Tuesday, 24 January 2017

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது

சட்டப்பேரவையில் மசோதா ஒருமனதாக நிறைவேறியது | தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் வகையில், கடந்த 21-ம் தேதி அவசரச் சட்டம் பிறப்பிக் கப்பட்டது. இது தொடர்பான மசோதா சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, ஆளுநர் உரையுடன் நேற்று காலையில் தொடங்கியது. இதில், திருத்தச்சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்தார். தொடர்ந்து, நேற்று மாலையே சிறப்பு நிகழ்வாக சட்டப்பேரவை கூடியது. இதில், 1960-ம் ஆண்டு மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இந்த சட்ட முன்வடிவு கொண்டு வரப்படுவதற்கான சூழல் குறித்து அதில் கூறியிருப்பதாவது: ஜல்லிக்கட்டு நடத்துவது மிருக வதை தடுப்புச் சட்டத்தை மீறுவ தாகும் என உச்ச நீதிமன்றம் தீர்ப் பளித்தது. தமிழகத்தின் பெரும் பாலான பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்வானது பாரம் பரியம், பண்பாட்டை பாதுகாக்கக் கூடியதாகவும், சொந்த மண்ணின் காளைகள் உயிர் வாழ்வதையும், அவை தொடர்ந்து நன்றாக இருப்பதையும் உறுதி செய்கிறது. இதை கருத்தில் கொண்டு, மத்திய அரசின் சட்ட வதிமுறைகளில் இருந்து ஜல்லிக்கட்டை விலக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதனால், அச்சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவெடுத்தது. அப்போது, சட்டப்பேரவை அமர்வு இல்லாத தால், சட்டத் திருத்த முடிவுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

No comments: