Tuesday, 31 January 2017

NEET UG 2017 OFFICIAL NOTIFICATION | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்

மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம் | மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர முதல் முறையாக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 80 இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1500 மையங்களில் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.cbseneet.nic.in என்ற இணையத்தளம் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் நடத்தப்படும் தேர்வில் 10 லட்சம் மாணவர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு 8 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் நுழைவுத் தேர்வு எழுத அதிகபட்ச வயது 25 ஆக நிர்ணயம் செய்து சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதனிடையே நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
NEET UG 2017
  • Name of Exam                     :National Eligibility cum Entrance Test (NEET)
  • Organised                            :Central Board of Secondary Education (CBSE)
  • Category                           :Undergraduate
  • Level                                      :National Level
  • Courses Offered                 :NEET UG – MBBS and BDS
  • Number of Seats Offered :52,305 seats for MBBS and BDS
  • Duration of Course           
1.    MBBS: 4½ years with 1 year compulsory rotating internship
2.    BDS: 4 years with 1 year compulsory rotating internship
  • Exam Duration                    :NEET UG – 3 hours
  • Mode of Examination        :UG – Offline
  • Types of Question             :Multiple Choice Questions with a single correct response.
  • Number of Questions        : 180
  • Negative Marking               : Yes
  • Examination Date               : 7 th May, 2017
NEET 2017 Application Form
Candidates can apply for NEET MBBS Admission 2017 exam through online process only
NEET Exam 2017 Application fees
1.    OBC/General            Rs.1400/-            Rs.2800/- (Rs.1400 + 1400)
2.    SC/ST/PH      Rs.750/-            Rs.2150/- (Rs.750 + 1400)
Candidates can make the necessary fee payment either through online or offline process:
Online process: You can pay the necessary fees through debit/credit card using online payment gateway.Offline process: You can make the payment through bank challan.
NEET 2017 Exam Date
  • Last date to submit the application form (without late fee) 31.01.2017 (Tuesday)
  • Last date to submit the application form (with late fee)  01.03.2017 (Wednesday)
  • Admit Card Release Date First week of April 2017
  • NEET 2017 Exam Date     7th May 2017
  • Result Declaration for NEET Exam        First week of June 2017
  • NEET Counselling After Result Announcement
NEET 2017 Exam Pattern
The examination would be conducted in the 7th May 2017. Below we have mentioned the NEET 2017 exam pattern:
  • Courses:        Conducted for BDS/MBBS courses
  • Number of Questions:         180 multiple choice questions
  • Subjects:        Physics, Chemistry, Zoology & Botany
  • Language:     English or Hindi
  • Mode of Exam:         Offline mode (pen and paper based mode)
  • Duration:       3 hours
  • Marking Scheme:     4 marks will be awarded for each correct answer
  • Negative Marking:    1 mark will be deducted for each incorrect answer as negative marking.
NEET 2017 Syllabus
  • NEET syllabus would consist of 4 subjects, i.e. Chemistry, Physics, Zoology and Botany.Questions would be asked from the above mentioned subjects only.It will contain 11th & 12th board (NCERT & CBSE) academic syllabus.Few questions would be asked from the other boards syllabus. 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்

நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல் | எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வுக்கு பதிலாக, ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கைக்கு வகை செய்யும் சட்ட முன்வடிவு செவ்வாய்க்கிழமை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த இந்த சட்டமுன்வடிவின் முக்கிய அம்சங்கள்:  'மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் எனப்படும் ஒரே சீரான நுழைவுத் தேர்வு காரணமாக கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தத் தேர்வு தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி வாரியத்தால் வகுக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து வேறுபட்டிருக்கிறது. எனவே, தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை தீர்க்கும் வகையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில், மாணவர்களை சேர்ப்பதற்கு ப்ளஸ் டூ தேர்வில் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தொடர்ந்து சேர்த்துக்கொள்வது என்று அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதேபோன்று, மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் முதுநிலைப் படிப்புகளுக்குரிய சேர்க்கை தொடர்பானவற்றில் தற்போதுள்ள நடைமுறையே தொடர வேண்டும் என மாநில அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.' இவ்வாறு, 2017-ம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டமுன்வடிவை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்களும் வரவேற்றுள்ளது கவனிக்கத்தக்கது. மேலும் 2 சட்ட முன்முடிவுகள்: 2017-ம் ஆண்டின் தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை ஒழுங்குமுறைப்படுத்தும் திருத்தச் சட்டம் என்ற சட்ட முன்வடிவை வேளாண்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழகத்தில் உள்ள 277 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மனித ஆற்றல் மூலம் ஏலம் நடத்தப்படுவதை தவிர்த்து, மின்னணு வர்த்தகம், சீரான ஒருமுனை உரிமம், ஒருமுனை விற்பனைக் கட்டணத் தீர்வை ஆகியவை தொடர்பான வரைமுறைகளை கொண்டு இச்சட்ட முன்வடிவு வகை செய்கிறது. மேலும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தாக்கல் செய்த சட்ட முன்வடிவில், நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்ட ஒருவர் தகுந்த காரணமின்றி பணி நீக்கம் செய்யப்பட்டால், அவர் செய்யும் மேல்முறையீட்டுக்கு சிறந்த முறையில் தீர்வு காண 1908-ம் ஆண்டு உரிமையியல் நடைமுறை தொகுப்பு சட்டத்தின்படி மேல்முறையீடு விசாரணை அலுவலருக்கு அதிகாரங்களை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NEET(UG) - 2017 | CBSE to conduct exam on May 7 | NEET 2017 Latest News – Application Form, Exam Date, Syllabus, Pattern, Eligibility Criteria, Cut Off, Admit Card, Results @ http://cbseneet.nic.in/cbseneet/welcome.aspx

As per regulations framed under the Indian Medical Council Act-1956 as amended in 2016 and the Dentists Act-1948 as amended in 2016, NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST (UG) – 2017 [NEET(UG)-2017] will be conducted by the Central Board of Secondary Education (CBSE), for admission to MBBS/BDS Courses in India in Medical/Dental Colleges run with the approval of Medical Council of India/Dental Council of India under the Union Ministry of Health and Family Welfare, Government of India except for the institutions established through an Act of Parliament e.g. AIIMS and JIPMER Puducherry.The NEET (UG)-2017 will be conducted on Sunday, the 7 th May, 2017. The responsibility of the CBSE is limited to the conduct of the entrance examination, declaration of result and providing All India Rank to the Directorate General Health Services, Government of India for the conduct of counselling for 15% All India Quota Seats and for supplying the result to state/other Counselling Authorities.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TEACHERS RECRUITMENT 2017 | AEES Kalpakkam (Tamil Nadu) | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - PGT-GT-SPECIAL TEACHERS | NO. OF VACANCIES - MANY

>>>>>>>
>>Employment Type:Govt Job
>>Application:OFFLINE
>>Website:http://www.aees.gov.in/htmldocs/pandc.html
>>Name of the Post:PGT-GT-SPECIAL TEACHERS
>>கல்வித் தகுதி:AS PER NORMS
>>காலியிடங்கள்:MANY
>>சம்பளம்:Rs. 9300-Rs 34800 plus Grade Pay Rs. 4800/-
>>தேர்வு செய்யப்படும் முறை:WRITTEN EXAM
>>கடைசித் தேதி:22.02.2017
>>தேர்வு நாள்:LATER
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ்-2 தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை 2-ந்தேதி வரை பெறலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ்-2 தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை 2-ந்தேதி வரை பெறலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு | பிளஸ்-2 தேர்வு வருகிற மார்ச் மாதம் தொடங்குகிறது. இந்த தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து கடந்த 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பதிவிறக்கம் செய்யும் தேதி பிப்ரவரி 2-ந்தேதி என்று நீடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TIDCO RECRUITMENT 2017 | TIDCO-CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - GENERAL MANAGER | NO. OF VACANCIES -1

>>>>>>>
>>Employment Type:Govt Job
>>Application:OFFLINE
>>Website:http://www.aees.gov.in/htmldocs/pandc.html
>>Name of the Post:GENERAL MANAGER
>>கல்வித் தகுதி:AS PER NORMS
>>காலியிடங்கள்:1
>>சம்பளம்:Rs.15600-Rs39100+Grade Pay Rs. 7600
>>தேர்வு செய்யப்படும் முறை:MERIT
>>கடைசித் தேதி:10.02.2017
>>தேர்வு நாள்:LATER
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TANCET 2017 - எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக துறைசார் பொறியியல் கல் லூரிகள், உறுப்புக்கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.பிளான். எம்.ஆர்க். இடங்கள் "டான்செட்" பொது நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 2017-18-ம் கல்வி ஆண்டில் எம்சிஏ, எம்பிஏ படிப்புக்கான டான்செட் நுழைவுத் தேர்வு மார்ச் 25-ம் தேதியும், எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான். படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு மார்ச் 26-ம் தேதியும் நடைபெற உள்ளன. இத்தேர்வுக்கு ஆன்லைனில் (www.annauniv.edu/tancet2017) மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 20-ம் தேதி ஆகும். ஆன்லைன் விண்ணப்ப முறை, விண்ணப்பக் கட்டணம் போன்ற விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட்டையும் இணைய தளத்தில் இருந்துதான் பதிவிறக் கம் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. இத்தேர்வுக்கு ஆன்லைனில் (www.annauniv.edu/tancet2017) மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 20-ம் தேதி ஆகும். ஹால்டிக்கெட்டையும் இணையதளத்தில் இருந்துதான் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வெளிநாடு வாழ் இந்தியர் ’நீட்’ தேர்வு எழுதலாமா?

வெளிநாடு வாழ் இந்தியர் 'நீட்' தேர்வு எழுதலாமா? | "எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வில், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் பங்கேற்கலாம். அவர்களுக்கு, அரசு கல்லுாரிகளில் தனி இட ஒதுக்கீடு கிடையாது," என, சி.பி.எஸ்.., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின் தெரிவித்து உள்ளார். எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கு, அனைத்து மாநிலங்களிலும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில், கடந்த ஆண்டு மட்டும், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல், அனைத்து மாநில மாணவர்களும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தேர்வில், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் பங்கேற்க முடியுமா என்பது குறித்து, சி.பி.எஸ்.., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின் கூறியதாவது: வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், இந்தியாவில் நடக்கும், 'நீட்' தேர்வில் பங்கேற்கலாம். அவர்களுக்கு, வெளிநாடுகளில் தேர்வு மையங்கள் கிடையாது. அதில், மாணவர்கள் தேர்ச்சி பெற்றால், மத்திய அரசின் ஒதுக்கீட்டிலோ, தமிழக ஒதுக்கீட்டிலோ இடங்கள் கிடையாது. ஆனால், அவர்களால், தனியார் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் பெற முடியும். அதற்கு, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.இவ்வாறு அவர் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைய, ஜூன், 30 வரை, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

சி.பி.எஸ்.இ., திட்டத்தில் சேர ஜூன் 30 வரை அவகாசம் | 'சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைய, ஜூன், 30 வரை, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், தனியார் பள்ளிகள் இணைய, ஆன்லைன் முறையில், விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வரும் கல்வி ஆண்டில், இணையும் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் பணிகள் முடிந்து விட்டன. இந்நிலையில், 2018 - 19ம் கல்வி ஆண்டில், சி.பி.எஸ்.இ.,யில் இணைய விரும்பும் பள்ளிகளிடம், ஆன்லைனில் விண்ணப்பம் பெறும் பணி, ஜன., 2 முதல், துவங்கி உள்ளது. 'பள்ளிகள், http://cbseaff.nic.in என்ற இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம். ஜூன், 30 வரை, விண்ணப்ப பதிவு நடக்கும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிறப்பு பாஸ்போர்ட் மேளா 4-ந் தேதி சென்னையில் நடக்கிறது

சிறப்பு பாஸ்போர்ட் மேளா 4-ந் தேதி சென்னையில் நடக்கிறது | சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் வரும் 4-ந் தேதி (சனிக் கிழமை) சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடக்கிறது. இதுகுறித்து பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் வரும் 4-ந் தேதி (சனிக்கிழமை) சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடக்கிறது. இதனையொட்டி சென்னை சாலிகிராமம், தாம்பரம் மற்றும் அமைந்தகரை (நெல்சன் மாணிக்கம் சாலை) ஆகிய இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையம் வரும் 4-ந் தேதி (சனிக்கிழமை) வழக்கம் போல் செயல்படும். பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் விண்ணப்பங்கள் வழக்கம் போல் பெற்றுக்கொள்ளப்படும். சுமார் 2 ஆயிரத்து 400 விண்ணப்பதாரர்கள் இந்த சிறப்பு மேளாவின் மூலம் பலன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாஸ்போர்ட் மேளாவில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பாஸ்போர்ட் அலுவலகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.passportindia.gov.in மூலம் ஆன்லைனில் பதிவு செய்து, விண்ணப்ப பதிவு எண்ணை (.ஆர்.என்.) பெற்றுக்கொண்டு, ஆன்லைனிலேயே விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி சந்திப்பு முன்பதிவு நேரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த மேளாவில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது சந்திப்பு முன்பதிவு விவரம் கொண்ட .ஆர்.என். பதிவு எண் தாளை அச்சிட்டு எடுத்து வரவேண்டும். தேவையான அனைத்து ஆவணங்களை அசலுடன், சுய சான்றளிக்கப்பட்ட ஒரு நகலுடன் கொண்டு வரவேண்டும். புதிய பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பம், காவல்துறை தடையின்மை சான்றிதழ் (பி.சி.சி.) பிரிவிலும் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும். இந்த மேளாவில் தட்கல் (உடனடி பாஸ்போர்ட்) விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த மேளாவிற்கான சந்திப்பு முன்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணிக்கு திறக்கப்படும். மேளா நாளன்று, குறித்த நேரத்திற்கான விண்ணப்பதாரர்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்கப்படுவார்கள். நிறுத்திவைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் விண்ணப்பதாரர்கள் மற்றும் மறுக்கப்பட்ட டோக்கன்கள் வைத்திருப்போர் மற்றும் மையத்திற்கு நேரடியாக வந்து விண்ணப்பம் செய்ய வருபவர்கள் இந்த மேளாவில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய பட்ஜெட் தாக்கல் வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உயருமா?

மத்திய பட்ஜெட்  தாக்கல் வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உயருமா? | பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் வருமான வரிவிலக்கு வரம்பு உயருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால்,  இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். 2017-2018-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பொது பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். அவர் பட்ஜெட் தாக்கல் செய்வது இது 4-வது முறை ஆகும். இந்த ஆண்டு பொது பட்ஜெட்டுடன் சேர்த்து ரெயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. அதாவது பொது பட்ஜெட்டின் ஒரு அங்கமாக ரெயில்வே பட்ஜெட் இருக்கும். பட்ஜெட் உரையின் போது புதிய வரிகள், வரிச்சலுகைகள் பற்றிய அறிவிப்பை அருண் ஜெட்லி வெளியிடுவார். பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்பை நீக்கும் வகையிலும் சில முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 15 சதவீதமாக இருக்கும் சேவை வரி உயர்த்தப்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். வேளாண்மை, உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும், நவீன உத்திகளுடன் புதிய நிறுவனங்களை தொடங்குவதற்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான திட்டங்களையும் அருண் ஜெட்லி அறிவிப்பார் என்று கருதப்படுகிறது. நாட்டில் விலைவாசி அதிகரித்து இருப்பதால் தனி நபர் வருமான வரிவிலக்கு வரம்பை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் வற்புறுத்தி வருகிறார்கள். எனவே தனி நபர் வருமான வரிவிலக்கு வரம்பு தற்போதுள்ள ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்கள் மத்தியில் நல்ல சூழ்நிலையை உருவாக்கவும், மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்திலும் அருண் ஜெட்லி வருமான வரிவிலக்கு வரம்பை உயர்த்துவார் என்று கருதப்படுகிறது. வீட்டுக்கடனுக்காக தற்போது செலுத்தப்படும் வட்டிக்கு ரூ.2 லட்சம் வரை கழிவு உள்ளது. இந்த வட்டிக்கழிவு சலுகை ரூ.2½ லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது. மேலும் மருத்துவ செலவுக்கான கழிவுத்தொகையும் உயர வாய்ப்பு இருக்கிறது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் கிராமப்புற பொருளாதாத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயிகள், பெண்கள் நலனுக்கான திட்டங்களும், கல்வி, சுகாதாரம் போன்ற சமூக துறைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வரும் கல்வி ஆண்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது புதிய கட்டணம் நிர்ணயிக்க நீதிபதி பாலசுப்ரமணியன் கமிட்டி முடிவு

வரும் கல்வி ஆண்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது புதிய கட்டணம் நிர்ணயிக்க நீதிபதி பாலசுப்ரமணியன் கமிட்டி முடிவு | தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அடுத்த 3 ஆண்டு களுக்கு கல்வி கட்டணத்தை திருத்தியமைக்க நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் கமிட்டி முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து வரும் கல்வி ஆண்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறது. தமிழகத்தில் அண்ணா பல் கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட சதவீத எண்ணிக்கையிலான இடங்கள் அரசு ஒதுக்கீடு மூலமாகவும், எஞ்சிய இடங்கள் அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் மூலமாகவும் நிரப்பப்படும். அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப் படும் பிஇ, பிடெக், பி.ஆர்க். இடங்களுக்கும் அதேபோல், எம்இ, எம்டெக், எம்ஆர்க் மற்றும் எம்பிஏ, எம்சிஏ இடங்களுக்கும் நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் தலைமையிலான சுயநிதி தொழிற் கல்லூரி கல்விக்கட்டண நிர்ணயக் குழு கட்டணத்தை நிர்ணயம் செய்கிறது. அந்த வகையில், கடந்த 2013-14-ம் ஆண்டில் கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அது நடப்பு கல்வி ஆண்டு (2016-17) வரையில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், சுயநிதி பொறி யியல் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் அடுத்த 3 ஆண்டு களுக்கு கல்விக்கட்ட ணத்தை திருத்தியமைக்க நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் கமிட்டி முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகங்கள் எதிர்பார்க்கும் உத்தேச கல்விக்கட்டண விவரங்களை தேவையான ஆவணங்களுடன் பிப்ரவரி மாதம் 28-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு தமிழகத்தில் உள்ள அனைத்து சுயநிதி பொறி யியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அக்கமிட்டி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு கல்லூரியிடமிருந்தும் பெறப்படும் கல்விக்கட்டண விவரங்கள் ஆய்வுசெய்யப்பட்டு புதிய கல்விக்கட்டணம் நிர்ணயிக் கப்படும் என்று கமிட்டியின் உயர் அதிகாரி ஒருவர் 'தி இந்து'விடம் கூறினார். புதிய கட்டணம் நிர்ணயிக்கப் படுவதை தொடர்ந்து வரும் கல்வி ஆண்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கல்விக்கட்டணம் அதிகரிக்கும். கல்விக்கட்டணத்தில் டியூஷன் கட்டணம், மாணவர் சேர்க்கை கட்டணம், சிறப்பு கட்டணம், ஆய்வகம், கணினி, இண்டர்நெட், நூலகம், விளை யாட்டு, பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டணங்களும் அடங்கும். தற்போது வசூலிக்கப்படும் கல்விக்கட்டணம் பிஇ, பிடெக் ("நாக்" அங்கீகாரம்) ரூ.45,000 (ஓராண்டுக்கு) பிஇ, பிடெக் (சாதாரணம்) ரூ.40,000 (ஓராண்டுக்கு) எம்இ, எம்டெக் (நாக் அங்கீ காரம்) ரூ.30,000 (ஓராண்டுக்கு) எம்இ, எம்டெக் (சாதாரணம்) ரூ.25,000 (ஓராண்டுக்கு) எம்பிஏ, எம்சிஏ (நாக் அங்கீகாரம்) 18,000 (ஒரு செமஸ் டருக்கு) எம்பிஏ, எம்சிஏ (சாதாரணம்) ரூ.15,000 (ஒரு செமஸ்டருக்கு)
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலைக்கு மகன், மகள் என்ற பாகுபாடு கூடாது ஐகோர்ட்டு உத்தரவு

கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலைக்கு மகன், மகள் என்ற பாகுபாடு கூடாது ஐகோர்ட்டு உத்தரவு | கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலைக்கு மகன், மகள் என்ற பாகுபாடு காட்டக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பூலாங்குளத்தை சேர்ந்த முத்துசெல்வி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- எனது தந்தை வேல்முருகன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலை செய்தார். திடீரென 2012-ம் ஆண்டு இறந்தார். அதன்பிறகு எனக்கு திருமணமானது. இதனையடுத்து எனக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்தேன். ஆனால் எனக்கு திருமணம் ஆனதை காரணம் காட்டி, என்னுடைய விண்ணப்பத்தை நுகர்பொருள் வாணிப கழக தலைவர் நிராகரித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து கருணை அடிப்படையில் எனக்கு வாரிசு வேலை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், "திருமணம் ஆனாலும் வாரிசு வேலை பெறுவதற்கு ஆண்பிள்ளைகளுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் பெண்ணுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பெற்றோர் பராமரிப்பு சட்டப்படி ஆண், பெண் பிள்ளைகள் சமம். அதேபோல அரசியலமைப்பு சட்டப்படி ஆணும், பெண்ணும் சமம். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது திருமணம் ஆன பெண்ணும் வாரிசு வேலை பெறலாம்" என்று வாதாடினார். விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:- கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலையில் மகன், மகள் என்ற பாகுபாடு காட்டக்கூடாது. இந்த விஷயத்தில் ஒருவரின் குழந்தைகள் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும். எனவே மனுதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. நுகர்பொருள் வாணிப கழக மேலாளர் (நிர்வாகம்) மனுதாரரின் மனுவை பரிசீலித்து, காலிப்பணியிடங்கள் இருக்கும்பட்சத்தில் தகுதிக்கு ஏற்ப வேலையை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE