Tuesday, 31 January 2017

JIPMER MBBS 2017 ENTRANCE EXAM | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர ஜூன் 4-ம் தேதி நுழைவுத் தேர்வு. மார்ச் 27-ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம்.


JIPMER MBBS 2017 ENTRANCE EXAM | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர ஜூன் 4-ம் தேதி நுழைவுத் தேர்வு. மார்ச் 27-ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம். | ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ்., டி.எம்., எம்.சிஎச்., ஃபெல்லோஷிப் படிப்புகள் உள்ளன. மேலும், பி.எஸ்சி., பிஏஎஸ்எல்பி, பிபிடி, எம்.எஸ்சி., எம்பிஎச், பிஎச்.டி., ஆகிய படிப்புகளும் உள்ளன. இவற்றுக்கான நுழைவுத் தேர்வு, கலந்தாய்வு ஆகிய தேதிகளை கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை மாதம் தொடங்கும் எம்.டி.,எம்.எஸ்., டி.எம்., எம்.சிஎச்., ஃபெல்லோஷிப் படிப்புகளுக்கு மே 21-ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வில் பங்கேற்க மார்ச் 13-ஆம் தேதி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதேபோல, ஜூலை மாதம் தொடங்கும் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு மார்ச் 27 முதல் மே 3-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆகஸ்டு மாதம் தொடங்கும் பி.எஸ்சி., பிஏஎஸ்எல்பி, பிபிடி, எம்.எஸ்சி., எம்பிஎச், பிஎச்.டி. படிப்புகளுக்கு ஜூன் 25-ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும். இதற்கு ஏப்ரல் 24 முதல் மே 24 வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 2018 ஜனவரி மாதம் தொடங்கும் எம்.டி.,எம்.எஸ்., டி.எம்., எம்.சிஎச். படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறும். இதற்கு செப்டம்பர் 11 முதல் அக்டோபர் 18 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஜூலை மாதம் தொடங்கும் வகுப்புகளுக்கு ஜூன் 14 முதல் ஆகஸ்டு 23-ஆம் தேதி வரை படிப்படியாக கலந்தாய்வு நடைபெறும். ஆகஸ்டு மாதம் தொடங்கும் வகுப்புகளுக்கு ஜூலை 17 முதல் ஆகஸ்டு 31 வரை கலந்தாய்வு நடைபெறும். 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் படிப்புகளுக்கு டிசம்பர் 13-ஆம் தேதி முதல் 2018 ஜனவரி 31-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்வையிடவும் என அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

TRB