Friday, 6 January 2017

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை 25-ந் தேதிக்கு பிறகு வழங்கப்படும் ராஜேஷ் லக்கானி தகவல்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை 25-ந் தேதிக்கு பிறகு வழங்கப்படும் ராஜேஷ் லக்கானி தகவல் | வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள புதிய வாக்காளர்களுக்கு 25-ந் தேதிக்கு பிறகு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார். இதுகுறித்து, ராஜேஷ் லக்கானி நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- வாக்காளர் அடையாள அட்டை தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் 5-ந் தேதி (நேற்று) வெளியாகி உள்ளது. அதில் 15 லட்சத்து 4 ஆயிரத்து 233 பேர் புதிய வாக்காளர்களாக சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படவேண்டும். தேசிய வாக்காளர் தினமான 25-ந் தேதிக்குப் பிறகுதான் பொதுவாக புதிய அட்டை வழங்கப்பட்டு வருகிறது. உடனே அட்டை வேண்டுமென்றால் அரசு -சேவை மையங்களில் ரூ.25 செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். மற்றபடி 25-ந் தேதிக்கு பிறகு அவர்களுக்கு ரகசிய குறியீட்டு எண் எஸ்.எம்.எஸ். மூலம் வழங்கப்படும். அதை வைத்து அவர்கள் இலவசமாக வாக்காளர் அடையாள அட்டைகளை பெறலாம். இதற்காக புதிய மின்னணு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக ..எஸ். அதிகாரிகள் உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கவுள்ளது. அந்த தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக நான் 6-ந் தேதி (இன்று) டெல்லி செல்கிறேன். என்னுடன் 4 அலுவலர்கள் வருகின்றனர். அந்த மாநிலங்களில் தேர்தல் பார்வையாளராக தமிழகத்தில் இருந்து 34 ..எஸ். அதிகாரிகள், 32 .எப்.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். ஜவஹர், சகாயம், கோபாலகிருஷ்ணன், குமார் ஜெயந்த், பாலசந்திரன், உதயசந்திரன், ஹர்சகாய் மீனா, முருகையா ஆகிய ..எஸ். அதிகாரிகளும் அந்த பட்டியலில் உள்ளனர். டெல்லியில் 10-ந் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. எந்த மாநிலத்துக்கு யார்-யார் செல்லவேண்டும் என்பது பற்றி அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும். செலவு கணக்கு சமீபத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தலும், திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தலும் நடந்தது. அந்த தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பித்துள்ளனர். அதன்படி அரவக்குறிச்சி எம்.எல்.. (.தி.மு..) செந்தில்பாலாஜி 9 லட்சத்து 97 ஆயிரத்து 62 ரூபாயும், தி.மு.. வேட்பாளர் கே.சி.பழனிசாமி 19 லட்சத்து 20 ஆயிரத்து 974 ரூபாயும் செலவழித்ததாக தெரிவித்துள்ளனர். திருப்பரங்குன்றம் தஞ்சாவூரில் வெற்றி பெற்ற (.தி.மு..) ரெங்கசாமி 18 லட்சத்து 94 ஆயிரத்து 994 ரூபாயும், தி.மு.. வேட்பாளர் அஞ்சுகம் பூபதி 27 லட்சத்து 52 ஆயிரத்து 754 ரூபாயும் செலவழித்ததாக கணக்கு காட்டியுள்ளனர். திருப்பரங்குன்றம் எம்.எல்.. (.தி.மு..) .கே.போஸ் 22 லட்சத்து 86 ஆயிரத்து 386 ரூபாயும், தி.மு.. வேட்பாளர் சரவணன் 22 லட்சத்து 86 ஆயிரத்து 892 ரூபாயும் செலவழித்ததாக கூறியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

TRB