தனியாக பெற்று வந்த சிறப்பு படி 500 மற்றும் 30 க்கு எந்தவித விளக்கம் இல்லை
11. எனவே 750 ரூபாய் மற்றும் 500, 30, வீட்டு வாடகைப்படி தொடர்பாக நிதித்துறைக்கு விரைவில் விளக்கம் கேட்க பட உள்ளது.
12. இனிமேல் எந்த ஒரு ஊதிய உயர்வும் அதே வரிசையில் செல்லவேண்டும்.அதாவது பதவி உய்ர்வு பெற்றால் அதே pay matrix ல் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும் ( உதாராணமாக சென்ற வருடம் இடை நிலை ஆசிரியர் 2800 கிரேட் பே பெற்றவர் பட்டதாரி ஆசிரியராக சென்றால் 4600 ல் செல்வார்.அது போல் இந்த வருடம் செய்ய இயலாது)
13. 40 படிகளுக்கு 100 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. படிகள் விவரம் வெளியிட படவில்லை.
14. மேலும் ஊதிய உயர்வு சம்மந்தமாக பல விளக்கங்கள் வெளி வர வாய்ப்பு கண்டிப்பாக உள்ளது.
15. எந்த ஒரு ஊதிய குழுவும் நிர்ணயம் செய்யும் போது பழைய முறையில் பெறும் சலுகையை தர மறுக்கக் கூடாது. ஆனால் இதில் நிறைய சலுகைகள் மறுக்கப்பட்டு உள்ளதால் விரைவில் புதிய அறிவிப்புகள் வெளி வர வாய்ப்பு உள்ளது.
16. ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு (பென்சன்) தற்சமயம் பெறும் ஊதியத்துடன் 2.57 ல் பெருக்கிக் கொண்டு, DA 5 % கணக்கிட்டு கொள்ள வேண்டும். M.A- பற்றிய விவரம் வெளிவரவில்லை.  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ரேஸ் இன்ஸ்டிடியூட் சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி அக்டோபர் 20-ம் தேதி தொடக்கம்


ரேஸ் இன்ஸ்டிடியூட் சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி அக்டோபர் 20-ம் தேதி தொடக்கம் | டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சியை ரேஸ் கோச்சிங் இன்ஸ்டிடியூட் நிறுவனம் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக ரேஸ் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: இது போட்டித் தேர்வுகள் நேரம். இன்று (15-ம் தேதி) ஒருநாள் மட்டும் 5 போட்டித் தேர்வுகள் நடக்கின்றன. சில மாணவர்கள் இன்று ஒரே நாளில் இரண்டு, மூன்று தேர்வுகளை எழுதுவார்கள். ஆர்ஆர்பி அதிகாரிகள், உதவியாளர்கள் உள்ளிட்ட தேர்வுகளுக்கான முடிவுகளை, வங்கித் தேர்வுகளை நடத்தும் ஐபிபீஎஸ் நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டது. இதில், சென்னை தி.நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரேஸ் கோச்சிங் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் படித்த 4,954 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இது, நாட்டில் வேறு எந்த பயிற்சி நிறுவனமும் படைக்காத சாதனை. இது மட்டுமின்றி, எங்கள் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற தமிழக மாணவர்கள் பலரும் சிபிஐ உதவி ஆய்வாளர், வரி அதிகாரி உட்பட மத்திய அரசில் பல உயர் பொறுப்புகளில் இருக்கின்றனர். தமிழகத்தில் இருந்து மத்திய பணிக் குச் செல்வது அரிதாக இருந்த சூழலில், ரேஸ் நிறுவனம் அதை சாத்தியமாக்கியுள்ளது. இந்நிலையில், ரேஸ் நிறுவனம் இந்த மாதம் முதல் மாநில அரசுப் பணிக்கும்(டிஎன்பிஎஸ்சி) மாணவர்களை அனுப்பும் பணியைத் தொடங்குகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அளிக்கப்பட உள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை, ஈரோடு, நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இப்பயிற்சி வகுப்புகள் வரும் 20-ம் தேதி தொடங்க உள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 15 October 2017

7TH PAY COMPLETE CALCULATOR DOWNLOAD | அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY COMPLETE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.

7TH PAY COMPLETE CALCULATOR DOWNLOAD | அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY COMPLETE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள். | 7TH PAY COMPLETE CALCULATOR | FEATURES: 1.INCLUDED INCENTIVE,SELECTION GRADE,DIFFERENCE 2.MATRIX TABLE ADDED WITH SHEET 3. OPTION 4. STATEMENT BY K.MARUTHAI. TEACHER , GOVT BOYS HR SEC SCHOOL CHINNASALEM, VILLUPURAM DIST | EMAIL : apgpriya@yahoo.co.in | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 14 October 2017

TRB PG SECOND LIST 2017 FOR CV | Direct Recruitment of Post Graduate Assistants for the year 2016 - 17 - Please click here for Provisional List of Candidates called for C.V - DSE and Other Department List.

TEACHERS RECRUITMENT BOARD DIRECT RECRUITMENT OF POST GRADUATE ASSISTANTS / PHYSICAL EDUCATION DIRECTOR GRADE-I FOR THE YEAR 2016-17 As per the Notification No.3/2017 published on 09.05.2017 the written competitive examination for the Direct Recruitment to the Post Graduate Assistants / Physical Education Director Grade-I was held on 02.07.2017 and the result was published on 10.08.2017 and certificate verification was conducted for the vacancies in School Education Department. Based on that certificate verification, Board already released the results for 2357 candidates to the School Education Department on 12.09.2017. Now the Board has decided to conduct certificate verification for the vacancies in the Backward classes, Most Backward classes and Denotified Communities Welfare Department, Adi-Dravida and Tribal Welfare Department, Chennai and Coimbatore Corporations. | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) - 2017 - PAPER - II - Please click here for Awaiting and Absent List for C.V

Teachers Recruitment Board College Road, Chennai-600006 TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017 Certificate Verification - TNTET Paper – II (II Phase) As per the Notification No.1/2017 published on 24.02.2017, Teachers Recruitment Board conducted Teacher Eligibility Test 2017 for Paper-II on 30.04.2017 and Provisional result with final answer key was published on 30.06.2017 in the TRB website. The Board had already conducted Certificate Verification for the candidates who have secured minimum eligible marks in Paper II on 24.07.2017 to 28.07.2017. 701 Candidates have absented themselves from the above mentioned certificate verification and 535 candidates have not submitted their B.Ed. mark sheets and B.Ed. Degree certificates due to the non release of 2017 B.Ed. result and non issuance of the certificates by their University. Now the Board has decided to give an one time final opportunity for the absent candidates and release the Certificate Verification list herein. It is also decided to give one final chance to all those candidates who have not submitted their required B.Ed. certificates during the earlier certificate verification process. Candidates are advised to download the Certificate Verification call letters and other relevant forms and attend the certificate verification as per the schedule given therein (25.10.2017 to 27.10.2017). No separate intimation will be given. All such candidates are informed that this will be the final chance and no other chance shall be given. Utmost care has been taken in preparing the certificate verification list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement. ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை – 6 பத்திரிக்கை செய்தி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் II ல் தேர்ச்சி பெற்ற 18769 பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த 24.07.2017 முதல் 28.07.2017 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இச்சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துக்கொள்ள இயலாத 701 பணிநாடுநர்கள் மற்றும் 2017 ஆம் ஆண்டிற்கான பி.எட். கல்வியியல் சான்று பெற இயலாத காரணத்தால் பி.எட். சான்று அளிக்காத 535 பணிநாடுநர்கள் ஆகியோர்களுக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு கலந்துக்கொள்ளாதவர்கள் மற்றும் பி.எட்., சான்று அளிக்காத பணிநாடுநர்களுக்கு விழுப்புரம் மற்றும் மதுரையில் 25.10.2017 முதல் 27.10.2017 வரை நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக்கடிதங்கள் ஆசிரியர்தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in   என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனியாக அஞ்சல் மூலம் அழைப்புக் கடிதம் அனுப்பப் படமாட்டாது. இணையதளத்தில் வெளியிடப்படும் அழைப்புக் கடிதத்தினையே எடுத்துவருதல் வேண்டும். மேற்கண்டவாறு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பினை உரிய பணிநாடுநர்கள் தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கலாகிறது.
TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017
CERTIFICATE VERIFICATION - PHASE - II
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB SPECIAL TEACHERS KEY ANSWERS DOWNLOAD | Direct Recruitment of Special Teachers in School Education and other Departments for the year 2012 - 16 - Please click here for Tentative Key answers

Teachers Recruitment Board College Road, Chennai-600006 Direct Recruitment of the Post of Special Teachers Written Examination - 2017 TENTATIVE KEY As per Notification No.05/2017 dated 26.07.2017, Teachers Recruitment Board conducted the Written Examination for the Direct Recruitment for the post of Special Teachers on 23.09.2017 and 35781 candidates appeared for the written examination. Now, the Board has released the tentative key answers. As per point No.8(a)- Key Answer of the Notification, Candidates are given time up to 20.10.2017 to submit their representations, if any, regarding objections on the tentative answer keys published, along with the proof for the disputed answer keys, in the given format. Their representations may be sent through post or may be dropped in the Box provided at Teachers Recruitment Board's information centre to reach this office on or before 20.10.2017 up to 5.30 pm. For any objections, candidates should give proof from standard Text Books only. Guides, Correspondence Course materials and nonstandard books are not permissible. Separate format should be used for each question. Utmost care has been taken in preparing the tentative key answers list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect tentative key answer would not confer any right of enforcement. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பாசிரியர்கள் பணியிடங்களுக்கான நேரடி பணித்தெரிவிற்கான போட்டி எழுத்துத்தேர்வு 23.09.2017 அன்று நடத்தப்பட்டு 35781 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள். தற்போது சிறப்பாசிரியர்கள் போட்டி எழுத்து தேர்வுக்கான கேள்வித்தாட்களுக்கு, உரிய தற்காலிக விடைக்குறிப்புகள் (Tentative Key Answer)ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in ல் வெளியிடப்பட்டு உள்ளன. ஏற்கனவே தேர்வுக்கான அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் 20.10.2017 மாலை 5.30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது மேற்கண்ட நாட்களுக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பெறும் வகையில் அஞ்சல் மூலமாகவோ ஒவ்வொரு விடைக்கும் தனித்தனியாக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள உரிய படிவத்தில் ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு வினாவிற்கும் தவறாமல் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் / மேற்கோள் புத்தகங்கள் (Standard Text Books / Reference Books) ஆதாரம் மட்டுமே அளிக்கவேண்டும். கையேடுகள் மற்றும் தொலைதூர கல்வி நிறுவன ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. | DOWNLOAD


Direct Recruitment for the Post of Special Teachers Written Examination - 2017
REPRESENTATION
RELEASE OF TENTATIVE KEY

          

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 13 October 2017

7TH PAY SIMPLE CALCULATOR | FEATURES: 1.INCLUDED INCENTIVE,SELECTION GRADE,DIFFERENCE 2.MATRIX TABLE ADDED WITH SHEET BY M.TAMILARASAN M.C.A.,B.ED.,M.PHIL., COMPUTER , GOVT BOYS HR SEC SCHOOL MARIAMMANKOIL ,TANJAVUR DIST


7TH PAY SIMPLE CALCULATOR | FEATURES: 1.INCLUDED INCENTIVE,SELECTION GRADE,DIFFERENCE 2.MATRIX TABLE ADDED WITH SHEET BY M.TAMILARASAN M.C.A.,B.ED.,M.PHIL., COMPUTER , GOVT BOYS HR SEC SCHOOL MARIAMMANKOIL ,TANJAVUR DIST-613501. CEL:98 43 47 0024 DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக்கல்வி துறை சார்பில் ரூ.173 கோடியில் புதிய கட்டிடங்கள் முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்


பள்ளிக்கல்வி துறை சார்பில் ரூ.173 கோடியில் புதிய கட்டிடங்கள் முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார் | இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வித் துறை சார்பில் நபார்டு கடனுதவியின் கீழ், நெல்லை மாவட்டம் ஏர்வாடி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2 கோடியே 29 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் 16 வகுப்பறை மற்றம் ஆய்வக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இது தவிர, அரியலூர், கோவை, திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, நாகை, நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, நெல்லை, திருச்சி, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 39 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.54 கோடியே 75 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் வகுப்பறை, ஆய்வகம், குடிநீர், கழிவுநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தில் கோவை, திருப்பூர், காஞ்சி, மதுரை, நாகை, நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் 68 உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.115 கோடியே 17 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பில் பள்ளிக்கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதுதவிர, அனைவருக்கும் கல்வித்திட்டத்தில் விழுப்புரம்- ஏ.குமாரமங்கலத்தில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், பொது நூலக இயக்ககத்தில் மதுரை - மேலூரில் ரூ.56 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடம் என ரூ.173 கோடியே 84 லட்சத்து 85 ஆயிரத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார். மாவட்டங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சிறப்பாக பணியாற்றியதற்காக மாவட்ட ஆட்சியர்களுக்கு 2014,15 மற்றும் 16-ம் ஆண்டுக்கான பசுமை விருதுகளை முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார். இதன்படி, 2014-ம் ஆண்டுக்கு, தர்மபுரி- கே.விவேகானந்தன், தேனி- கே.எஸ்.பழனிசாமி (முன்னாள்), கோவை- அர்ச்சனா பட்நாயக் (முன்னாள்) ஆகியோருக்கு விருதுகள் வழங்கினார். தொடர்ந்து, 2015-ம் ஆண்டுக்கு ஈரோடு- சு.பிரபாகர், நீலகிரி- பொ.சங்கர் (முன்னாள்), கரூர்- ச.ஜெயந்தி (முன்னாள்) மற்றும் 2016-ம் ஆண்டுக்கு, நாமக்கல்- மு.ஆசியா மரியம், தேனி- ந.வெங்கடாசலம், திருவண்ணாமலை -அ.ஞானசேகரன் (முன்னாள்) ஆகியாருக்கு முதல்வர் கே.பழனிசாமி பசுமை விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், வி.எம்.ராஜலட்சுமி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், செயலர்கள் பிரதீப் யாதவ், நசிமுத்தின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய விரைவில் குழு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய விரைவில் குழு அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்வது குறித்து அறிக்கை அளிப்பதற்கான குழு சில தினங்களில் அமைக்கப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கரூரில் நேற்று நடைபெற்ற 45-வது ஜவஹர்லால் நேரு மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்கான குழு 2 அல்லது 3 தினங்களில் அமைக்கப்படும். 15 நாட்களுக்குள் இக்குழுவிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். 2013-ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வாகி வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அரசு பரிசீலிக்கும். 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்புகள் அனைத்தும் ரூ.400 கோடியில் கணினிமயமாக்கப்படும். வெளிநாடுகளில் உள்ள கல்வி முறை குறித்து அறிந்துவருவதற்காக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவர்கள் கல்வித் துறை சார்பில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர் என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேவையற்ற பணி இடங்களை கண்டறிய குழு நியமனம்: அரசுப் பணிகள் இனி ஏஜென்சிகள் மூலம் செய்யப்படும் அரசாணை வெளியீடு

தேவையற்ற பணி இடங்களை கண்டறிய குழு நியமனம்: அரசுப் பணிகள் இனி ஏஜென்சிகள் மூலம் செய்யப்படும் அரசாணை வெளியீடு | தமிழக அரசு துறையில் உள்ள சில பணிகள் இனி ஏஜென்சிகள் மூலம் செய்யப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தேர்வு நிலை, சிறப்பு நிலை மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள், படிகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், ஓய்வுகால பலன்கள் ஆகியவற்றில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு வழங்குவது குறித்து அலுவலர் குழு அறிக்கை அளித்தது. இந்த அறிக்கையை அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது. ஒரே பணியிடத்தில் 10 ஆண்டுகள் (தேர்வு நிலை) மற்றும் 20 ஆண்டுகள் (சிறப்பு நிலை) பணி முடித்தவர்களுக்கு அவர்கள் பெறும் அடிப்படை ஊதியத்தில் தற்போது வழங்கப்படும் இரண்டு ஊதிய உயர்வுகள் தொடர்ந்து அளிக்கப்படும். ஆண்டுக்கு 3 சதவீதம் ஊதிய உயர்வு என்ற நிலை தொடரும். அரசு அலுவலர்கள் தற்போது பெற்று வரும் சிறப்பூதியத்தில் 50 சதவீதம் கூடுதல் உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஏஜென்சிகள் மூலம் நியமனம் அரசின் வருவாய் செலவினங்களை குறைப்பதற்காக பல்வேறு துறைகளில் உள்ள பணியாளர்களின் நிலை ஆய்வு செய்யப்படும். தேவையற்ற பணியிடங்கள் இனங்கண்டறியப்படும். மேலும், சில பணி இடங்களில் வெளிமுகமை (ஏஜென்சிகள்) மூலமாகவோ அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ முதல் கட்டமாக பணி நியமனங்களை மேற்கொள்ளவும் பரிந்துரைகளை அளிக்க பணியாளர் சீரமைப்புக் குழு நியமிக்கப்படும். வீட்டு வாடகைப்படி அரசுப் பணியாளர்களுக்கு 40 வகைக்கும் மேற்பட்ட படிகள் வழங்கப்படுகின்றன. சில படிகளைத் தவிர மற்ற அனைத்துப் படிகளுக்கும் 100 சதவீதம் உயர்வு அளிக்கப்படுகிறது. திருத்தி அமைக்கப்பட்ட ஊதியத்தில் வீட்டு வாடகைப்படி உயர்த்தி நிர்ணயம் செய்யப்படுவதுடன் சில மாநகரங்கள், நகரங்கள் திருத்தி வகைப்படுத்தப்படுகிறது. அதன்படி சென்னை மற்றும் அதன் 32 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள பகுதிக்கு, குறைந்தபட்ச படியாக ரூ.1,300-ம் (பழையது ரூ.500), அதிகபட்ச படியாக ரூ.8,300-ம் (பழையது ரூ.3,500) திருத்தி அமைக்கப்படுகிறது. கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு மற்றும் 16 கி.மீ. சுற்றளவில் வசிப்பவர்களுக்கான படி, குறைந்தபட்சம் ரூ.700 ஆகவும், அதிகபட்சம் ரூ.4,300 ஆகவும் உயர்த்தப்படுகிறது. இதர நகராட்சிகள், வட்ட தலைமையகங்களில் ரூ.400 மற்றும் ரூ.2,200 என்றும் படி உயர்த்தி நிர்ணயிக்கப்படுகிறது. நகர ஈட்டுப்படி நகர ஈட்டுப்படி வீதங்கள் இரண்டு மடங்காக உயர்த்தப்படுகிறது. இதற்காக சில மாநகரங்கள் நிலை உயர்த்தி திருத்தப்பட்டுள்ளன. ஓய்வூதியம் தற்போது குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரத்து 50-ம், அதிகபட்சமாக ரூ.38 ஆயிரத்து 500-ம் வழங்கப்பட்டு வருகிறது. திருத்திய ஊதிய விகிதத்தின் அடிப்படையில், ஓய்வூதியம் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 500 (குறைந்தபட்சம் ரூ.7,850) என்றும், குடும்ப ஓய்வூதியம் ரூ.67 ஆயிரத்து 500 (குறைந்தபட்சம் ரூ.7,850) என்றும் நிர்ணயிக்கப்படுகிறது. சிறப்பு ஊதியம் பெறுவோர் ஓய்வு பெறும்போது, சிறப்பு ஊதியம் பெறுவோருக்கான ஒட்டுமொத்த தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு ஓய்வூதியமாகவும் (பழைய தொகை ரூ.1,500); ஒட்டுமொத்த தொகையாக ஒரு லட்சம் ரூபாயாகவும் (பழையதொகை ரூ.60 ஆயிரம்) நிர்ணயிக்கப்படுகிறது. அங்கன்வாடி பணியாளர், குறுஅங்கன்வாடி பணியாளர், கிராம பஞ்சாயத்து செயலர் ஆகியோருக்கும் இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சமையலர், சமையல் உதவியாளர், அங்கன்வாடி உதவியாளர், ஆகியோருக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு ஓய்வூதியமாகவும் (பழைய தொகை ரூ.1,500); ஒட்டுமொத்த தொகை ரூ.50 ஆயிரமாகவும் (பழையதொகை ரூ.25 ஆயிரம்) நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ் இணைய கல்விக்கழகத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளம் - முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழ் இணைய கல்விக்கழகத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளம் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார் | தமிழ் இணைய கல்விக்கழகத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ் இணைய கல்விக்கழகத்தின் http://www.tamilvu.org/என்ற இணையதளம் ரூ.12 லட்சத்து 26 ஆயிரம் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இம்மேம்படுத்தப்பட்ட இணையதளம் பொதுமக்கள், மாணவர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் தமிழ் இணையக்கல்விக் கழகத்தின் கல்வித்திட்டங்கள், நூலகம், கணித்தமிழ், ஆய்வு மற்றும் உருவாக்கம், தகவலாற்றுப்படை போன்ற பல விவரங்களைக் கொண்டிருக்கும். தமிழ் இணையக்கல்விக் கழகத்தால் ரூ.59 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள “தமிழிணையம் மென்பொருள் தொகுப்பு 2” என்னும் தமிழ் மென்பொருள் தொகுப்பினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இந்த தமிழ் மென்பொருள் தொகுப்பில், தமிழ் இணையம் சொல்பேசி, தமிழ் இணையம் விவசாயத்தகவி, தமிழ் இணையம் தொல்காப்பியத்தகவல் பெறுவி, தமிழ் இணையம் தமிழ்ப் பயிற்றுவி மற்றும் தமிழ் இணையம் நிகழாய்வி எனும் 5 தமிழ் மென்பொருள்கள் அடங்கியுள்ளன. இம்மென்பொருள் தொகுப்பினைத் தமிழ் இணையக்கல்விக் கழகத்தின் இணையதளத்தில் இருந்து பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். தமிழ்மொழி அல்லது தமிழோடு தொடர்புடைய தொல்லியல் சின்னங்கள், செப்பேடுகள், கல்வெட்டுக்கள், பாறை ஓவியங்கள், சுவரோவியங்கள், கோவில்கள், சிற்பங்கள், நாணயங்கள் உள்ளிட்ட ஆய்வாதார வளங்களைத் தமிழ் இணையக்கல்விக் கழகம், தானே ஆவணப்படுத்தியும், எழும்பூர் அருங்காட்சியகம், தமிழக தொல்லியல் துறை, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கூடம் போன்ற தமிழக அரசின் பிற துறைகளில் ஆவணப்படுத்தியதைச் சேகரித்தும் முதற்கட்டமாக ரூ.20 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள “தகவலாற்றுப்படை” என்னும் இணையதளத்தையும்; ஒரு கோடி ரூபாய் செலவினத்தில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் இணையக்கல்விக் கழகத்தின் “தமிழ் மின் நூலகம்” இணையதளத்தினையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இம்மின் நூலகத்தில் தமிழ் மொழி தொடர்புடைய அச்சு நூல்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட ஆய்வாதார வளங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் பயன்பெற்றிடும் வகையில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின்னாளுமை முகமையினால் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் மாதம் இருமுறை வெளிவரவுள்ள “இ-மடல்” முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இம்மின் மடல் மூலம், மத்திய, மாநில அரசுகளின் திட்டம், தற்போதைய தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகள், மின்னாளுமையில் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை அறிந்துகொள்ள உதவும். மேலும் ரூ.173 கோடியே 84 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 12 October 2017

G.O.Ms.No.303, Dated 11th October 2017. | PAY COMMISSION G.O DOWNLOAD | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


G.O.Ms.No.303, Dated 11th October 2017. | PAY COMMISSION G.O DOWNLOAD | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. | FINANCE [Pay Cell] DEPARTMENT G.O.Ms.No.303, Dated 11th October 2017. (Heyvilambi, Puratasi-25, Thiruvalluvar Aandu 2048) ABSTRACT OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Pay - Orders - Issued - The Tamil Nadu Revised Pay Rules, 2017 - Notified. Read the following:- 1. G.O.Ms.No.40, Finance (Pay Cell) Department, dated: 22-02-2017. 2. G.O.Ms.No.189, Finance (Pay Cell) Department, dated 27-06-2017. DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

G.O NO. 300 DT: OCTOBER 10, 2017 3% D.A HIKE G.O DOWNLOAD | D.A. HIKE FROM 136% TO 139% | தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

G.O NO. 300 DT: OCTOBER 10, 2017 3% D.A HIKE G.O DOWNLOAD | 3% D.A ANNOUNCED | D.A. HIKE FROM 136% TO 139% | தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அகவிலைப்படி - 01.07.2017 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அகவிலைப்படி (டி.ஏ.) 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 1.7.17 முதல் அடிப்படை சம்பளத்தில் 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்தது. 3 சதவீத உயர்வு ஆறாவது மத்திய சம்பள கமிஷன் பரிந்துரைத்த ஊதிய விகிதத்தில் தொடர்ந்து ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 136 சதவீதத்தில் இருந்து 139 சதவீதமாக முன்தேதியிட்டு 1.7.2017 முதல் உயர்த்தி ஆணையிட்டுள்ளது. 2016-ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்குவோருக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும் மத்திய அரசின் முடிவை தமிழக அரசு கவனமாக ஆய்வு செய்தது. அதன்படி, மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படியை 1.7.17 முதல் 3 சதவீதம் உயர்த்தி வழங்கிட முடிவெடுத்துள்ளது. அதன்படி, மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 139 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.DOWNLOAD |
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 11 October 2017

HALF YEARLY EXAMINATION 2017 TIMETABLE DOWNLOAD | தமிழ் நாடு பள்ளிக்கல்வித்துறை | அரையாண்டுத்தேர்வு கால அட்டவணையை பதிவிறக்கம் செய்யுங்கள்.


HALF YEARLY EXAMINATION 2017 TIMETABLE DOWNLOAD | தமிழ் நாடு பள்ளிக்கல்வித்துறை | அரையாண்டுத்தேர்வு கால அட்டவணையை பதிவிறக்கம் செய்யுங்கள். | SSLC HALF YEARLY EXAMINATIONS DECEMBER 2017 DATE DAY SUBJECT 11.12.2017 MONDAY LANGUAGE PAPER —1 12.12.2017 TUESDAY LANGUAGE PAPER — II 14.12.2017 THURSDAY ENGLISH PAPER — I 15.12.2017 FRIDAY ENGLISH PAPER —II 18.12.2017 MONDAY MATHEMATICS 20.12.2017 WEDNESDAY SCIENCE 21.12.2017 THURSDAY OPTIONAL LANGUAGE 23.12.2017 SATURDAY SOCIAL SCIENCE HOURS :10:00 a.m. to 10:10.a.m - Reading the question paper 10:10 a.m. to 10:15 a.m - Filling up of particulars in the answer sheet 10:15 a.m. to 12:45 p.m - Duration of Examination | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு, டிசம்பர் 2017 அறிவிப்பு.

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 600 006 தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு, டிசம்பர் 2017 NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (NMMS) செய்திக் குறிப்பு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் (Block Level) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு தேதி 09.12.2017 (சனிக்கிழமை). இத்தேர்வுக்கான வெற்று விண்ணப்பங்களை 13.10.2017 முதல் 23.10.2017 வரை இத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணாக்கர் தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.10.2017. கூடுதல் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காண வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.

தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100இல் இருந்து 15,700 ஆக உயர்வு. தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு.7வது ஊதிய குழு பரிந்துரைகள் - 1.10.2017 தேதி முதல் பணப்பயனுடன் அமல்படுத்தப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு : மத்திய ஊதிய குழு திருத்திய ஊதிய விகிதங்களை செயல்படுத்தும் பொழுதெல்லாம், தமிழ்நாடு அரசும் அதே ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்து வந்துள்ளது. அதே போல், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும் போது, உடனுக்குடன் மாநில அரசும் உயர்த்திய அகவிலைப்படியை வழங்கி வருகிறது. மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களின் அடிப்படையில், மாநில அரசின் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதத்தை உயர்த்தி வழங்குவது குறித்து தக்க பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு அளித்திட 'அலுவலர் குழு' 2017-ஐ அமைத்தது. அதன்படி, அலுவலர் குழு ஆய்வுகள் மேற்கொண்டு தனது பரிந்துரைகளை 27.9.2017 அன்று தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்தது. இதுவரை தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அலுவலர் குழுக்கள் எடுத்துக் கொண்ட கால அளவை விட, இம்முறை அமைத்த அலுவலர் குழு தான் மிகக் குறைந்த கால அவகாசத்தில் அறிக்கை அளித்து, ஊதிய விகிதங்களில் மாற்றங்களை விரைவாக கொண்டு வர வழி வகுத்துள்ளது. இப்பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வு செய்து, இன்று (11.10.2017) எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவற்றை செயல்படுத்துவதற்கான அரசாணைகளை உடனடியாக பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளேன். | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சென்னையில் வரும் 13, 14 ஆகிய தேதிகளில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்

13-ல் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் | மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வரும் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் இளங்கோவன் மதுரையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் தலைமையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்.13, 14 தேதிகளில் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ளது. இதில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்குதல் மற்றும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்தல், பருவ மழை தொடங்க உள்ளதால் பள்ளிகளில் மேற்கொள்ள உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பணி நிறைவு பெறும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு விரைவாக பணப்பலன் வழங்குதல், பள்ளி வளாகங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்களில் மாணவர்களை மரக்கன்றுகள் நட ஊக்குவித்தல், பிளஸ் 1 மாதிரி வினாத்தாள் தயாரித்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு ஊழியர்களின் 7-வது ஊதியக்குழு தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று காலை நடக்கிறது | 7-வது ஊழியக் குழு அரசாணை இன்றே வெளியாக வாய்ப்பு.

தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது | அரசு ஊழியர்களின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று காலை நடக்கிறது. அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஊதிய உயர்வு அளிப்பது குறித்து அமைச்சரவையில் இறுதி செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 7-வது சம்பள உயர்வு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் வழங்கும் வகையில் ஊதியக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் தலைவரான சண்முகம் கடந்த மாதம் 27-ந்தேதி ஊதியக்குழு பரிந்துரைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார். குழுவின் பரிந்துரைகளை அரசாணைகளாக வெளியிடும் பணிகள் நிதித்துறையில் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. பரிந்துரைகளை ஏற்பது தொடர்பான கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடக்கிறது. முதல்-அமைச்சருடன் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், நிதித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து விளக்கி கூறுகிறார்கள். அதனை தொடர்ந்து நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் 7-வது ஊழியக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் அதற்கான அரசாணை இன்றே வெளியாக வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு 20 முதல் 25 சதவீதம் அளவில் சம்பள உயர்வு இருக்கும் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 1-7-2017 முதல் நிலுவை தொகையை வழங்க முடிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE