Wednesday, 18 January 2017

தனியார் பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து 3 மாதங்களுக்குள் பரிசீலிக்கவேண்டும் உயர்கல்வித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

தனியார் பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து 3 மாதங்களுக்குள் பரிசீலிக்கவேண்டும் உயர்கல்வித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு | பதவி உயர்வு கேட்டு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை 3 மாதங்களுக்குள் சட்டப்படி பரிசீலிக்கும்படி உயர்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை செய்பவர்கள் சிட்டிபாபு, சீனுவாசன், செல்வம், ரமேஷ், ஆனந்தன். இவர்கள் 5 பேரும், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- அரசாணை ரத்து நாங்கள் 15 முதல் 23 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு பயிற்றுவிப்பாளர் அல்லது விரிவுரையாளர் பதவி உயர்வு வழங்கவேண்டும். ஆனால், பல ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. 1989-ம் ஆண்டு பயிற்றுவிப்பாளர் பதவியை அகற்றி தொழிற்கல்வித்துறை இணை இயக்குனர் அரசாணை பிறப்பித்தார். இந்த அரசாணையை எதிர்த்த ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அரசாணையை ரத்து செய்து கடந்த 2004-ம் ஆண்டு தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு செய்த மேல்முறையீட்டு மனுவும் கடந்த 2011-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. ஆனால், 1989-ம் ஆண்டு அரசாணையை காட்டி, எங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. பதவி உயர்வு இதுகுறித்து விரிவான கோரிக்கை மனுவுடன் எங்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி மனுக்களை கொடுத்தோம். ஆனால், எங்களது மனுக்களை உயர்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பரிசீலிக்காமல் உள்ளனர். எனவே, எங்களது மனுக்களை பரிசீலித்து, தகுந்த பதவியை உயர்வை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதி பி.ராஜேந்திரன் விசாரித்தார். பின்னர், அவர் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரர்கள் கடந்த டிசம்பர் மாதம் கொடுத்த கோரிக்கை மனுவை தமிழக உயர்கல்வித்துறை செயலாளர், தொழில்கல்வித்துறை இயக்குனர், இணை இயக்குனர் ஆகியோர் சட்டப்படி பரிசீலித்து, தகுந்த உத்தரவினை 3 மாதங்களுக்குள் பிறப்பிக்கவேண்டும்' என்று கூறியுள்ளார்.

No comments: