Tuesday, 28 February 2017

மார்ச் 3-வது வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்? அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர வாய்ப்பு.

மார்ச் 3-வது வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்? அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர வாய்ப்பு | தமிழக அரசின் பட்ஜெட் மார்ச் 3-வது வாரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதில், அரசு ஊழியர்களுக் கான ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்படும் என தெரிகிறது. தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர், கடந்த ஜனவரி 23-ம் தேதி தொடங்கியது. அன்று பேரவை யில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரை யாற்றினார். பிப்ரவரி 1-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடந்தது. அப்போது முதல்வராக .பன்னீர் செல்வம் இருந்தார். அதன்பிறகு அதிமுகவில் எழுந்த பிரச்சினைகளால் தமிழக அரசிய லில் பரபரப்பும் குழப்பமும் நிலவி யது. பின்னர் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி கடந்த 16-ம் தேதி பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அப்போது, முதல்வரிடமே நிதித் துறை இருந்தது. கடந்த 23-ம் தேதி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. முதல்வரிடம் இருந்த நிதித்துறை, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவை யின் பட்ஜெட் கூட்டத் தொடர் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஜெயக்குமாரிடம் நிதித் துறை ஒப்படைக்கப்பட்ட பிறகு பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இது தொடர்பாக நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ''கடந்த வாரம் துறைகள் வாரியாக முக்கிய தகவல்கள் பெறப்பட்டன. அவற்றை தொகுத்து முழுமையான பட்ஜெட் தயாரிக்கப்படும். இப்பணி கள் சில தினங்களில் முடியும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் குறித்து முதல்வர் முடிவு செய் வார். வழக்கமாக மார்ச் இரண்டாம் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு மார்ச் 3-ம் வாரத்தில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது'' என்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் தனது அரசு மீதான பெரும்பான்மையை நிரூபித்து கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துள்ளார். 500 மதுக்கடைகள் மூடல், பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம், மகப்பேறு உதவித் தொகை உயர்வு என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்புகளுக்கு அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட வேண்டும். மேலும், பல்வேறு திட்டங்களுக்கான தொடர் நிதியும் ஒதுக்கப்பட வேண்டியுள்ளது. மேலும் தற்போதுள்ள அரசியல் சூழலில், இந்த அரசு மீது மக்களி டையே அதிருப்தியும் எதிர்ப்பும் உள்ளது. இதை மாற்றுவதற்காக பொதுமக்களை குறிப்பாக பெண் களை கவரும் வகையில், பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டிய அவசியமும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஓய்வு வயது உயர்வு இந்த பட்ஜெட்டில் அரசு ஊழி யர்களுக்கான ஓய்வு வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தும் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இது தொடர்பாக, அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியுள்ளது. தற் போது அரசு ஊழியர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரை ஊதியத்தை நம்பியுள்ளனர். இதை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரையை ஏற்று செயல்படுத்தினாலும், அடுத்த 4 மாதங்களில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு நிதி தேவைப்படும். ஏற்கெனவே தமிழக அரசுத் துறைகளில் 3.5 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவை நிரப்பப்படாத சூழலில், தமிழக அரசின் இந்த முடிவு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என அரசு ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு ஓய்வுபெறும் வயதை கடந்த 1998-ல் 60 ஆக உயர்த்தியது. இதைத் தொடர்ந்து தமிழக அரசும் உயர்த்த உள்ளதாக பலமுறை கூறப்பட்டது. ஆனால், உயர்த்தவில்லை. தற்போது ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தும் அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறும் என தகவல் கசிந்துள்ளது. இது ஓய்வு வயதை நெருங்குபவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். அவர்கள் ஆதரிப்பார்கள். அதே நேரம் வயது உச்சவரம்பை நெருங்கி அரசுப் பணிக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு பாதகமான முடிவாகும். வரும் 2018 முதல் 2020 வரை சுமார் 2.5 லட்சம் பேர் வரை பணி மூப்பால் ஓய்வு பெறவுள்ளனர். இவர்களுக்கு 2 ஆண்டுகள் நீட்டிப்பதன் மூலம், அரசுக்கு ஒரு மடங்கு கூடுதல் செலவு ஏற்படும். மேலும், வரும் ஆண்டுகளில் பணியாளர் தேர்வும் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. இது இளைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை மறுப்பதாகும். எனவே, இந்த முடிவை அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நீட் தேர்வு அடிப்படையில் கால்நடை மருத்துவப் படிப்புக்கும் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை கால்நடை மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு

நீட் தேர்வு அடிப்படையில் கால்நடை மருத்துவப் படிப்புக்கும் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை கால்நடை மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு | நீட் தேர்வு அடிப்படையில் கால் நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டின் 15 சதவீதம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி களில் உள்ள கால்நடை மருத் துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கான (பி.வி.எஸ்சி-.ஹெச்) இடங்களில் 15 சதவீதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் (விசிஐ - VCI), அகில இந்திய கால் நடை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு (AIPVT) மூலம் 15 சதவீதம் இடங்கள் நிரப்பப்படுகிறது. மீதமுள்ள, மாநில அரசுகளுக்கான 85 சதவீதம் இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் கால்நடை மருத்துவப் படிப்பு இடங் களுக்கு, இந்த ஆண்டு அகில இந்திய கால்நடை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு நடக் காது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்-NEET) மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வரும் மே மாதம் 7-ம் தேதி நடத்துகிறது. அந்த நீட் தேர்வில் தகுதிப் பெறும் மாணவர்களைக் கொண்டு 15 சதவீதம் கால்நடை மருத்துவ படிப்பு இடங்கள் நிரப்பப்படும் என்று இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது. இதன்மூலம் கால்நடை மருத் துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சேர உள்ள மாணவர்கள் நீட் தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை உட்பட 4 கல்லூரிகளில் 320 இடங்களில் மாநில அரசுக்கு 272 இடங்கள் உள்ளன. இவற்றில் 48 இடங்கள் (15 சதவீதம்) அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப் படுகிறது. இந்த 48 இடங்களும், இந்த ஆண்டு நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதனால் மாண வர்களும், அவர்களின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடுமுழுவதும் அரசு மருத்து வம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப் படும் 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு (AIPMT) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது. மீதமுள்ள மாநில அரசுக்கான 85 சதவீதம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டது. கடந்த ஆண்டு 15 சதவீதம் இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் இடங்கள் மற்றும் மாநில அரசுக்கான 85 சதவீதம் இடங்களுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போன்ற நடைமுறையை பின்பற்றி கால்நடை மருத்துவப் படிப்புக்கும் நீட் தேர்வு கொண்டு வரப்படுகிறது. முதல்கட்டமாக 15 சதவீதம் கால்நடை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் மீதமுள்ள 85 சதவீதம் கால்நடை மருத்துவப் படிப்பு இடங்களுக்கும் நீட் தேர்வு கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் | எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வுக்கு விண் ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும். நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட் - NEET) மத்திய அரசு கட்டாயமாக்கி யுள்ளது. இதையடுத்து, இந்த ஆண்டு 'நீட்' தேர்வு மே மாதம் 7-ம் தேதி நடைபெறும். மாணவர்கள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்திருந்தது. அதன்படி 'நீட்' தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க மார்ச் 1-ம் தேதி (நாளை) கடைசி நாள் என சிபிஎஸ்இ தெரிவித்தி ருந்தது. மார்ச் 1-ம் தேதி நாளை வர உள்ள நிலையில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஒப்புதல் கிடைக்குமா? இதற்கிடையில், 'நீட்' தேர்வில் இருந்து தமிழக அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி களுக்கு விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதா சட்டப் பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அந்த சட்ட மசோதா ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி பிரதமரிடமும், குடியரசுத் தலைவரிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமரிடம் வலியுறுத்தினார். ஆனால், 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரும் சட்ட மசோதாவுக்கு இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக்கூட வாகனங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தவேண்டும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கை

பள்ளிக்கூட வாகனங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தவேண்டும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.. சுற்றறிக்கை | பள்ளிக்கூட வாகனங்களில் மாணவர்கள் பாதுகாப்புக்காக சி.சி.டி.வி. கேமரா பொருத்தவேண்டும் என்று சி.பி.எஸ்.. வாரியம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. சி.சி.டி.வி. கேமரா சமீபத்தில் வட மாநிலத்தில் பள்ளிக்கூட வாகனம் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி பல மாணவர்கள் உயிரிழந்தனர். இதையொட்டி சி.பி.எஸ்.. என்ற மத்திய கல்வி வாரியம் இந்தியாவில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.. பள்ளிகள் மற்றும் உரிமையாளர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை விடுத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- * மாணவர்களை ஏற்றி செல்லும் பஸ் உள்ளிட்ட பள்ளிக்கூட வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி சி.சி.டி.வி. கேமரா கட்டாயம் பொருத்தி, அந்த கேமரா எந்த நேரமும் செயல்படவேண்டும். * பள்ளிக்கூட வாகனங்கள் அனைத்தும் மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடித்து, பள்ளிவாகனம் என்று பஸ்சின் முன்னும், பின்னும் பார்த்த உடன் பளிச்சென்று தெரியும் படி எழுத வேண்டும். * பஸ்சின் கதவுகள் சரியாக மூடும்படி இருக்கவேண்டும். ஜி.பி.எஸ். கருவி * பஸ் எங்கு செல்கிறது என்பதை கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவி பொருத்துதல். * மாணவர்களுக்கு இருக்கைகள் பாதுகாப்பான முறையில் அமைத்தல். * பஸ்களில் தீ அணைப்பு கருவிகள் 2 இருப்பதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்தல். * மணிக்கு 40 கிலோ மீட்டருக்கு அதிகமாக பஸ்கள் செல்லாத வகையில் அதற்கான கருவி பொருத்தவேண்டும். கதவுகள் * அவசர நேரத்தில் வெளியே மாணவர்கள் வருவதற்கு அதற்கான கதவுகள் அமைக்கவேண்டும். * பஸ்சுக்காக பள்ளி நிர்வாகம் தனி செல்போன் வைக்கவேண்டும். அந்த போனில் அவசர காலத்தில் பஸ்சின் டிரைவர் அல்லது கண்டக்டர் தொடர்பு கொள்ளவேண்டும். * பஸ்சில் அவசர கால உதவி பெட்டி அவசியம் தேவை. * மாணவர்கள் அவர்களின் புத்தக பைகளை பாதுகாப்பாக பஸ்சில் வைக்க சரியான இடம் ஒதுக்குதல். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழுக்கு பதில் தாய்மொழியில் தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழுக்கு பதில் தாய்மொழியில் தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு | 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடப்பிரிவில் தமிழுக்குப் பதிலாக தங்களது தாய் மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கட்டாய தமிழ் தமிழக அரசு, கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கடந்த 2006-ம் ஆண்டு கொண்டு வந்தது. இதன்படி, '2006-ம் ஆண்டு முதல் மொழிவாரியான சிறுபான்மை பள்ளிக் கூடங்கள் உட்பட அனைத்து வகையான பள்ளிக்கூடங்களிலும் முதல் மொழிப் பாடமாக தமிழை கண்டிப்பாக கற்பிக்க வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது. இந்த சட்டத்தின்படி, கடந்த 2006-ம் ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம், 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதினார்கள். அப்போது, சில மாணவர்கள் தங்களுக்கு தமிழ் பாடம் நடத்தப்படவில்லை என்றும் இதனால் பொதுத் தேர்வில் தமிழுக்கு பதில் முதல் மொழிப்பாடமாக தங்களது தாய்மொழியான, தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது ஆகிய மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். தாய்மொழியில் தேர்வு இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர், 'மொழி வாரியான சிறுபான்மை பள்ளிக்கூடங்களில் படிக்கும் இந்த மாணவர்கள், தங்களது தாய்மொழியான தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது ஆகிய மொழிகளை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்' என்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டார்கள். இதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்களது தாய் மொழியில் தேர்வு எழுதினார் கள். இந்த ஆண்டும் இதே கோரிக்கையுடன், மொழி வாரியான சிறுபான்மை பள்ளிகள், மாணவர்கள் என்று பலர் வழக்கு தொடர்ந்தனர். மீண்டும் அனுமதி இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பிலும், மனுதாரர்கள் தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டார்கள். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், '10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடப்பிரிவில் தமிழுக்குப் பதிலாக தங்களது தாய் மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் அனுமதி வழங்கவேண்டும்' என்று தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 26 February 2017

TIIC RECRUITMENT 2017 | Tamil Nadu Industrial Investment Corporation Ltd-Chennai | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - Senior Officer | NO. OF VACANCIES -47 | LAST DATE : 03.03.2017 | DATE OF EXAMINATION : MARCH/APRIL 2017

>>>>>>>
§DATE OF NOTIFICATION15.02.2017
§EMPLOYMENT TYPE:Govt Job
§APPLICATION:ONLINE
§WEBSITE:https://www.tiicrecruitment.in/
§NAME OF THE POST:முதுநிலை அலுவலர்
§EDUCATIONAL QUALIFICATION:REFER PROSPECTUS
§VACANCIES:47
§SALARY:Rs.15600-39100 + Grade Pay 5400
§SELECTION PROCEDURE:EXAM-OBJECTIVE TYPE OMR METHOD
§LAST DATE:03.03.2017
§DATE OF EXAMINATION:MARCH/APRIL 2017

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE